அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 26.1

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

இன்னம்பூரான் 


ஒரு உரையாடல்:அம்மாவும் & மகனும்: கிராமத்தில் திருவிழா. பெண்கள் எல்லோரும் வண்ண வண்ண சேலைகளிலும், அபரிமித அணிகலன்களுடனும்; நற்றாய் ஒருவளோ, கந்தலில்.
*
ம: அம்மா! எனக்கு முதல் வேலை கிடைத்து விட்டது. உனக்கு வேண்டியதை வாங்கி வருகிறேன்.
அ: உகந்த நேரம் வரவில்லை, மகனே! அத்தருணம் கூறுகிறேன்.
*
ம: அம்மா! வேலை உயர்வுகள் பல கிட்டின. எல்லாம் உன் ஆசி. உனக்கு நகை வாங்கப்போகிறேன். பிடித்ததை சொல்.
அ: எனக்கு மூன்று அணிகலன்கள் வேண்டும். நேரம் வரவில்லை. பொறு.
*
ம: அம்மா! நான் கை நிறைய சம்பளம் வாங்குகிறேன். உன்னதமான பதவிகள். சொத்து சேர்த்துவிட்டேன். இனி தாமதம் வேண்டாம். நீ விரும்பும் அணிகலன்கள் யாவை?


அ:உரிய வேளை வந்துவிட்டது. சொல்கிறேன். கேளு. இது குக்கிராமம். வெகு தொலைவில் தான் பள்ளிகள். சிறார்கள் கஷ்டப்படுகிறார்கள். இங்கு ஒரு பள்ளி அமைத்துக்கொடு. அதுவே அணிகலன் 1. இங்கு மருத்துவ வசதி இல்லை. கவனித்தாயா? ஒரு ஆரோக்கிய சாலை கட்டிக்கொடு. அது தான் அணிகலன் 2. கவனமாகக்கேள். நீ மேலும், மேலும் உன்னத பதவிகளை அடைவாய். யாராவது உன் அன்னை யார் என்று கேட்பார்கள். என் பெயரை சொல். அதற்கு தகுதி என்ன தெரியுமா? நீ கற்ற கல்வியின் பயனை எல்லாருடன் பகிர்ந்து கொள்வது. காசை தேடி அலையாதே. அது உன்னை கடவுளிடம் அண்ட விடாது. இது தான் நான் கேட்கும் மூன்றாவது அணிகலன்.
திருமகனார் அன்னையின் ஆணைப்படி அணிகலன்கள் அணிவித்தக் கதை இது.
*
இத்தனைக்கும் வறுமையில் வாடிய குடும்பம். சிறிய வயதிலேயே கல்வி கற்பதலில் முதன்மை. கல்வி சம்பந்தமாக எழும் சிந்தனை யாதாயினும், இவர் தான் ஆலோசனை மன்றம்.
அன்னையின் மூன்றாவது நகைநட்டு: ~ தொடரலாமா?

இன்னம்பூரான்
26 09 2011










--பவள சங்கரி திருநாவுக்கரசு. 13:18, 27 செப்டெம்பர் 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

இப்பக்கம் கடைசியாக 27 செப்டெம்பர் 2011, 13:18 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,109 முறைகள் அணுகப்பட்டது.