அன்றொரு நாள்: ஜூலை 22மரபு விக்கி இருந்துஇன்னம்பூரான் பெரிய எழுத்து விக்ரமாதித்யன் கதையில் தாத்தாவும் பாட்டியும் ஆழ்ந்து விடுவார்கள் என்றால், பறக்கும் ஜமக்காளம், மாயா மச்சீந்திரா, மயில் ராவணன், பாதாள பைரவி, கொள்ளிவாய் பிசாசு, குட்டிச்சாத்தான், சுண்டெலியும் சிங்கராசாவும், மந்திரக்கோல் மன்னார்சாமி எல்லாம் குழந்தைகளை வசீகரம் செய்து நிர்விகல்பசமாதி போல் ஒரு மோன நிலைக்கு அழைத்து செல்வது நடக்கக்கூடியதே. நம்மூர் பஞ்சதந்திரக்கதைகளின் கற்பனாசக்தி அபாரம். அதே மாதிரி கிரிம்ஸ் ஃபேரி டேல்ஸ். மற்றும் பல. சிறுவர் இலக்கியம் என்ற போர்வையில், இவை நம்மை எந்த வயதிலும் கவருபவை. ராபெர்ட் ப்ரெளனிங்க் 22 ஜூலை 1284 என்கிறார். சிலர் ஜூன் 26 என்கிறார்கள். தேதி முக்கியமில்லை. கற்பனையை நிஜமாக்கி, அதை மறுபடியும் கற்பனா சக்தியாக அனுபவிப்பது தான், இலக்கு. இனிமேல் ஹாம்லின் குழலிசையோன் (The Pied Piper of Hamelin) என்ற பாடலை, கதையை, சித்திரங்களாக பார்ப்பது தான், அழகு. கதையை சுருக்கமாக சொல்லிவிட்டு, படங்களுக்கு இணைப்பு தருகிறேன். விருப்பமுள்ளவர்கள் பாட்டையும் கேட்டு, முணுமுணுக்கவும். வண்ணங்கள் பல பூசிய கோட்டும், கோணல் குல்லாயும் அணிந்த கோமாளி, குழலிசைத்த வண்ணம், வந்தானையா, ஹாம்லின் ஊருக்கு. காசு கொடுத்தால், குழலூதி, எலிகளையும், சுண்டெலிகளையும் மயக்கி அழைத்து சென்று, வெஸ்ஸர் நதியில் மூழ்கடிப்பேனே என்று சத்தியமும் செய்தானே! செஞ்சும் காமிச்சானே, குரு! ஹாம்லீன் ஊரார் கட்டப்பஞ்சாயத்தார் என்க. எலியும் போச்சு. சுண்டெலியும் போச்சு. காசு கிடையாது போடா என்றார்களாமே! அவனோ தனியாள். பயந்த ஸ்வபாவம். மனம் கசந்து, உளம் கசங்கி, உடல் வருந்தி, ஓடிட்டானாம். ஜூலை 22, 1284: (ஜூன் 26,1284?) வந்தானே மச்சான், பூ மணத்தோடெ, சிவப்பு குல்லா போட்டுக்கிணு. மக்கள் எல்லாரும் மாதா கோயில்லெ கும்பிடுறாக. இவன் குழலூதறான். மயங்கிப்போறாக, சின்னப்பசங்க. இவன் பின்னாலே ஓடுதுஹ. இவனும், ஈவு, இரக்கமில்லாமா, நதிக்கரை போறானையா! ஆனா வேறெ எங்கேயோ, ட்ரான்ஸிவல்ேனியா?, கொண்டுப்போய்ட்டான்யா! கொண்டுப் போய்ட்டான்யா! 130 பசங்களை காணோம். ஒரு குருடு, ஒரு செவிடு தப்பிச்சுதப்பா! ஒரு பய தன்னோட கோட்டை தேடிக்கிட்டு வந்தான் குளிர்துன்னு: தப்பிச்சுட்டான். மெத்தப்படிச்ச சில பேரு சொல்றாக. இது ஜெர்மனிலேருந்து கிழக்கு ஐரோப்பாவுக்கு ஏழை ஜனங்க புலன் பெயர்ந்த நிஜத்தை கதையாக்கி, அந்த கதையை நிஜம் போல சொல்லி, இரண்டையும் இலக்கியமாக்கிட்டாஹ என்று.
நாம என்னத்தை கண்டோம், வெள்ளந்தி ஹாம்லியோன்ஸ்? ‘ஸ்டூவர்ட், த லிட்டில்’: சினிமா பாத்தேளோ?
இன்னம்பூரான் 21 0 2011
http://www.wpclipart.com/fictional_characters/childrens_books/Pied_Piper/Pied_Piper_1.jpg http://www.stevenkellogg.com/new_books/2011/piedpiper.jpg உசாத்துணை:
http://www.indiana.edu/~librcsd/etext/piper/
சித்திரமும், கவிதையும் பிரமாதம். நேரம் ஒதுக்கி, பயாஸ்கோப் பாருங்கள்: தாத்தா-பாட்டி, புருஷன் -பொண்டாட்டி, காதலன் -காதலி, பாப்பாஸ் & பையாஸ்!
http://www.hameln.com/tourism/piedpiper/rf_sage_gb.htm Download the Hamelin Piper Song Download the Hamelin Piper Song from the Musical "The Pied Piper of Hamelin" by G. Schröder. To listen to the song you need an MP3-player.
DOWNLOAD Hamelin Piper Song (2,3 MB; mp3-file; 2′30′′ time). composition and lyrics: G. Schröder engl. lyrics: M. Boyer singing, bass guitar: M. Weber arrangement, keyboards: J. Matusczyk Lyrics of the Pied Piper Song (pdf-file
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 12:50, 25 ஜூலை 2011 (UTC)
|




