அபிராமி அந்தாதி விளக்கவுரை 17மரபு விக்கி இருந்து. தமிழகத்தில் ஞானாதீஸ்வரர் எனும் திருப்பெயர் கொண்ட ஒரே திருத்தலம்.. தஞ்சை பெரிய கோவிலுக்கும் மூத்த ஆலயம். ஆலயத்தைப் பற்றி மேலும் சில குறிப்புகளைத் தந்துவிடுகின்றேன்.. இவ்வாலயத்தில் தென்படும் கல்வெட்டுக்கள் 36. படிக்கப்பட்டவை 17 மட்டுமே.. மற்றவை யாராலும் புரிந்து கொண்டு படித்தறியப்படவில்லை. அரசாங்கமும் அதற்குரிய முயற்சியினை மேற்கொள்ளவில்லை. இந்த பூமி வந்தோர்க்கெல்லாம் ஞானத்தை அள்ளி வழங்குவதால் ஞானாதீஸ்வரர் என்றழைக்கப் பட்டார். ஞானத்திற்கு ஆதியான ஈசுவரன் எனும் பொருள் படும் பெயர் அது. அருணகிரி நாதரின் திருப்புகழில் போற்றப்படும் முருகன் சன்னிதிகளில் "வயிரவி வனம்" என்று குறிப்பிடப்படும்
திருத்தலம் இவ்வைரவமே ஆகும்.. மழவச் சிற்றரசர்கள் இவ்வாலயத்திற்கு 26 உற்சவத் திருமேனிகளை வழங்கியிருக்கின்றனர்.
ஆயினும் பல்வேறு திருட்டுச் சம்பவங்களால் காணாமல் போய் 1951ல் 16 உற்சவத் திருமேனிகள் மட்டுமே இருந்திருக்கின்றன. பின்னர் 1969ல் 3 சிலைகள் காணாமல் போய் இருக்கின்றன. பின்னர் 1984ல் களவாடப்பட்ட 9 சிலைகளில் தூக்கிச் செல்ல இயலாத அளவுக்குக் கனமான 4 சிலைகள் கோயிலுக்கு அருகில் புதைக்கப் பட்டு இருந்தது கண்டுபிடிக்கப் பட்டு மீட்கப் பட்டன. பின்னர் 1994ல் மேலும் 2 சிலைகள் மீட்கப் பட்டன. தற்போது 10 உற்சவத் திருமேனிகள் மட்டுமே உள்ளன.. ஆலயத்தின் மொத்தச் சொத்துக்களின் மதிப்பு என்ன என்பது யாருக்குமே
இதன் செய்தி யாராலும் புரிந்து கொள்ள இயலவில்லை.. எனவே அச்செய்தியின் படி ஆலயத்தில் எங்காவது மறைக்கப் பட்டிருக்கலாம் என்ற ஐயமும் உள்ளது.. 1961 அரசாங்க ஆவணத்தின் படி ஞானாதீஸ்வரருக்குச் சொந்தமாக 1 ஏக்கர் 84 செண்ட் நஞ்சை, 50 ஏக்கர் 35 செண்ட் புஞ்சை, 45 செண்ட் தென்னந்தோப்பு, ஒரு நந்தவனம், ஒரு வீடு ஆகியவை இருப்பதாகத் தெரிவிக்கின்றது. ஆனால் அவை தற்சமயம் யாரால் அனுபவிக்கப் பட்டு வருகின்றது என்பதும் தெரியவில்லை.. சிவனடியார்களின்... அன்னை சிவகாமியின் அன்பர்களின் பெருமுயற்சியால் 07.12.1994 அன்று ஆலயத்துக்குக் கும்பாபிடேகம் நடந்தது.. ஆலயம் புனரமைக்கப் பட்டது.. அதன்பின்னரே ஆலயத்திற்கு பக்தர்களின் வருகை ஆரம்பமானது..அனைவரும் வைரவம் சென்று அன்னை சிவகாமியையும் ஐயன் ஞானாதீஸ்வரரையும் வழிபட்டு வளம் பெறுவோம்..
இங்குள்ள சிவகாமி அன்னையின் திருமேனி மிகவும் பழமையாகி விட்டதால் அதன் மூக்கின் ஒருபுறம் சிறிதளவு தேய்ந்து விட்டது.. இதனால் அத்திருமேனியை மாற்றிவிட முயற்சி மேற்கொள்ளப் பட்டது. அன்றைய தினமே அன்னை சிவகாமி ஆலய குருக்களின் கனவில் தோன்றி "உன் தாய் வயதாகி விட்டாள் என்பதற்காகத் தாயை நீ மாற்றிவிடுவாயா?" என்று கேட்டாளாம். எனவே அந்த முடிவு கைவிடப்பட்டது.. இன்றும் சற்று உற்றுக் கவனித்தால் அன்னையின் திருமேனியில் அந்த பழைமையான அழகினைக் காணலாம்...
