அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 1மரபு விக்கி இருந்துமின் செய்தி: வாசிப்பது இன்னம்பூரான் செப்டம்பர் 1, 2011 அரபு மடர் என்ற புரட்சியாளர் கடந்த செவ்வாய் அன்று கடஃபியின் இல்லத்தருகே சுட்டுக்கொல்லப்பட்டார். புதின எழுத்தாளர் ஹிஷாம் மடர் அவருடைய உறவினர்; அவர் எடின்பரோவில் நடந்த உலக புத்தக விழாவில் கூறியதின் சுருக்கம்: ‘...அத்வானமாக இருக்கிறது, எங்கும் தோட்டாக்கள்! முகம் யாதும் காணோம், கடஃபியின் ஆட்சி போல; எல்லாம் ஒரு புற தோற்றம் மட்டுமே. நிஜம்?!... எமது வரலாற்றில், ஜனநாயகம் புலப்படும் கருத்தும், காட்சியும், முதல் முறையாக, இப்போது தான். ஒரு கட்டுக்கதையாக இல்லை. புரட்சி என்பது வைரிகளை ஒழிக்கும் மனப்பான்மையல்ல. நம்மை நாமே லிபியர்கள் என்று புரியவைக்கும் வழித்துணை, அது. (1970 களில் அவருடைய தந்தை நாடு கடத்தப்பட்டர். 1990களில் வன்முறையில் லிபியாவுக்கு கொணரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டார். அவர் உயிருடன் இருக்கிறாரா என்று கூட தெரியாது. அவருடைய ‘ஒருவர் மறைந்த மர்மம்’ என்ற நூலின் மூலம் அந்த கொடுங்கோல் வரலாறே.)...தனிமனிதனின் தனித்துவத்தை கையாடி, ஒழித்து, வரலாற்றை மாற்றி அமைப்பதே, யதேச்சையதிகாரத்தின் குறிக்கோள். இலக்கியம் வாழ்க்கையை பிரதிபலிக்கும் கண்ணாடி தனிமனிதர்களின் வாழ்வு ரகசியங்கள், காதல், படிப்பு, எழுத்து, சிந்தனை, குழந்தை வளர்ப்பு எல்லாவற்றையும் வேவு பார்த்து, குதறும் பூதக்கண்ணாடி, யதேச்சையதிகாரம். ட்யூனிஷியா, எகிப்து, லிபியா ஆகிய இடங்களில் நடப்பவை நம்மை எங்கே கொண்டு செல்லும் என அறியேன். ‘இஸ்லாமியத்துவம்’ என்று ஒன்று உண்டு. அது எங்கள் வாழ்நெறி, மரபு, இலக்கணம், மொழி. லிபிய விடுதலையில் அதன் பங்கும் இருக்கும். இக்காலம் நடக்கும் புரட்சி புனிதமானது...’ பின்னணி: கர்னல் கடஃபி ஜனவரி 1970யில் பிரதமரானாரே. அராபிய நாடுகளின் ஒற்றுமையை தோற்றுவிக்க முயன்ற அவர் பயங்கரவாதத்தை கையில் எடுத்துக்கொண்டார். லாக்கர்பீ விமான விபத்து ஒரு கடாஃஃப்பி சதி. அதனால் அமெரிக்காவுடனும், பிரிட்டனுடனும் உறவு முறிந்தது. 2003 இல் கடாஃஃப்பி, தடாலடியாக, மாபெரும் ஆயுதங்களை தியாகம் செய்யப்போவதாக்ச் சொல்ல, லாக்கர்பீ விமான விபத்துக்கு 2 பிலியன் டாலர் நஷ்ட ஈடாக தருவதாகச் சொல்ல, அதை ஏதோ பெரிய மனமாற்றம் என தன்னையே ஏமாற்றிக்கொள்ளும் மேற்கத்திய வல்லரசுகள் 2003 இல் தொடங்கி 2006 இல் லிபியாவையும், கடாஃப்பியையும் கொஞ்சி குலாவத்தொடங்கின. இத்தனைக்கும் ஐரிஷ் புரட்சியாளர்களுக்கு உதவியவர், இவர். கோடானு கோடிகள் அபகரித்தவர். 1986 லியே அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் இவரை ஒழிக்க விழைந்தார். இந்த ‘காதலும், காழ்ப்பும்’ ஆன முரண் உறவில் எத்தனை விரிசல்கள், எத்தனை ஒட்டுக்கள்! சொல்லி மாளாது. அராபிய தலைமை கூட்டமானாலும் சரி, ஐ.நா. வானாலும் சரி. மற்றவர்களை அவமதிப்பதில் கடாஃப்பிக்கு இணை அவரே. முழு விளக்கங்களுக்கு உசாத்துணைகளை அணுகவும். டோனி ப்ளையரின் ‘ப்ளா ப்ளா’ பார்க்கவும். மின் செய்தி: வாசிப்பது பவள சங்கரி ஆகஸ்ட் 31, 2011
கடாபி ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்ட மக்களுக்கு எதிராக, அல்ஜீரியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட கூலிப் படையினரைப் பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.கடாபி படைகளின் கொடூரம்: இதற்கிடையில், டிரிபோலியின் தென்பகுதியில் இருந்த தற்காலிக சிறை வளாகம் ஒன்றில், எரிக்கப்பட்டுக் கிடந்த 50 உடல்கள், லிபிய ராணுவ அதிகாரிகள் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள், லிபிய மக்கள் மீது தாக்குதல் நடத்தமாட்டோம் என, மறுப்பு தெரிவித்தவுடன் கொல்லப்பட்டுள்ளனர். இது தவிர, பலபேர் கொல்லப்பட்ட நான்கு இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.