அன்றொரு நாள்: ஏப்ரல் 17மரபு விக்கி இருந்துஇன்னம்பூரான்
ரத்தமின்றி...!
மக்களாட்சி என்ற சொல் இங்கிலாந்தில் உச்சரிக்கப்பட தொடங்கியகாலம்: 1642 - 1652. ஆலிவர் கிராம்வெல் தலைமையில், பார்லிமெண்டேரியன் கட்சி ராஜவிசுவாசிகளை துரத்தியடித்த காலம். அவர்கள் சிலித்தீவுகளில் அடைக்கலம் நாடினர். நெதர்லாண்ட் (டச்சு) கிராம்வெல் பக்கம். (ஞாயிறு அன்று, இங்கு பில் மார் என்ற ‘கேலிப்பேச்சு பேசி, எல்லாரையும் ‘கல கல’வெனெ சிரிக்க வைத்து, கல கல என்று கல்லாப்பெட்டியை குலுக்கும் வாயாடியின் நிகழ்வுக்குப் போயிருந்தோம். அத்தருணம் நெதெர்லாந்தின் கடலணைகள் பற்றி பேச்சு வந்த போது, நான் ‘அது நெதர்லாந்து- அதாவது -பாதாள லோகம் என்று கேலி செய்தேன். ‘என்னது இது! பில் மாருக்கு அண்ணனாக இருக்கிறீர்களே, என்று அதீத கேலி செய்தார், எதிர்வீட்டுக்காரி. இது நிற்க. இது உட்காராது அல்லவா. அதான்.). இது தான் சாக்கு என்று ராஜ விசுவாசிகள் கட்சி டச்சுக்கப்பல்களை உடைக்க, அங்கிருந்து வந்து சேர்ந்த சண்டைக்காரன் அட்மிரல் ட்ரோம் நஷ்ட ஈடு கேட்டார். சரியான பதில் கிடைக்காததால், (தேதியை நோட் செய்து கொள்ளவும்.) ஏப்ரல் 17, 1651 அன்று ‘டம் டமார் டுமீல்’ என்றெல்லாம் ஜயபேரிகை கொட்டாமல் (உடுக்குக் கூட அடிக்க முடியாத இக்கட்டான நிலை: இங்கிலாந்து முழுதும், க்ராம்வெல்லுக்கு ஆதரவு. அடி விழும்.), சிலி மேல் மட்டும் வீரமாக, யுத்த பிரகடனம் செய்தார்.) போதாத காலம்! இங்கிலாந்திலிருந்து வந்த அட்மிரல் ராபெட் ப்ளேக், சிலியில் ஒளிந்திருந்த ராஜவிசுவாசிகளை ஒரு கை பார்க்க, இந்த டச்சு பிரகடனம் லொட லொடவாயிற்று. தேஞ்சும் போயிடுத்தா, யாரும் கவனியாமல், 335 வருடங்கள் இது ஒரு அமைதி யுத்தமாயிற்று. ஆக்ச்சுவல்லி, அட்மிரல் ட்ரோம் செய்தது சொந்த சாஹித்யம். டச்சு அரசு ஆணையொன்றுமில்லை. எனவே, மற்றொரு சாதனை. இந்த போருக்கு துவக்கமில்லை; முடிபு மட்டும் தான். கேட்கவே நன்றாக இருக்கிறது. உங்களுக்கெல்லாம் ஒரு ஹோம் ஒர்க். பி.கு. பார்க்கவும்.
உசாத்துணை:
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 02:01, 26 ஏப்ரல் 2012 (UTC) |