அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 9:1மரபு விக்கி இருந்துஇன்னம்பூரான்
“ ...தீர்க்கதரிசிகளின், முன்னோரின் ஞானத்தை நாடும் அறிவாளி, அன்னாரின் மேற்கோள்களையும், கதைகளையும் நன்கு ஆராய்ந்து அவற்றின் உட்பொருள் காண விழைவான். மர்மங்களை தேடுவான். நுட்பங்களை அனுபவிப்பான். தரணி முழுதும் அலைந்து, நல்லதும், கெட்டதும் காண்பான்...” ஜெனிவா நகரத்தில் CERN என்ற விஞ்ஞான மையம் இருக்கிறது. ஜூன் 18, 2004 அன்று அங்கு, இந்திய அரசு பரிசளித்த பொன்னம்பலவாணன் நடராஜரின் சிலை நிறுவப்பட்டது. அணுவின் உள்ள நுன்னணுக்களின் நடனத்திற்கு, சிவபெருமானின் ஆனந்தத்தாண்டவத்தின் ஆசி கூற. ஆசி & விளக்கம்: “இத்தனை தெளிவாக இறையாண்மையை சித்திரித்த சமயத்தையோ, நுண்கலையையோ, யாம் கண்டதில்லை.” ~ ஆனந்த குமாரஸ்வாமி வம்சபரம்பரை மண்ணின் வாசனையை போல. இன்றைய தலைமாந்தனின் தாத்தா அந்தக்காலத்திலேயே அரசியல் பிரமுகர். கொழும்பு நாடாளுமன்றத்தின் நான்கு மூலை காவலர்களின் சிலைகள் இவரது மாமன்களின் அருமை சாற்றுகின்றன. தந்தையோ முதல் முதலாக ‘ஸர்’ விருது பெற்ற ஆசியர். பிரிட்டீஷ் பார்லிமெண்டில் அங்கத்தினராக இருந்த சிவக்கொழுந்து. அன்னையோ ராணி விக்டோரியாவின் பாங்கி;ஆங்கிலேயர். இவர் முதலில் பூமியை தான் தோண்டினார்; பின்னர் ககனத்தில் பறந்தார். 36 மொழிகளில் வித்தகர். கலையார்வமும், மரபின் மாண்பும், கலைப்பொருள் போற்றுதலும் இந்த கலை யோகியின் பரிமாணங்களில், சில. விளையும் பயிர் முளையிலே என்பார்கள். 12 வயதில் ஐஸ்லாந்திலிருந்து வந்தவருடன், அவரின் மொழியிலேயே பேசி, எல்லாரையும் வியப்பில் ஆழ்த்திய கலை யோகி ஆனந்த குமாரஸ்வாமி பிறந்த தினம், ஆகஸ்ட் 22, 1877. அவர் ஒரு விஞ்ஞானி. பூமித்தாயின் மடியிலிருக்கும் தாதுப்பொருள்களை பற்றி ஆய்வு செய்து, தொரியோனைட், செரண்டபைட் என்று இரு தாதுப்பொருட்களை சிங்களத்தில் கண்டு பிடித்தவர். இந்த அலைச்சல்கள் ஹிந்து/பெளத்த கலாச்சாரங்களை மேற்கத்திய அணுகுமுறை புரிந்து கொள்ளவில்லை என்பதை இவருக்கு உணர்த்தின. தென்னிந்தியாவிலும், அதே அதோகதி! இவ்வாறு கலாச்சாரங்களில் நுட்பங்களை ஆராயத்தொடங்கிய இந்த விஞ்ஞானி இந்திய/இந்தோனேசிய/ சிங்கள கலை சார்ந்த ஆராய்ச்சி நூல்களை வெளியிடவே, இவருடைய புகழ் உலகெல்லாம் பரவியது. வட இந்தியா முழுதும் அலைந்து, திரிந்து, அரிதான அபூர்வமான கலைப்பொருட்களை சேகரித்து, இந்திய அரசிடம் கொடுத்து பொருட்காட்சி மையம் அமைக்க வேண்டினார். அவர்கள் ஆதுரமாக அதை புறக்கணிக்கவே, வேறு வழியில்லாமல், இங்கிலாந்துக்கு எடுத்து சென்றார். நம்மூர் ஆசாமிகள் கொள்ளையடித்துப் போனான் என்று கூசாமல் சூளுரைப்பர். நல்ல வேளை! இந்திரா காந்தி மரபு காக்கும் மையம் இவரை போற்றுகிறது.
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 09:46, 9 செப்டெம்பர் 2011 (UTC) |
