அபிராமி அந்தாதி விளக்கவுரை 3மரபு விக்கி இருந்துபாடல் ஒன்பது கருத்தன, எந்தைதன் கண்ணன, வண்ணக் கனகவெற்பின் பெருத்தன, பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேர் அருள்கூர் திருத்தன பாரமும் ஆரமும் செங்கைச் சிலையும் அம்பும் முருத்தன மூரலும் நீயும் அம்மே வந்து என் முன் நிற்கவே
விளக்கம் எமது தந்தையான சிவபெருமானின் கண்ணாகவும், கருத்தாகவும் இருப்பவளே... (இவ்விடத்துக் கரிய நிறங்கொண்டவளே என்றும் பொருள் பகர்வோர் உண்டு) வண்ணம் நிறைந்த பொன்மலையான மேருமலையைவிட பெரிதானதும், தாயைச்சிறிது நேரம் பிரிந்து அழுத
கருத்தன எந்தைதன் கண்ணன... இப்பதத்திற்கு விளக்கமாக ஒவ்வொருவரும் ஒவ்வொன்று கூறுவதுண்டு. கரிய நிறங்கொண்ட துர்க்கையே... என் தந்தையான சிவனின் கண்ணாக இருப்பவளே என்றும் பொருள் பகர்வர். உலகின் தாய் அல்லவா என் அபிராமித் தாய்... உலகில்
அன்னையின் புன்னகையைப் பற்றி அவர் செய்த வர்ணனை ரசிக்கத் தக்கது. *முருத்தன மூரலும்.... *மொட்டொன்று விரிவதைப் போன்ற
பாடல் பத்து. நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை என்றும் வணங்குவது உன் மலர்த் தாள் எழுதாமறையின் ஒன்றும் அரும்பொருளே அருளே உமையே இமயத்து அன்றும் பிறந்தவளே அழியா முத்தி ஆனந்தமே
அருளே வடிவான உமையவளே... அபிராமித் தாயே... அன்று இமயத்து அரசன் இமவான் பெற்றெடுத்த செல்வமே... எழுதப்படாத வேதங்களில் ஒன்றி நிற்கும் அரும்பொருளே. என்றும் அழியாத முக்தி ஆனந்தமாக விளங்குபவளே... நான் நிற்கும் பொழுதும், அமரும் பொழுதும், கிடக்கும் பொழுதும், நடக்கும் பொழுதும், எல்லா நிலைகளிலும் நான் நினைப்பது உன்னைத் தான்.... நான் வணங்குவதோ உனது மலர்ப்பாதங்களையே... இமவான் செய்த பேறு அவனுக்கு உமையவள் மகளாகப் பிறந்தது. ஆகையால்தான் அவள் மலைமகளென்று பெயர் பெற்றாள். மலையரசன் பெற்றெடுத்த மலைமகளே... என்று அபிராமிப் பட்டர் அன்னையை விளிக்கின்றார். எழுதா மறையின் ஒன்றும் அரும்பொருளே....
