அன்றொரு நாள்: ஜூலை 18மரபு விக்கி இருந்துஎந்த ஒரு செய்தியோ, தகவலோ, சுவை பட அமைந்து விட்டால், ஆதாரமற்ற/ஆதாரமிழந்த வதந்தியாயினும், சாஸ்வதமாக உலா வந்து நம்பப்பட்டுவிடும். இந்த ஒரு மனித பலவீனத்தை சாதகமாக வைத்துக்கொண்டு தான் பொய் பிரச்சாரங்கள் நடக்கின்றன. ஹிட்லரின் கொடுங்கோலாட்சிக்கும் துணை நின்ற அவருடைய பிரச்சார அமைச்சர் கெப்பல்ஸ் ‘பலமுறை அழுத்தம் திருத்தமாகச் சொன்னால், ‘பொய் வாய்மையாகுமே’ என்று திருவாய் மலர்ந்து அருளினார். ‘ரோமாபுரி பற்றி எரிந்த போது (ஜூலை 18, 0064 கி.பி.) மன்னன் நீரோ ஃபிடில் வாசித்துக்கொண்டிருந்தான்’ என்பது ஒரு பழமொழியாகவே ஆகிவிட்டது. ஆனால், சில வரலாற்று ஆய்வுகள் இந்த கூத்து நடக்கவில்லை என்றும், நீரோ அரண்மணையிலிருந்து ஓடோடி வந்து, தன்னுடைய மெய்க்காப்பாளர்கள் கூட அருகில் இல்லாமலிருந்தாலும், தன் பாதுகாப்பை த்ருணமாக பாவித்து, தீயணைப்பதில் ஈடுபட்டான் என்றும் கூறுகின்றன. நடந்தது என்னமோ மாபெரும் தீ விபத்து. வேனிற்காலத்துக் காற்று பலமாக வீசி, மரத்தாலான கட்டிடங்கள் பற்றி எரிந்தன, ஒரு வாரத்துக்கு. ரோமாபுரியின் பெரும்பகுதி அழிந்தது. படிப்பினை யாதெனில், கட்டுக்கதைகளை வரலாறு ஆக்கி விடாதீர்கள் என்பதே.
இன்னம்பூரான் 18 07 2011
உசாத்துணை: http://www.eyewitnesstohistory.com/rome.htm
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 07:50, 18 ஜூலை 2011 (UTC) |