பாடல் அறுபத்தொன்று
விளக்கம்
மாநகராட்சி வண்டி வந்து அந்நாய்க்குட்டிகளைத் தூக்கிச் செல்லும் காட்சியைக் கண்டு அந்தத் தாய் நாய் சும்மா இருக்குமா? நாம் நமக்கென்ன என்று இருப்போம். அல்லது தெரு சுத்தமாகிறதே என்று மகிழ்வோம்.. ஆனால் அந்தத் தாய் நாய்.?? குரைக்காதா?? விரட்டாதா?? நாயாக இருப்பினும் அதற்கும் ஒரு தாய் உண்டல்லவா? அத்தாயின் அன்பு தன் குட்டி நாய்மீது குறைவதுண்டோ? இன்னொரு உதாரணம்.. தெருவிலே பிச்சை எடுக்கின்ற அழுக்கு உடைகளை அணிந்த சிறு குழந்தைகளைக் காணுங்கள். நம் மகிழ்வுந்தை நோக்கி அவர் வரும் வேளை, நாம்
"தாயே" அபிராமி அன்னையே... "மலைமகளே" மலையரசன் இமவான் பெற்றெடுத்த மலைமகளே... "செங்கண்மால் திருத்தங்கச்சியே" சிவந்த கண்களையுடைய திருமாலின் தங்கையே..."பவள வாய் கமலச் செங்கண்" என்னும் ஆழ்வார்ப் பாசுரம் நினைவுக்கு வந்தது... தங்கையை தங்கச்சி என்று சொல்லலாம். அதென்ன திருத் தங்கச்சி..?? ஆதிபராசக்தியாக திருமாலைப் படைத்த தேவிதான் மலைமகளாக அவதரித்து ஈசனை மணந்து கொண்டபோது திருமாலின் தங்கையாகின்றாள். அச்சமயத்தில் அவளுக்குரிய மதிப்பை ஏற்றியுரைக்க "திருத்தங்கச்சி" என
நம் கிராமத்தில் ஆடுகள் நிறைய வைத்திருப்போர் அவ்வாடுகளை மந்தையாக மேய்ப்பதற்கு அழைத்துச் செல்வதுண்டு.. ஆனால் ஒரேயொரு ஆடு வைத்திருப்போர், அதை ஒரு கயிற்றால் கட்டி அக்கயிற்றைப் பிடித்துக் கொண்டு, மேய்ப்பதற்கு அழைத்துச் செல்வார்கள்.. பெருநகரில் அதிகாலை, சங்கிலியால் நாயைப் பிடித்துக் கொண்டு நடைப் பயிற்சி மேற்கொள்ளும் அன்பர்களைக் கண்டால் எனக்கு, கிராமத்துக்
. யாரையாவது திட்டும்போது "அட பேயா" எனத் திட்டுவதுண்டு.. எங்காவது ஏமாந்து வந்து நின்றால், " நீ பேயன் தான.." என்று சொல்லும் வழக்கும் உண்டல்லவா? பேயேன் என்றால் அறிவில்லாதவன்... பேயைப் போன்றவன்... என்று பொருள் கொள்க.."நின்னை உள்ள வண்ணம்" உன்னை உள்ளபடியே...."அறியும் அறிவு தந்தாய் "அறிந்து கொள்ளும் அறிவினை எனக்குத் தந்தருளினாய்.. "என்ன பேறு பெற்றேன்" இதனைப் பெறுவதற்கு நான் என்ன பேறு பெற்றேனோ...?
பாடல் அறுபத்திரண்டு
விளக்கம்
ஈசன் பொன் நிறைந்த மேருமலையை வில்லாக வளைத்தான்..முப்புரங்களை அழித்தான்.. மதங்கொண்ட யானையின் தோலையுரித்து தன்
அபிராமி அன்னையே... ஆதிபராசக்தியே... "கோகனகச் செங்கைக் கரும்பும் மலரும் " சிறந்த பொன்னையொத்த உனது சிவந்த திருக்கரங்களில் நீ ஏந்திய கரும்பு வில்லும், மலர் அம்புகளும்.. "எப்போதும் என் சிந்தையதே" எச்சமயமும் என் சிந்தையில் நீங்காதிருக்கின்றன....அன்னையை உன் உருவம் என் சிந்தையில் நீங்காது எனக் குறிப்பிடுகின்றார். ஏன் கரும்பு வில்லையும், மலரம்புகளையும் குறிப்பிடவேண்டும்..? ஏற்கெனவே எழுதித் தயாரித்தது திரு மு.கந்தசாமி நாகராஜன்
--Geetha Sambasivam 13:32, 20 மார்ச் 2011 (UTC)
|


