அன்றொரு நாள்: மே 5

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 

இன்னம்பூரான்


நம்மூர் க்ரேடோ கார்போ!


வரலாறு சமயங்களில் வற்றியயாறு ஆகி விடுகிறது. காலதேவனின் கொடுமை. ஓஹோஹோ என்று கொடி கட்டி பறந்தவர்கள், சுவடு இல்லாமல் காணாமல் போய்விடுகிறார்கள். கிட்டத்தட்ட இருபது வருடங்கள் முன்னால், தற்செயலாக இன்றைய கதாநாயகியின் சஹோதரை சந்திக்க நேர்ந்தது. எங்கள் வாலிபப்பருவத்தில், யுவர்களுக்கு அவர் தான் கனவுக்கன்னி. அந்த நினைவு உந்த, அவருடன் அவருடைய சஹோதரியை பற்றி மேலும் அறிய விரும்பினேன். அவர் தனிமையாக வாழ்கிறார். யாரையும் பார்ப்பதில்லை என்பதற்கு மேல், அவர் அதிகமாகக் கூற விரும்பவில்லை. அவரது அழகு, உடல் நிலை மோசமானதால், குலைந்து விட்டது என்று சொல்பவர்களும் உண்டு, அவரை பார்க்காமலே! க்ரேடோ கார்போ என்ற அழகு பிம்பமும், மேல்நாட்டு திரை நடிகையும் ஆன க்ரேடோ கார்போ தன்னுடைய தனிமையை தீவிரமாகவே காப்பாற்றினார், அதெல்லாம் போகட்டும். சந்திரலேகா சினிமாவை சமீபத்தில் போட்டுப்பார்த்த போது, மற்றது ஒன்றும் எம்மை கவரவில்லை. அந்த மாபெரும் பேரிகை நடனமும், நாட்டியமாடும் குதிரையும், கவர்ச்சிக்கன்னி டீ.ஆர். ராஜகுமாரியும் தான் எம்மை கவர்ந்தவை. பாண்டி பஜாரில் சினிமா அரங்கு. பஸ் ஸ்டாப்பின் பெயரே அது தான். என்னே ஜோடி! இந்த எம்.கே. தியாகராஜ பாகவதரின் ஜில்ப்பாவும், ஜரிகை அங்கவஸ்திரமும், பெண்கவர் முகவிலாசமும், டீ.ஆர். ராஜகுமாரியின் அழகும், பொலிவும், வனப்பும், மனம்கவர் ஜொலிப்பும், சொல்லி மாளாது போங்கள். ஆனால் பாருங்கள். எம்.கே. தியாகராஜ பாகவதர் வறுமையில் உழன்று, அனாதையாக உயிர் துறந்தார். தமிழ் நாட்டில் வானளாவ புகழுடன் அன்ன நடை போட்ட பேரழகி டீ.ஆர். ராஜகுமாரி 1999 வரை 77 வயது வரை வாழ்ந்தவர் எனினும், அவரை பற்றிய பாமரகீர்த்தி பூஜ்யம்.பேசும் படம் மாதிகை, ஜனவரி 1951 ஒரு உசாத்துணை: ஆனால், கிடைத்தால் தானே. நாகராஜன் தான் தேடணும். விக்கிப்பீடீயாவில் 19 செப்டெம்பர் 2006 அன்று வரை இவரை பற்றி தகவல்கள் கிடைக்கவில்லை என்றொரு குறிப்பு. 25 பெப்ரவரி 2012 அன்று வரை அதிகப்படியாக தெரிந்தது சொல்பம். கழுதை, குதிரைக்கெல்லாம் நூற்றுக்கணக்கான படங்கள். தமிழகக் கனவுக்கன்னிக்கு இரண்டே இரண்டு! இன்று டீ.ஆர். ராஜகுமாரி அவர்களின் பிறந்த தினம். (மே 5, 1922). நானாவது நாலு வரி எழுதுகிறேன்.


இன்னம்பூரான்
05 05 2012
http://upload.wikimedia.org/wikipedia/ta/thumb/3/32/ராஜகுமாரி.jpg/200px-ராஜகுமாரி.jpg


உசாத்துணை:
http://ta.wikipedia.org/wiki/டி._ஆர்._ராஜகுமாரி








--பவள சங்கரி திருநாவுக்கரசு. 03:17, 8 மே 2012 (UTC)

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

"https://marabuwiki.org/index.php?title=அன்றொரு_நாள்:_மே_5&oldid=10894" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 8 மே 2012, 03:17 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 851 முறைகள் அணுகப்பட்டது.