அன்றொரு நாள்: ஆகஸ்ட் 22மரபு விக்கி இருந்துஐரோப்பிய நாடுகளின் கலோனிய அரசியலின் இலக்கே அடிமை நாட்டின் வளங்களை அபகரிப்பதே. அடிமை நாட்டில் ஒற்றுமை இருந்தால், அதை குலைத்து விடுவார்கள்; இல்லையெனில், பிரிவினைக்குக் கொம்பு சீவி விடுவார்கள். நாட்டுப்பற்றை தேசத்துரோகம் என்பர். கென்யா என்ற ஆஃப்பிரிக்கன் நாட்டின் விடுதலை தந்தையும் (‘பாபா வா டைஃபா’), அந்த தேசத்தின் மேன்மையான வளர்ச்சிக்கு வித்திட்டவரும், இருபதாம் நூற்றாண்டின் பீஷ்மர்களில் ஒருவராகக் கருதப்படும் ஜோமோ கென்யட்டா அவர்கள், மும்முரமான பணியில் இருந்தபோது அமரரானார். வயது 89; தேதி: ஆகஸ்ட் 22, 1978. கிக்குயூ, கலோனிய அரசால் அசட்டை செய்யப்பட்ட, பழங்குடிகளின் பண்பாடு,கலாச்சாரம், வாழ்நெறி, மண்ணின் குரல். அதை ஹில்டன் - யங்க் (இந்தியாவுக்கும் வந்தவர் தான்) கமிஷனுக்கு எடுத்துரைக்க, அரசியல் பிரவேசம், 36 வயதில். லண்டனில் மஹாத்மா காந்தியை சந்தித்தார், 1932 இல். 1953 இல் தொடங்கிய சிறை வாசம் எட்டு வருஷங்கள் வரை அவரை துன்புறுத்தியது. ஜூன் 1, 1963 அன்று கென்யாவின் பிரதமரானார். டிசம்பர் 12, 1963 அன்று விடுதலை விழா. டிசம்பர் 12, 1964 அன்று கென்ய குடியரசு பிரகடனம். கென்யாட்டா ஜனாதிபதியானார். ( இது பற்றியும், அவரை பற்றியும் நாம் அறிய வேண்டிய விஷயங்கள் பல உளன. ) இந்தியா செய்யாத புதுமையை பத்தே வருடங்களில் புகுத்தினார் ~ இலவச அடிப்படை கல்வி. நான் இப்போது சொல்ல விழையும் விஷயம் வேறு. இவருடைய உலக பிரசித்தி பெற்ற ஜூலை 16, 1952 சொற்பொழிவை நாமும், நம் அரசுகளும், இன்றைய சூழ்நிலையில், உன்னிப்பாகக் கேட்க வேண்டும். அதிலிருந்து சில துளிகள்: “...கென்யா ஆஃப்பிரிக்கா யூனியன் நீ தான்... நம் இனங்கள் யாவும் ஒன்று படவேண்டும்....உண்மையான ஜனநாயகத்திற்கு நிறபேதம் கிடையாது...இந்த மண் நமது. நம் பிரிதிநிதிகளை நாம் தான் தேர்ந்தெடுக்கவேண்டும். தலைமை நமதே. உழைப்புக்கு ஏற்ற ஊதியம்...யாவரும் சமானமானவரே..அந்த நிலை நாளை வேண்டாம்; இன்றே வேண்டும்...நாம் லஞ்ச லாவண்யத்தை வெறுக்கிறோம்...மக்களை அடக்கி ஆளுமை கோலோச்சும் வரை அதை ஒழிக்க முடியாது... நாம் மதியீனர்களாக இருக்கிறோம்...ஒருவர் கூட திருடக்கூடாது... நமக்கு கெட்ட பெயர் கற்பிக்க தீயோர் சுற்றியுள்ளனர்...ஒரு நாளும் உங்களை கேடு செய்ய சொல்லமாட்டேன். ஒருமையுடன் கடுமையாக உழையுங்கள்...இந்த பாழாய்போன குடிப்பழக்கத்தை ஒழியுங்கள்...எல்லா தீமைகளுக்கும் அது தான் மூலம்...நான் வன்முறை போதிக்கவிலை...‘கல்லால் அடித்தால், அவன் திருப்பி அடிப்பான். நியாயத்தால் அடிபட்டவன் திரும்பி வரமாட்டான்.’ இது நம் பழமொழி...கரம் குவித்து வேண்டுகிறேன். நாம் விடுதலை நாடுகிறோம். அதற்கு, குற்றம் செய்வதை நிறுத்தவேண்டும்... பிரிட்டீஷ் அரசாங்கம் நம்முடன் சமாதானம் பேச வருகிறது...நமது மேன்மையை, நற்பண்பை, அவர்களுக்குக் காட்டவேண்டும்...’ என் குறிப்புக்கள்: இவரின் கடுந்தவம் தொடங்கிய காலத்தின் பேச்சு இது: 1952: ஒப்புமை: இந்தியாவில் ஆகஸ்ட் 1942. இந்திய குடியரசு 1950: கென்யா குடியரசு: 1964. இன்னம்பூரான் !Bi1sH-!Bmk~$(KGrHqQOKjYEslvmdE-gBLQ8dJ!)K!~~_35.JPG22 08
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 14:56, 24 ஆகஸ்ட் 2011 (UTC) |