மேலும், மிஸ்ரட்டா நகர்வாசிகள், கடாபி ஆதரவாளர்கள் தங்களை சித்ரவதை செய்துகற்பழித்ததாகக் குற்றம் சாட்டியுள்ளனர். இவை அனைத்தும், கடாபிக்கு எதிராக சர்வதேச கிரிமினல் கோர்ட்டில் முன்வைக்கப்பட உள்ளன.கமீஸ் பலி: இத்தாலியின் "அன்சா' செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், கடாபியின் மகன் கமீஸ் கடாபி, டிரிபோலியில் இருந்து சிர்ட் நகருக்கு அருகில் உள்ள பானி வாலித் என்ற இடத்துக்குச் செல்லும் வழியில், காயங்கள் காரணமாக உயிரிழந்து விட்டார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாசிப்பது இன்னம்பூரான் ஆகஸ்ட் 30, 2011 கடஃபிக்கு அல்ஜீரியாவில் பேத்தி பிறந்தாள்; தாயும், சேயும்,நலமே. மின் செய்தி: வாசிப்பது இன்னம்பூரான் செப்டம்பர் 1. 1969 “இப்போது புதிய ராணுவத்தளபதி: கர்னல் முவம்மர் கடஃபி (27). ஒற்றுமை, விடுதலை, சோஷலிஸம்.” என்ற புரட்சி பாசறையின் பிரகடனம் எங்கெங்கும் முழங்கியது. இன்று காலை 5 மணிக்கு ட்ரிபோலி நகரில் எல்லாவற்றையும் கைபற்றிய ராணுவ-புரட்சியாளர் குழு, எதிர்ப்போரை இரக்கமில்லாமல் ஒழித்துக்கட்டுவோம் என்றும் சபதமிட்டது. லிபியாவுக்கு லிபிய-அரேபிய குடியரசு என்று நாமகரணம் செய்தது. மன்னர் இட்ரிஸ் இந்த ரத்தம் சிந்தாத புரட்சியில் முடி இழந்தார். எல்லா தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன. எங்கும் ஊரடங்குச்சட்டம். இது பெரிய விஷயமில்லை என்றார் துருக்கியிலிருந்த மன்னர். லண்டனிலிருந்த இளவரசர் ஹாஸனோ, புரட்சியை வரவேற்றார். இது பிரிட்டன் சற்றும் எதிர்ப்பார்க்காதது. எனினும், சவாலை சமாளிப்போம் என்றனர். (இந்த ‘கரடி வித்தை’ குல வழக்கம் அல்லவா! லிபியாவுக்கு ஆயுத சப்ளையர் நம்பர் 1, பிரிட்டன்; ஒப்பந்தங்கள் வேறு; அமெரிக்காவுக்கும் அங்கு ஒரு விமான தளம் இருந்தது.). எகிப்தும், ஈராக்கும் புது அமைப்பை வரவேற்றன. புரட்சித்தலைவர்: கர்னல் ஸாதுத்த்தீன் புஷ்வைர். மன்னர் பாலஸ்த்தீனியர். ஜார்டானியர்,லெபனீஸ், சிரிய நாட்டவர், பாத் கட்சி, எல்லாரையும் பகைத்துக்கொண்டவர் என்பதால், புரட்சியின் பின்புலம் தெரியவில்லை. ஆனல் மக்கள் ஆதரவு பலமாக இருக்கிறது. 1967 இல் ஆறே நாட்களில் இஸ்ரேல் இவர்களை போட்டு மிதித்து, நசுக்கிய அவலத்தையும், அரசகுலத்தின் ஊழலையும், மன்னரின் மேற்க்கத்திய மோஹத்தையும் விரும்பாத மக்களுக்கு இந்த புரட்சி நல்விருந்தாகவே அமைந்தது.
வாசிப்பது இன்னம்பூரான் செப்டம்பர் 1. 2011 இன்று கருத்து! நாளை செய்தி; பாரதமாதாவின் தாபம்! பாரதவர்ஷே ! பரதக்கண்டே! மேரோஹோ தக்ஷிணே பார்வே ( அ-து இந்தியாவில்) என்ன என்னமோ நடக்கிறது. ஒரே தர்மத்தை சொல்லிண்டு இரண்டு நாணயஸ்தர்கள் அடித்துக்கொள்கிறார்கள்; மடலாடுகிறார்கள்; போறவன், வரவன் எல்லாரும் சந்தியிலே நின்று கொண்டு ‘ஆர்குமெண்டேடிவ் இந்தியர்களாக’ சொல்மாரியில் நனைகிறார்கள். சொல்லையனும், கொள்ளையனும் கட்டித் தழுவுகிறார்கள். பிரதிநித்துவம் நித்தியானந்தமாக ஆகிவிட்டதே, தலைவா! எங்கும் ‘லஞ்சம் ஒழிக’ என்று பேச்சு. அதோடு நின்னும் போச்சு. பாரத புதல்வர்களே! லிபியா செப்டம்பர் 1. 1969 &செப்டம்பர் 1. 2011 ஐ பாருங்கள். இன்று கடாஃபியை காணவில்லையாம். பாடம் அளிப்பது லிபியா; கற்றுக்கொள்வது நீவிர். வர்ரேன். இன்னம்பூரான் 01 09 2011 உசாத்துணை
http://www.bbc.co.uk/news/world-africa-12688033 http://www.economist.com/blogs/newsbook/2011/08/battle-libya மின் தமிழ்: மின் செய்திமாலை ~ 1: 31 08 2011
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 08:18, 2 செப்டெம்பர் 2011 (UTC) |