இன்னம்பூரான்
மின்னலை இற்செறித்து, பூமியின் சக்தியை, மனிதனின் சுமையிறக்க, வழங்கியவர், தாமஸ் ஆல்வா எடிசன்’
~ லூயி பர்பாங்க்: அவரது அத்யந்த நண்பர்.
எழுதணும் என்று ஆரம்பித்து விட்டால், முதல்லெ படிக்கிறது நாம தான், மத்தவாளாலெ முடியறதோ இல்லையோ? சொல்லி வாயை மூடலெ. கிண்டல் மன்னன் தேசிகன் கேக்கறார், ‘கபிலரும், பரணரும், இப்படியா ரூம் போட்டு எழுதினாஹ?’ ~ பாயிண்ட் மேட் சுவாமி! ஆளை விடும். உருளைக்கிழங்கு வறுவல் வறுக்க பெஸ்ட்: ரஸ்ஸட் பர்பாங்க் உருளை ரகம். அதை உலகக்கு அறிமுகம் செய்தவர், இந்த லூயி பர்பாங்க் ~ உலகம் போற்றிய தாவர இயல் நிபுணர், தோட்டக்கலை வல்லுனர், விவசாய விஞ்ஞானி. அவரை பற்றி எழுதவேண்டும், மார்ச் 7, 2012 அன்று, பொழச்சுக்கிடந்தால்.
மின்விளக்கு இல்லையெனில், கல்வி கலவியுடன் நின்று போயிருக்கும் :-) அக்டோபர் 21, 1879 அன்று 14 மாத கடும் உழைப்பிற்கு பிறகு ஒரு மின் விளக்கை 13 1/2 மணி நேரம், தாமஸ் ஆல்வா எடிசன் எரிய வைத்தார். இத்தனைக்கும் எழுபது வருடங்கள் முன்னதாகவே, இந்த ஆராய்ச்சி, ஸர் ஹம்ஃப்ரி டேவிட் தொடங்கியது. எடிஸனுக்கு ஆன செலவு, இன்றைய கணக்குப்படி 425 லக்ஷம் ரூபாய்! அதெல்லாம் போய் இப்போ எல்.ஈ.டி.பல்ப் வந்துருச்சு. விஞ்ஞான கண்டுபிடிப்புகளில் திளைத்த எடிஸன் முதல் விஞ்ஞான இதழ் ஆரம்பித்தவர்; காப்புரிமை வீரர்; முதல் மின் உற்பத்தி நிலையத்தை 1882ல் ஆரம்பித்தவர். மென்லோ பார்க் என்ற விஞ்ஞான ஆய்வுக்களத்தை நிறுவி 40 ஆய்வாளர்களை சம்பளத்திற்கு அமர்த்தியவர். விளம்பர பிரியர். பாத்திரமறிந்து நன்கொடை அளிப்பவர். ஜோக்கும் அடிப்பார். அடிக்கடி தன் தோட்டத்தில் பார்ட்டி கொடுப்பார். ஒரு நண்பர் கேட்டார்,‘என்ன தாமஸ்! உன்னுடைய சுழல் கதவை சாமான்யமாக திறக்க முடியவில்லையே.’ ஐயா பதில்: ‘ சாமி! நீ அந்தக்கதவை ஒரு சுத்து சுத்தினா, தோட்டத்துக்கு ஏழு குடம் தண்ணீர் பாயும்!’
நான் தேசிகனிடம் சொன்னேன். சி. ஜெயபாரதன் என்ற விஞ்ஞானி எடிஸனை பற்றி தமிழில் கட்டுரை வடித்திருக்கிறார். அதை உசாத்துணையாக போட்டு, ‘அரைச்ச மாவை வெழுமூனா அரைக்காமல்’, அதை இஷ்டப்பட்டவர்கள் படிக்கட்டுமே என்று சொல்வதாக உத்தேசம். இரண்டு படம் மட்டும் சேர்த்துடறேன். என்ன சொல்றீர் என்று கேட்டேன். ஏதோ பெரிய ஞானியைப்போல், ‘உன் தியாக உணர்ச்சியை மெச்சினோம்’ என்றார்.
இன்னம்பூரான்
21 10 2011
பி.கு.1. மின்னலை பிடிச்சவர் பெஞ்சமின் ஃப்ராங்க்லின். அந்த கதை வேணுமோ?
பி.கு. 2. விருப்பமுள்ளவர்கள் தீபாவளி வாழ்த்துக்களுக்கு இவ்விழையில் பின்னூட்டலாமே :-)
http://www.avenuestosuccess.com/.a/6a00d835163fd253ef012875e414e0970c-320wi
http://www.archives.gov/historical-docs/doc-content/images/edison-patent-light-bulb-m.jpg
உசாத்துணை
http://jayabarathan.wordpress.com/2010/02/22/Edison/
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 06:09, 23 அக்டோபர் 2011 (UTC)