அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 7

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

இன்னம்பூரான் 


சில சமயங்களில் கறார், மென்மை குணம், அச்சமில்லை, நகைச்சுவைக்கு பஞ்சமில்லாதவர்...’

~ பிஷப் டெஸ்மாண்ட் டுட்டு அவர்களை பற்றி, ஏற்கனவே அறிமுகமான நெல்ஸன் மண்டேலா கூறியது.

                                                                                                                    
267557.jpg

தென்னாஃப்பிரிக்காவின் மனசாக்ஷி என அறியப்படுகிற கிருத்துவ மத போதகரான டெஸ்மாண்டு டுட்டு 1931 வருடம் ஒரு குக்கிராமத்தில் பிறந்தவர். 1960 அந்த மதத்தொண்டு உறுதியானது. அன்னாட்டு மாதாக்கோயில்களின் கூட்டமைப்பின் காரியதரிசியாக 1979 இல் நியமனம் ஆனது. விரைவிலேயே, அஹிம்சைக்கும், நிறவெறியை ஒழிக்க, சர்வதேச பொருளியல் தடைகளுக்கும் ஆதரவாளர் என்று உலகமுழுதும் அறியப்பட்டவர். 1984 ல் இந்த சேவைக்காக, இவருக்கு நோபல் பரிசு கிடைத்தது. ஸெப்டம்பர் 7, 1986 அன்று கேப் டவுனின் ஆங்க்ளிகன் சர்ச் குமுகத்தில், ஆர்ச்பிஷப் உயர் பதவிக்கு தேர்ந்த்டுக்கப்பட்ட முதல் கறுப்பினத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிஷப் அய்யா அவர்களின் தலைமையில் நடை பெறும் இனவெறி எதிர்ப்பு ஊர்வலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள். 1994 ம் வருடம், வரலாறு காணாத புதுமையான தென்னாஃப்பிரிக்காவின் வாய்மை & சமாதான கமிஷனின் தலைமை ஏற்று, பொது மன்னிப்பு, சமன்பாடு ஆகிய உயர் பண்புகளை புண்ணாற்றும் களிம்பாக பயன்படுத்தினார். அப்பதவியிலிருந்து 1998 ல் ஓய்வு பெற்றபின்னும், இவரது அறிவுரையை உலகம் நாடி வருகிறது. மனித நேயத்திற்கு இவர் ஆற்றும் தொண்டு ஒரு முன் மாதிரி. சிக்கல்களை தெளிவாகவும்,கருணையுடன், நட்புரிமையுடன் தீர்ப்பதில், இவருக்கு இணை இவரே.


இணைத்திருக்கும் விழியத்தில் அவருடைய உடலும் பேசும் பரவசத்தைக் கண்டுக் களியுங்கள்.


உசாத்துணை:http://www.youtube.com/watch?v=IrCeVwwu0Xc
http://www.theelders.org/elders/desmond-tutu
http://www.youtube.com/watch?v=IrCeVwwu0Xc




--பவள சங்கரி திருநாவுக்கரசு. 11:12, 7 செப்டெம்பர் 2011 (UTC)











பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

இப்பக்கம் கடைசியாக 7 செப்டெம்பர் 2011, 11:16 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,698 முறைகள் அணுகப்பட்டது.