அன்றொரு நாள்: ஜூலை 31மரபு விக்கி இருந்துஇன்னம்பூரான்
எப்போது பற்று ஆசையை விட அடர்த்தி அடைகிறது? எப்போது பற்று வெறியாகி விரட்டுகிறது? பிறந்த மண் என்றால் வாத்ஸல்யமாகத்தான் இருக்கிறது. வளர்ந்த ஊர் என்றால் ஆசையாகத்தான் இருக்கிறது. கோவை, கொங்கு என்றால், உடனே நா.கணேசனார் எட்டிப்பார்ப்பார். அது பிராந்தீயப்பற்று. இயல்பு. பிறகு மாநிலம், நாடு, கண்டம், உலகு...இதை எதற்கு சொல்கிறேன் என்றால், வரலாற்று பதிவுகளில், பூலித்தேவன்,ராணி வேலு நாச்சியார்,மருது சகோதரர்கள், வீர பாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை, தீரன் சின்னமலை போன்றோர் ஆங்கிலேயனுடன் மல்லுக்கட்டி நின்றபோது, தலை தூக்கியது, பிறந்த மண் வாத்ஸல்யமா, ஊரின் மிது காதலா, பிராந்தீய ஆசையா, நாட்டுப்பற்றா அல்லது தேசாபிமானமா அல்லது வேறு ஒரு பிணையா? வரலாற்று பார்வையில் இந்த கேள்விக்கெல்லாம், தகுந்த விடையும், அதற்கு ஆதாரமும் கிடைக்க வேண்டும். மலபார் கேரள வர்மா, அரிசிக்கரை கிருஷ்ணப்ப நாயக்கர், கன்னடத்து விட்டல் ஹெக்டே, பெல்காம் தூந்தாஜி வாக் ஆகியோரின், ஏன், தாந்தியா தோப்பின், தேசாபிமானத்தைக் குறைத்து மதிப்பிட முடியுமா? அவர்களை பற்றி என்ன தெரியும் நமது வரலாற்று பதிவுகளில்? இன்று நம்மிடம் இருக்கும் வரலாற்று பதிவுகள், ஆவணங்கள், ஆய்வுகள் சொல்வது என்ன என்று விசாரிக்கும்போது, வரலாற்றியல் பேராசிரியர் கே. ராஜய்யன் சொல்வதைக் கேட்போம்.
புரட்சிக்காரர்களில் வலிமை மிகுந்த தூந்தாஜி வாக் அவர்களிடமிருந்து தகவல் ஏதும் வரவில்லை. (ஏன்? என்று கிடைத்த ஆய்வுகள் சொல்லவில்லை. அவருடன் நடந்த பேச்சு வார்த்தையின் போது கொடுத்த வாக்கை மீறினாரா? அல்லது தமிழ்த்தலைவர்கள் தவறாக புரிந்துகொன்டனரா? திப்பு சுல்தான் நெப்போலியனை நம்பியது அப்படித்தானோ?)
எது எப்படி இருந்திருந்தாலும், இன்று தமிழர்கள் யாவரும், உலகில் எங்கு வசித்தாலும், தீரன் சின்னமலை, அவரைப்போல திருமணம் செய்து கொள்ளாத சகோதரர்கள், பெரிய தம்பி, கிலேதார் ஆகிய மூவருக்கும், அவர்களின் ‘கோவைப்புரட்சித் திட்டம்: 03.06.1800’ குழுவுக்கும், தொழுகை நடத்தவேண்டும். எனக்கு கிடைத்த பதிவுகளில் இரண்டு, புலவர் செ. இராசு அவர்களால் எழுதப்பட்டவை. அவற்றில் ஒன்றை இணைத்துள்ளேன், அருமை நண்பர் நா.கணேசாரின் தெரிவுடன். படிப்பினை: வரலாற்று ஆய்வை புறக்கணிக்காதே. இன்னம்பூரான் 31 07 2011 இணப்பு: http://kongu-usa.org/theeranChinnamalaiTamil.pdf உசாத்துணை: ஸ்டாலின் குணசேகரன்.த. (தொகுப்பாசிரியர்) (2000): விடுதலை வேள்வியில் தமிழகம்( பாகம் - 1 ): ஈரோடு: நிவேதிதா பதிப்பகம்.
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 16:50, 1 ஆகஸ்ட் 2011 (UTC) |