அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 14

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

இன்னம்பூரான்


என் இலக்கையும், செய்முறையையும் விளக்க, இது சரியான தருணம். ஐ.ஏ.எஸ். எழுத விரும்பும் சிலருக்கு பாடம் எடுக்கும் போது, அவர்களின் பொது அறிவை விசாலப்படுத்துவதின் அத்யாவசியம் தெரிந்தது. ஒரு காலகட்டத்தில் யூ.பீ.எஸ்..சி. யின் குழு அங்கத்தினராக இறுதிச்சுற்றில் நேர்காணல் செய்யும் அனுபவம் பல வருடங்களுக்கு பிறகும் கை கொடுத்தது. நான் பலருக்கு மாக் (போலி அன்று.) இண்டெர்வ்யூ நடத்தினேன். 75% பாஸ்; உயர்பதவியில். அந்தப்பணியை, இயன்றவகையில் தொடருகிறேன், இங்கு. 1954ல் நான் எனக்காக அமைத்துக்கொண்ட வழிமுறையில் (சொல்லிக்கொடுக்க ஆளில்லை.) இண்டெர்னெட் உதவியுடன், இந்த இழையை நாள் தோறும் ஒன்றாக பதிவு செய்வதின் நோக்கம்: அன்றாடம் பெரும்பாலோருக்கு புதிய தகவல்கள் கிடைக்கட்டும்: அவர்களில் தேடல் தொடங்கட்டும்; இந்த இழையை படிக்க நேர்ந்தால், விருப்பத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நானோ Copy-Left! இந்த நவீன ஐ.ஏ.எஸ். படிப்பு யாவருக்கும் நன்மை பயக்கும், மற்றவர்களும் இதை அலை வரிசையில் உதவி செய்தால், என்று நினைக்கிறேன். கருத்துக்கூற,குறை காண, சீர்திருத்த யாருக்குத் தான் உரிமை இல்லை? சொல்லப்போனால், எனக்கு இது ஒரு புலி சவாரியாக இருக்கிறது. குறைந்தது இரண்டு மணி நேரம், ‘இது வேண்டாம்’, ‘அது வேண்டாம்’ என்று ஒதுக்க! பல மணி நேரம் தேடல்/ஆய்வு. பேருக்கு உதட்டசைவு வேலை செய்து வழக்கமில்லை. மற்ற காரியங்கள் தடை பட்டுப் போகின்றன. குடும்பமும் கோபித்துக்கொள்கிறது. கையும் வலிக்கிறது. இது அமருக.


மின் தமிழர்கள் ‘தை’யா? ‘சித்திரை’யா? என்று ‘தக்கத்தையா’ என்று குதித்துக்கொண்டபோது, சிரித்துக்கொண்டேன், ஆனானப்பட்ட ஜூலியன்/கிரகேரியன் காலண்டர்கள் பட்ட பாட்டை நினைத்துக்கொண்டு. (யாரு அந்தப்பொண்ணு? பல்லவி ராவ்? ரயில் வண்டி மேல் டான்ஸுவளே. அவள் நினைவு வந்தது.) எக்க்ச்சக்கமாக எல்லாரும் இதையெல்லாம் பேசியிருக்கிறபடியால், ஒரு ஜோக் அடித்து விட்டு போய் விடுகிறேன். அது கூட அடுத்த பகுதியில். இங்கு தலை மாந்தர் மஹா.ராஜ. ராஜ. ஸ்ரீ. திவான் பஹதூர் எல்.டி. சாமிக்கண்ணு பிள்ளை அவர்கள் M.A., B.L., LL.B., I.S.O., C.I.E. சட்டமன்றத் தலைவர், அரசு காரியதரிசி, நெல்லூர் கலக்டர், தமிழ் லெக்ஸிகன் கமிட்டி மெம்பர், கத்தோலிக்க சமயத்தலைவர், பல அரிய நூல்களை எழுதியவர். இறவா புகழ் படைத்தவர். இந்த வருடம் கூட அவர் நினைவார்த்தமாக, சென்னை பல்கலைக்கழகம் எண்டொவ்மெண்ட் சொற்பொழிவுகளை நடாத்தியது. ஆனால், ஒரு நாள் முழுதும் தேடியும் அவரை பற்றி விவரங்கள் கம்மி. யார் லெக்சர் அடித்தார்கள் என்ற ரகசியத்தை பல்கலைக்கழகமும் சொல்லாது; ஹிந்தும் போடாது. ஒரே ஒரு வாழ்க்கை வரலாறு, ஆங்கிலத்தில், மங்களுரிலிருந்து. 1935. கிடைக்கவில்லை, கூகிள் கூவியும்! இத்தனைக்கும், ஃபெப்ரவரி 11,1865 பிறந்து, ஸெப்டம்பர் 10, 1925 ல் மறைந்த பிள்ளையவர்களின் இரங்கல் செய்தி நேச்சர் என்ற புகழ் பெற்ற இங்கிலாந்தின் விஞ்ஞான இதழில், அக்டோபர் 10, 1925லில் தெரிவிக்கப்பட்டது. சொல்லப்போனால், யாதும் வெளி நாட்டில் தான். விக்கிப்பீடீயா இவரை அரசியல்வாதியாக சித்திரிக்கிறது. இவர் அரசியல் வாதியே அன்று. உத்தியோகஸ்தர். சட்டசபை பதவி தேடி வந்தது. சரி, அவரின் இறவாப்புகழ் என்ன? மின் தமிழுக்குப் போவோம்:

https://groups.google.com/group/mintamil/browse_thread/thread/0f26e17cd58dcce9/b0482530fd2be1b1?hl=lt&#b0482530fd2be1b1

Continuing on the magic number 1017...