என்றும் எழுதாத மறைபொருள் அன்னையின் திருநாமமே... அந்தண குலத்திற்பிறந்து அன்னைக்குரிய மந்திரங்கள் ஓதுவோரை மட்டும்தான் அன்னை காத்தருள்கிறாளா?? இல்லவே இல்லை.. யாரொருவர் அவள் திருநாமத்தை கொச்சைமொழியில் உச்சரித்தாலும் ஓடிவந்து அருள்வது அன்னையின் பெருங்கருணை அல்லவா?? அத்தகைய எழுதா மறையில் ஒன்றியிருக்கும் அன்னையே... அரும்பொருளே ...அரும்பொருளே என்று அன்னையை அபிராமிப் பட்டர் அழைக்கின்றார்.. அழியாத முக்தி நிலையானவளே..... நான் நிற்கும் போதும் என் சிந்தையெல்லாம் உன் நினைவுதான். நான் அமரும்போதும் என் சிந்தையெல்லாம் உன் நினைவுதான். நான் படுத்திருக்கும்போதும் என் சிந்தையெல்லாம் உன் நினைவுதான். நான் நடக்கும்போதும் என் சிந்தையெல்லாம் உன் நினைவுதான். என்று தனது எல்லா நிலைகளிலும் அன்னையின் நினைவுகளே தன் சிந்தையில் குடிகொண்டிருப்பதாக அபிராமிப் பட்டர் தெரிவிக்கின்றார். மேலும் நான் என்றென்றும் வணங்குவது உன் மலர் போன்ற பாதங்களைத்தான்..... அன்னையே..... எனக்கு அருளிச்செய்....... என்று பாடுகிறார் அபிராமிப் பட்டர். தொடரும் பாடல்களுக்கு விளக்கம் அடுத்ததாக. பாடல் பதினொன்று
விளக்கம் :
அபிராமித்தாயே... நீயே என் ஆனந்தமாய்த் திகழ்கிறாய்... என் அறிவாய்த்திகழ்கிறாய்.... என்னுள் நிறைந்த அமுதமுமாய்த் திகழ்கிறாய்... வானமே எல்லையான வடிவானவளாய் விளங்குகிறாய்... ரிக், யசூர், சாம, அதர்வனமெனப்படும் நான்கு மறைகளுக்கும் எல்லையாக இருப்பது அனைவருக்கும் சரணாகதியை அளிக்கும் உனது பாதங்களே... அப்பாதங்கள் வெண்ணிறக் காட்டைத் தனது ஆடற்கலைக்கு அரங்கமாய்க்
எங்கள் அபிராமித் தாயே... எனக்கு ஆனந்தம் அளிப்பவளும் நீயே... என் ஆனந்தமும் நீயே.. பாருங்கள் அபிராமிப் பட்டரின் பக்தியை....! தன் ஆனந்தமே அன்னைதான் என்று பகர்கிறார்... ஆனந்தமாகவும் தனது அறிவாகவும், நிறைந்த அமுதமாகவும் அம்மையே இருப்பதாகக் குறிப்பிடுகிறார். மேலும் வானந்தமான வடிவுடையாள்... வானமே அந்தமான வடிவுடையாள்... வானுக்கு அந்தமுண்டோ???? அதே போல் தாயே உன் வடிவழகிற்கு எல்லையுண்டோ..... அன்னையின் அழகிற்கெல்லையில்லை என்பதை எத்தனை அழகிய சொற்கள் கொண்டு பாடுகிறார்... தின்னத் தின்ன தெவிட்டாத தமிழமுது அபிராமிப் பட்டரின் அபிராமி அந்தாதி... மறை நான்கினுக்கும் தான் அந்தமான சரண அரவிந்தம் .... ரிக், யசூர், சாம, அதர்வணம் எனப்படும் நான்கு மறைகளுக்கும் எல்லையாக , முடிவாக இருப்பது எல்லோருக்கும் சரணமளிக்கும் உன் பொற்பாதங்கள்....
இப்பாதங்கள்... தவள நிறக் கானம் .... வெண்மை நிறக் காடு... வெண்மை நிறக்காடு யாது??? அப்பன் சிவன் ஆடும் காடு எது??? பிணங்கள் எரியும் சுடுகாடு... பிணங்களின் சாம்பல்களாலான வெண்மை நிறமான சுடுகாட்டைத் தம் ஆடரங்காம் - தனது ஆடற்கலைக்கு அரங்கமாக்கிக்
பாடல் பன்னிரெண்டு
விளக்கம்.
ஏழுலகும் பெற்றெடுத்த என் அபிராமித்தாயே... என்றென்றும் நான் பாடுவது உன் புகழைத்தான்... நான் கற்பது உன் திருநாமமே... நான் மனங்கசிந்து பக்தி செய்வதோ,பக்தியால் பாடுவதோ... உனது இரு திருவடித் தாமரைகளைத்தான்... பகலும் இரவும் நான்
எப்போதும் அன்னையின் நினைவாலேயே அவர் நின்றிருப்பதால் அவருக்கு வேறேதும் தோன்றவில்லை... அதனால்தான் பலர் அவரைப்
--Geetha Sambasivam 09:19, 12 பெப்ரவரி 2011 (UTC) |

