அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 2மரபு விக்கி இருந்துஇன்னம்பூரான்
வீர சுதந்திரம் வேண்டி நிற்பதும், விடுதலை பத்திரத்தை கூப்பிட்டு கொடுப்பதும் வரலாற்றின் வினையெச்சங்கள்். வரலாறு கூறுவதையெல்லாம், நாம் மனதில் கொள்வதில்லை. சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசு பதவி ஏற்ற தினம் ஸெப்டம்பர் 2, 1946. அதன் பின்னணி: இந்திய தலைவர்களுடன் கலந்தாலோசித்து, அன்னாட்டு சுயாட்சிக்கு வழி வகுக்கவேண்டும் என்று பிரிட்டீஷ் மன்னர் பார்லிமெண்டில் வாக்குறுதி அளித்ததன் அடுத்தக் கட்டமாக , மார்ச் 15,1946 அன்று பிரிட்டீஷ் பிரதமர் பார்லிமெண்டில் கூறியதின் ரத்னசுருக்கம்: ‘இந்தியாவில் டென்ஷனும் சூடும் எகிறிக்கிடக்கிறது...பிரச்னையை 20 வருடங்களாக அறிவேன். நடந்ததை பற்றி குற்றமும், குறையும் காணாமல், நடக்கப்போவதில் கவனம் செலுத்துவோம்...இந்திய தேசாபிமானம் அலை மோதுகிறது. ஏன், ஆசியா முழுவதுமே. என்ன தான் இன அபிமானம் பேசப்பட்டாலும்,ஹிந்து,முஸ்லிம், சீக்கியர் யாவரும் தேசாபிமானிகள்...தீர்க்கமான முடிவுகளை எடுக்க ஒரு அமைப்பு தேவை...இந்தியாவின் சமுதாய/செல்வநிலை பிரச்னைகளை, இந்திய அணுகு முறையில் தீர்க்கவேண்டும்... நாம் அனுப்பும் காபினெட் குழுவுக்கும் இந்த இக்கட்டான நிலையில் கடவுள் துணை அருளப்படட்டும்..’. கேபினெட் குழு: ‘...கலந்தாலோசனை மும்முரமாக நடந்தது. காங்கிரஸ்ஸும், முஸ்லீம் லீக்கும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தாலும், அடிப்படை முரண்களை அசைக்கமுடியவில்லை...பிரிட்டீஷ் அரசின் அங்கீஹாரத்துடன், முடியக்கூடியதை பரிந்துரைக்கிறோம்...பாகிஸ்தான் வேண்டும் என்ற வாதம், பாகிஸ்தானிலிருந்து முஸ்லீம் அல்லாதார் வாழும் இடங்களை பாகிஸ்தானிலிருந்து பிரிப்பதற்கும் உகந்ததே... இரு நாடுகளுக்கு, இந்தியாவை பிரித்துக் கொடுப்பதை எங்களால் பரிந்துரை செய்ய முடியவில்லை...இந்திய குறுநில மன்னர்களுடன் பிரிட்டீஷ் சர்க்கார் வைத்திருக்கும் ராஜ விசுவாச பிணைப்பு விடுபடும். இந்த ‘திரிசங்கு’ சுவர்க்க நிலையை எப்படியோ சமாளித்து விடுவோம் என்று எல்லாரும் சொல்கிறார்கள் ( இது உதார் என்று என் அபிப்ராயம்; சர்தார் படேலின் உயர் நிலை ஆளுமையால் தான் இந்த பிரச்னை தீர்க்கப்பட்டது. அது பெரிய கதை.) எங்களின் பரிந்துரையின் மையம் ~ மத்திய அரசும், மாகாண அரசுகளும். (பிரிவினை இல்லை இந்த தற்காலிக அமைப்பில்.)
நடந்தது என்ன? மின் தமிழர்களே? இது ஒரு அறிமுக கட்டுரையாயினும், மூலாதாரங்களை அலசும்போது என் மனம் பதைபதைத்தது. ஏனிந்த கோலம் உனக்கு, பாரதமாதா? நினைத்தது ஒன்று. நடந்தது ஒன்று. 1946லிருந்து 2011 வரை நீயும் உன் தேசாபிமானமும் பட்ட பாடு சொல்லில் அடங்கா. ஆட்லி கூப்பிட கடவுள் துணை இனியாவது உனக்கு கிடைக்கட்டும், தாயே. இன்னம்பூரான் 02 09 2011 பி.கு: மூல ஆதாரங்களை சுருக்குவதும், மொழியாக்கம் செய்வதும் எளிதல்ல. தவறுகளுக்கு நான் பொறுப்பு என்றாலும், உசாத்துணையின் உதவியுடன் மூல ஆதாரங்களை படித்து, கருத்து அமைத்துக்கொள்வது, உமது கடமை. உசாத்துணை:
http://www.oldindianphotos.in/2008/12/members-of-indias-interim-government.html India (Cabinet Mission): Statement by the Cabinet Mission and his Excellency the Viceroy, Cmd 6821 (London: HMSO, 1946), pp.2- 9 http://www.fordham.edu/halsall/mod/1946-india-ukpolicy.html http://www.bl.uk/reshelp/findhelpregion/asia/india/indianindependence/transfer/transfer5/index.html jinnah.jpg pastedGraphic_2.pdf pastedGraphic_3.pdf Extract of Clement Attlee's minute to the Secretary of State for India
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 08:24, 2 செப்டெம்பர் 2011 (UTC)
|