//The horoscopic details provided above can be checked using the
Indian Ephemeris compiled by L.D.Swamik kannup pillai
( ref. An Indian Ephemeris A.D.700 to A.D.1700 by L.D.Swamikannu
Pillai, Agam Prakashan Delhi, first published 1922, first
reprinted 1982, p.36) .
When this is done it is found that there is a complete one to one
correspondence between the above data
and the date is 4th April, 1017//

4th April, 1017: உடையவரை பற்றி. திவாகரும் நிறைய சாதிச்சிருக்கார், இந்த இழையில்.


அத்தனை துல்யமாக, திதி, நக்ஷத்ரங்கள், ஜாதகங்கள், இந்திய காலம், நாட்காட்டி ஆவணங்கள்: கி.மு. 1 முதல் கி.பி. 2000 வரை கணித்து, இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் வானவியல் பாட புத்தகங்களுக்கு வழி வகுத்துக்கொடுத்த தமிழகம் ஈன்ற சான்றோனை மறந்து விட்டோம் பார்த்தீர்களா? முதல் பதிப்பு 1911. (46 வயது இளைஞர்) 1922 அல்ல,மின் தமிழில் சொன்ன மாதிரி. ஒரு ஃபோட்டோ கூட கிடைக்கவில்லை. பேராசிரியர் நாகராஜன்! வாங்க உள்ளே.

தாத்த்தாவை குழையடிச்சு நான் வாங்கிய புத்தகங்கள்:Science for the Citizen, Mathematics for the Millions & The Loom of the Language. All by the explosive genius Sir Lancelot Hogben.சுற்றம் ஒருவர்் கேட்டார், ‘ ஏண்டாப்பா! இதெல்லாம் எகானமிக்ஸ் சம்பந்தமே இல்லை. இப்படி காசை கரியாக்குவாளா?’ நான் பதில் சொல்லவில்லை. ஆனால், ஐஏஎஸ் நேர்காணலில் Sir Lancelot Hogbenக்கு கொடுக்கப்பட்ட இடம் ஜாஸ்தி. எனக்கு லக்கு. ஶ்ரீரங்கம் மோஹனரங்கன் நம்மாத்துக்கு வருவதற்கு பற்பல வருடங்கள் முன்னாலேயே கை மாறி போய் விட்டன, இந்த நூல்கள். நல்ல வேளை அதனுடைய பின்னால் வந்த Boorstin DJ (1984)The Discoverers:London:Dent தப்பித்தது.ஒரு மேற்கோள்:

“1582ல் போப் கிரகிரி XIII அக்டோபர் 4க்கு அடுத்த நாள் அக்டோபர் 15 என்று ஆணை பிறப்பித்தார். இருந்தும் ஒரு 11 நிமிட இடைவெளி தொந்தரவு செய்தது. அதற்கு நிவாரணமாக, சில நூற்றாண்டுகளில் ஒரு நாள் குறைத்து, இன்று வரை கிரகேரியன் கலெண்டர் ஓடுகிறது. ஆனால் எத்தனை பிரச்னை? வேலையாட்கள் விட்டுப்போன நாட்களுக்குக் கூலி கேட்டனர். நம் ஆயுளை குறைக்க போப்பாண்டவர் யார் என்று சிலர் முறைத்தனர். ரோமன் கத்தோலிக்கர் எங்கள் நாட்களை குறைப்பதாவது என்று கச்சை கட்டிக்கொண்டு கோதாவில் இறங்கிய இங்கிலாந்து, 1752 வரை இழுத்துப் பறித்தது. இனி ஜார்ஜ் வாஷிங்டன் பிறந்த நாள் ஃபெப்ரவரி 11, 1751 (பழங்கணக்கு):ஜார்ஜ் வாஷிங்டன் பிறந்த நாள் ஃபெப்ரவரி 22, 1752 (புது கணக்கு) (இங்கு சிக்கலான கணக்கு உளது. பார்த்தசாரதி தான் சிக்கல் பிரிக்கணும்.)

~ அதெல்லாம் சரி! ‘அன்றொரு நாள்’ அடி படுமோ? ஐயா! போப் 11 நாட்கள் எடுத்து விட்டார். நான் 23 மணி நேர தாமதம் செய்ய நேரிடுமோ? நாளும் மாறாது. ஆளும் மாறாது!

இன்னம்பூரான்

14 09 2011

                                                                                                                  

41kOKc9RaLL._SS500_.jpghttp://ecx.images-amazon.com/images/I/41kOKc9RaLL._SS500_.jpg


உசாத்துணை:

http://www.ulib.org/cgi-bin/udlcgi/ULIBAdvSearch.cgi?listStart=760&&&&&&&subject1=History&perPage=20

http://openlibrary.org/works/OL5081960W/Indian_chronology_(solar_lunar_and_planetary)







--பவள சங்கரி திருநாவுக்கரசு. 02:12, 17 செப்டெம்பர் 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

இப்பக்கம் கடைசியாக 17 செப்டெம்பர் 2011, 02:16 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,819 முறைகள் அணுகப்பட்டது.