அன்றொரு நாள்: ஆகஸ்ட் 12மரபு விக்கி இருந்துஅவளொரு பெண். அவளொரு யுவதி. அவளொரு அழகிய வசீகரிணி. அவளொரு புதிர். யாரை சொல்கிறீர்கள்? அஃப்ரோடைட்? ஹெலன் ஆஃப் ட்ராய்? மோனா லீஸா? சிலம்பின் மாதவி? அன்னை தெரஸா? இல்லை. இத்தனை அடைமொழிகளுக்கு ஏகபோக உரிமை கிளியோபாட்ராவுக்கே. ஆனால். பொத்தாம்பொதுவாக, பெரும்பாலோர் அங்குமிங்கும் புரிந்து கொண்ட சூழ்ச்சிக்காரி அல்ல, நான் குறிப்பிடும் கிளியோபாட்ரா. அவளொரு பெண். அவளொரு யுவதி. அவளொரு அழகிய வசீகரிணி. அவளொரு புதிர். அதே பெண்ணரசி தான். ஆனால் அவள் வேறு. “இரண்டாயிரம் வருடங்களாக, பொய்யும், புனைசுருட்டுமான அழுக்குத்திரையால் மூடப்பட்டு கிளியோபாட்ரா ‘ரதி/காமக்கிழத்தி/சூழ்ச்சிராணி...’ என்றெல்லாம் அசிங்கப்படுத்தப்பட்டுள்ளாள். அதை சுரண்டி எடுத்து, அவளுடைய ராஜ தந்திரத்தையும், அரசியல் திறனையும் அலசி, அவலை ஒரு ராணுவ தடவாள ஒப்பந்த வல்லுனராகவும், பெருமை கொள்ளும் அன்னையாகவும், நகைச்சுவையுடன் அளவளாவுபவராகவும், ஆய்வு பல செய்து, ஆதாரங்களுடன் திருமதி ஸ்டேஸி ஸிஷ்ஃப் அளித்திருக்கும் கிளியோபாட்ராவின் வாழ்க்கைச்சரித்திரம், ஒரு அருமையான, தராதரமுள்ள நூல். அவர் கிளியோபாட்ராவை நிஜமாகவே புனருத்தாரணம் செய்து விட்டார்...” ~ இது ஒரு மதிப்பீடு. ‘...ஷேக்ஸ்பியர், தாந்தே போன்ற பெரிய எழுத்து மன்னர்களையும், மன்கீவிச்ஸ் போன்ற பிரபல சினிமா டேர்க்டர்களையும் ஒரு வழி செய்து விட்டார், இந்த ஆசிரியர். பெண்ணினத்தை ஆடுமாடாக நடத்திய காலகட்டத்தில் கிளியோபாட்ரா ராஜ்யபாரம் வகித்த அருமை,பெருமையை ஸ்தாபிதம் செய்து விட்டார். அவருடைய சொல் ஆளுமை அபாரம். நம்மை தொன்மை எகிப்துக்கு அழைத்துக்கொண்டு செல்லும் லாகவத்தை பாருங்கள். ~ இது ஒரு மதிப்பீடு. ‘ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணியை’ போல, 269 மதிப்பீடுகளை முதல் ஈடாக பெற்ற நூல்: Stacy Schiff (2010) Cleopatra, A Life: NY: Littile Brown & Company
உசாத்துணை ( பல பக்கங்களை இங்கு படிக்கலாம்)http://www.amazon.com/dp/0316001929/ref=rdr_ext_tmb
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 13:09, 16 ஆகஸ்ட் 2011 (UTC) |