அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 25மரபு விக்கி இருந்துஇன்னம்பூரான்
உலகவரலாற்றில், ஆசியாவின் கலாச்சாரம், மரபு, சிந்தனை, தத்துவம், சமுதாய அமைப்பு, ஆளுமை எல்லாம் மிகவும் உயர்ந்த நிலையில் இருந்த காலம் பழங்காலம். யுக, யுகாந்திரமாக, இவ்வுலக நாடகமேடையில் விசித்திரிய வீரர்கள் தோன்றி, வியப்புக்குரிய தங்களின் ஆளுமையினாலும், தொன்மை ஞானத்தினாலும், புவியெங்கும் நற்செய்திகளை பரப்பி, வரலாற்றின் போக்கை திருப்பி இருக்கிறார்கள். போனவிடமெல்லாம், அவர்களின் சீடர்களிடம் ஒப்புவிக்கப்பட்ட ரகசியங்கள் காப்பாற்றப்பட்டன. இவ்வாறு வர்ணிக்கப்படும் பழம்பெரும் பொற்கால ஹிமாலயத்து ஞானிகளை பற்றி, ‘கிழக்காசிய முனிவர்கள் ஏசுபிரான் என்ற சிசுவை தரிசிக்க வந்த காதை’ என்ற நூலில் (பக்கம் 13) என்றோ படித்து, மனம் அலை பாய்ந்தது, இன்று நினைவுக்கு வர தோதுவாக அமைந்த விஷயம், ஸெப்டம்பர் 25, 1950 அன்று, ஐ.நா. படைகள் தென் கொரியாவின் தலை நகரான ஸோல் நகரை வடகொரியாவிடமிருந்து மீட்டது.
நதியை தாண்டாமல் வெற்றி கிட்டுமோ? ஹான் நதியை அமெரிக்காவின் 7வது தூசிப்படையும், தென் கொரியாவின் 17 வது தூசிப்படையும், கடந்து, தெற்கு மலை என்ற இலக்கை கைப்பற்றின. டூக்ஸோ அரண்மணையை அமெரிக்க மரைன் படைகள் கைப்பற்றின. ரயில்வே ஸ்டேஷன் அருகில் வலுத்த சண்டை. போதாக்குறைக்கு, சிசிலி என்ற விமானம் தாங்கும் கப்பலிலிருந்து விமானதாக்குதல். இங்கு போர் திட்டங்களை காண்கிறோம். தூசிப்படை, பீரங்கிப்படை, டாங்கிகள், விமானப்படை எல்லாம் ஒன்று கூடி தும்சுக்கட்டை போட்டதும், மேற்கிலிருந்து வந்த படைகள் கிடுக்கிப்பிடி போட்டதும், அவை எல்லாம் எதிர்பாராதத் தாக்குதல்களாக அமைந்ததும், அமெரிக்கப்படைகள் வாகை சூட காரணம்.
சற்றே பின்னணி நோக்குவோம். ஜூன் 26 லிருந்து வட கொரியாவின் பிடியில், சோல் நகரம், ஸெப்டம்பர் 25ல் மீட்கப்பட்ட வரை. இப்போது 38வது எல்லைக்கோடு என்ற சாபக்கேடு பற்றி சில வார்த்தைகள். இரண்டாவது உலகயுத்தம் முடிந்த பின், ஜப்பான் கொரியாவை விட்டு வெளியேறியது. 38க்கு வடக்கே, ரஷ்யா. தெற்கே அமெரிக்கா! எப்படி இருக்கு நியாயம்? இந்த அழகில் வடகொரியாவின் எதிர்பாராதத் தாக்குதல்! ஸெப்டம்பர் 1950 க்கு பிறகும், தகராறு ஓயவில்லை. நவம்பரில் சைனா தாக்குதல். இரண்டு மிலியன் மக்கள் காலி. ஜூலை 27, 1953 அன்று ஒரு அரைகுறை உடன்பாடு. 1991ல் நான் தென் கொரியா சென்றபோதும் அமெரிக்க ராணுவம் அங்கு இருந்தது. நான் சென்றிருந்த கான்ஃபெரன்ஸுக்கு சீன பிரதிநிதிகள் வந்திருந்தனர். நாம் தான் எதோ அளவளாவினோமே தவிர, தென் கொரியர்களும், சீனர்களும் ஒருவரை ஒருவர் அவ்வளவாகக் கண்டு கொள்ளவில்லை. Studied neglect!
என்ன முக்கியத்துவம் என்றா கேட்கிறீர்கள்? இந்தோ-பாகிஸ்தான் மாதிரி இல்லை? ஓவர் டு கண்ணன். இன்னம்பூரான்
it earned him a Bronze Medal and is called 'Deliverance, Seoul, 1950 'http://www.militarymodelling.com/sites/1/images/member_albums/1461/Euro029.jpg
http://www.amazon.com/Return-Magi-Maurice-Magre/dp/0766159140 http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/september/25/newsid_4606000/4606807.stm
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 13:15, 27 செப்டெம்பர் 2011 (UTC) |