அன்றொரு நாள்: ஜூலை 25:IIமரபு விக்கி இருந்துஇன்னம்பூரான்
எது பொதுவுடமை? எது தனிவுடமை? இது முடியா வாதம், விவாதம், விதண்டா வாதம். இடம், பொருள், ஏவல், ஏன்?, மனநிலையை பொறுத்துக்கூட, மாறி, மாறி வரும் மனித இயல்பின் ஊடுருவும்/பிரதிபலிக்கும்/முகக்கண்ணாடி/பூதக்கண்ணாடி, இந்த சர்ச்சை என்பர்,சிலர். அவரவர்களுக்கு, அவரவர் நோக்கு;போக்கு. நடைமுறை விளக்கம் ஒன்று. பொது ஆஸ்பத்திரியில், டாக்டருக்கும் எனக்கும் ஒத்து போகவில்லை. உரிமைப்பிரச்னை. எனக்கு தெரிந்த பெரிய டாக்டர் நுழைந்தார், தற்செயலாக. ‘அவர் கேட்டதை செய்து விடு. அவர் கம்யூனிஸ்ட்.அவர் நியாயம் தான் கேட்பார்’ என்றார். ‘ஓஹோ! உரிமை, போராட்டம் என்றால், (இத்தனைக்கும் அது தனிவுடமை!) இது ஒரு முத்திரையோ’ என்று நினைத்துக்கொண்டேன். தெற்கு கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் ‘கறுப்பு முற்றம்’ ஒன்று இருக்கிறது. செனெட்டர் மக்கார்த்தியினால் ‘இடது சாரி’ என்று ‘சூடு’ போடப்பட்டு, வேட்டையாடப் பட்டவர்களை பற்றிய கல்வெட்டுக்கள். முதலாளித்துவத்தில் ஊறியவர்கள் கூட மனங்கலங்கிவிடுவார்கள். அப்படிப்பட்ட உருக்கமான வரலாற்று பதிவு. மனித நேயத்திற்கு பிறகு தான், மற்றதெல்லாம். கம்யூனிஸ்ட்டுகளில் எத்தனை வகை - மார்க்சிஸ்ட்,லெனினிஸ்ட் மாவோயிஸ்ட், ரஷ்ய/சீன முதலாளித்துவ கம்யூனிஸ்ட்! கம்யீனிஸ்ட்டுகளிடம் ஒரு கொடிய குணம். அப்பனையும், ஆத்தாளையும் குப்பையில் தள்ளி விடுவார்கள், அன்றைய கோட்பாட்டுக்கு அவர்கள் ஒத்து வரவில்லை என்றால் -பாமி தத், எம்.என். ராய், சோம்நாத் சட்டர்ஜி என்று வரிசை. பாவமன்னிப்பு முறை மேலும் கேவலம். போப்பாண்டவர் கலிலியோவை நடத்திய முறை எவ்வளவோ தேவலை எனலாம். இவர்களா உரிமைக்குக் குரல் கொடுப்பவர்கள் என்று கேட்டால், ஆம் என்றும் சொல்லலாம். அந்த அளவுக்கு பெரும்பாலான கட்சி அங்கத்தினர்கள் தியாகம் செய்யும் கட்சி இது ஒன்றே.
முதலாளித்துவத்திற்கும், பொதுவுடமை வாதத்திற்கும் ஒற்றுமை, அவர்களின் முரண்பாடுகளில்! வேறுபாடுகளில்! அழகப்பச்செட்டியார், பிர்லா, டாடா, அம்பானி, கலாநிதி மாறன் என்று எத்தனை வகை முதலாளித்துவம்? வள்ளல் ~ கொள்ளை! சிலர் கொடுப்பர்; சிலர் எடுப்பர்! முதலாளிகள் தியாகம் என்பதை அறியாதவர்கள் என்றால், மிகையல்ல. சீர் தூக்கி பார்த்த பிறகு தான், கடைசி வரை, திரு.வி.க. என்ற காந்தியவாதி, மார்க்சிஸ்ட் என்று தன்னை அடையாளம் காட்டிக்கொண்டார். அவரே எனக்கும் மார்க்க் பந்து. பீடிகை பலமாயில்லை! ஆனல், கவரேஜ் போறாது. விஷயத்துக்கு வருவோம்.
இன்று திரு.ஸோம்நாத் சட்டர்ஜி அவர்களின் ஜென்மதினம்: ஜூலை 25,1929. சொல்லப்போனால், இரண்டு நாட்கள் முன்னாலேயே, இவரை பற்றி எழுதியிருக்கவேண்டும். ஏனெனில், நாற்பது வருடங்களாக மார்க்சிஸ்ட்டாக திகழ்ந்த இந்த தலைவர், ஜூலை 23, 2008 அன்று அந்த கட்சியிலிருந்து, கடாசப்பட்டார். அக்காலம், புகழுடன், நமது நாடாளுமன்றத்தின் தலைமை தாங்கிய திரு. சட்டர்ஜி, அந்த பதவியின் மரபுக்கு மரியாதை கொடுத்ததால், கட்சியின் யதேச்சதிகார ஆணைக்குக் கட்டுபடவில்லை. குறுகிய நோக்கில் பார்த்தால், கட்சி தோற்றது. அந்த கோபத்தில், இவரை வெளியே வீசி, இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி, தன் தலையில் மண்ணை வாரி வீசிக்கொண்டது. மேலதிக விவரங்கள்:
அந்த கட்சி சாஸனத்தின் ஷரத்து: 19 (13) படி, கட்சி, தடாலடி நீக்கம் செய்ய முடியும். நீக்கப்பட்ட அங்கத்தினருக்கு தன்னிலை விளக்கம் அளிக்க உரிமை கிடையாது.
இத்தனை சொல்கிறீர்களே, அப்றம் கம்யூனிசத்தை ஏன் ஆதரிக்கிறீர்கள் என்று சிலர் கேட்கிறார்கள். என் செய்வது? நான் ஆதரிப்பது கார்ல் மார்க்ஸ் அவர்களின் சித்தாந்தங்களில் சில. பந்தாடுகிறர்கள், கம்யூனிஸ்ட் என்று வளைய வருபவர்கள், அவற்றை. எனது அணுகுமுறையில், ஜனநாயகத்திற்கு மதிப்பு அதிகம். அதை எல்லாம் கட்டிக்கொண்டு அழும் இடம் இது இல்லை. இது திரு.ஸோம்நாத் சட்டர்ஜி அவர்களுக்கு வாழ்த்துக்கூறும் பதிவு.
speaker_last_stand-313.jpg இன்னம்பூரான் speaker_last_stand-313.jpg http://static.ibnlive.com/pix/sitepix/03_2009/speaker_last_stand-313.jpg 25 07 2011 http://static.ibnlive.com/pix/sitepix/03_2009/speaker_last_stand-313.jpg உசாத்துணை: http://www.telegraphindia.com/1080724/jsp/frontpage/story_9593437.jsp
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 16:33, 28 ஜூலை 2011 (UTC) |
