அகநானூறு - இயற்கையோடு இயைந்த வாழ்வுமரபு விக்கி இருந்துசங்கப் பாடல்களின் முக்கிய சிறப்பியல்பு மானிட வாழ்வின் மீது, அதன் இன்ப,துன்பங்களின் மீது அதற்குள்ள அக்கறையே ஆகும். ஆனால், எந்த ஒரு பாடலும் இயற்கையை விட்டு முற்றிலும் விலகி நிற்க இயலாது. இயற்கை மானிட வாழ்வின்ஒரு நாடகம் அரங்கேறும் மேடையாகவும், பின்னணியாகவும் சங்க இலக்கியத்தில்
இயற்கை அதன் எல்லாத் தன்மைகளிலும் முக்கியத்துவம் பெற்று, மனித வாழ்க்கையை வண்ணமயமாக்குகிறது. அதாவது, இயற்கையின் முன்னிலையில் மனிதன் பெறும் உணர்ச்சிகளைத் தெளிவாகக் காட்டுகிறது.
காதலனைப் பிரிந்து துயருறும் தலைவிக்கு கடல்நீரின் "இழும்" எனும் ஓசை, தன் சொந்த அழுகுரலைப் போலவே கேட்கிறது (கலி.129). கடல் அவளோடு சேர்ந்து அழுவதாகத் தோன்றுகிறது. சில வேளைகளில் முரண்பாட்டுக்குரல் ஒலிக்கிறது. எதிர்ப்பு அல்லது அலட்சியம் உணரப்படுகிறது. அதே தலைவி, சில வேளைகளில், அலைகள் நிரம்பிய கடல் அவளுடைய துயரங்களை ஒரு பொருட்டாகக் கருதாமல் இரக்கமற்று இருப்பதாகவும் உணர்கிறாள் (ஐங்.141).
இவ்வாறு மாறிவரும் மன நிலைகளின் அழுத்தத்தைக் காட்ட, சங்கப் புலவர்கள் இயற்கையைக் கருவியாக்கிக் கொண்டனர். இது உணர்வை பலப்படுத்த இயற்கையைப் பயன்படுத்திய நிலை. அதே இயற்கை, உணர்வை ஏற்படுத்துவதும் உண்டு.
இயற்கையின் வருணனை நம் கண்முன் காட்சியாய் விரியும் வண்ணம் அமைந்து சிறக்கிறது. கண்டும் கேட்டும் இன்புறுதற்கான நாட்டியக் கலையின்சொல்லோவியத்தை அகநானூற்றுப் பாடல்களில் காணலாம்.
இனிமையும் எழிலும் கொண்டமைந்த ஆடற்கலை, சங்ககாலத் தமிழ் மக்களின் கலை வாழ்க்கையில் உயர்ந்த இடம் பெற்றுத் திகழ்ந்தது. அவர்களுடைய பண்பாடுமிக்க வாழ்க்கையைத் தம் பாடல்களில் புலவர்கள் பாடி, அக்கலைச் சிறப்பைப் போற்றியுள்ளனர். மக்கள் மன்றத்திலும் மன்னர் அவையிலும் செல்வாக்குப் பெற்றமையால், புலவர்கள் நாவிலும் கற்பனையிலும் அக்கலை இடம் பெற்றது.
அகநானூற்றில் இடம்பெற்ற கபிலரின் இக்கற்பனை ஓவியம், குறிஞ்சி நில வளத்தையும், நலத்தையும் குறிக்க எழுந்ததாயினும், தமிழ் மக்களின் வாழ்வில் அன்று சிறப்பிடம் பெற்றிருந்த இசையும், நாடகமும் எய்தியிருந்த சிறப்பை அடிப்படையாகக் கொண்டும் அமைந்துள்ளது.
குறிஞ்சி, எழில் நலமிக்க நீலமலைச் சாரல்; அங்கு நெடிது வளர்ந்து, அசைந்தாடி நிற்கும் மூங்கில்; அவற்றில் வண்டுகளால் துளைக்கப்பட்ட துளை; அதனிடையே விரைந்து வீசும் காற்று; புல்லாங்குழலின் ஒலி அங்கு தானாய்
"ஆடமைக் குயின்ற அவிர்துளை மருங்கில் கோடை யவ்வளி குழலிசை யாகப் பாடின் அருவிப் பனிநீர் இன்னிசைத் தோடமை முழலின் துதை குரலாகக் கணக்கலை இகுக்கும் கடுங்குரல் தூம்பொடு மலைப்பூஞ் சாரல் வண்டு யாழாக இன்பல் இமிழிசை கேட்டுக் கலிசிறந்து மந்தி நல்லவை மருள்வன நோக்கக் கழை வளர் அடுக்கத்து இயலி ஆடும்மயில் நனவுப் புகு விறலியில் தோன்றும்." (அகம். 82: 1 -10)
கவிஞர்தம் கற்பனையில் குறிஞ்சி மலைச்சாரல் அழகிய ஆடுகளமாகிறது; மூங்கில் துளைக் காற்றின் இசை குழலோசை; முழங்கி இறங்கும் அருவியின் ஒலி முழவோசை; மான்களின் சத்தம் பெருவங்கிய ஓசை; வண்டுகளின் முரற்சி யாழோசை என அமைந்து, இனியதொரு குழுவின் இசையாக விளங்குகிறது. மயில் விறல்பட ஆடும்
சங்ககாலத் தமிழ் மக்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வினர். காடு, மலை, கடல், வயல் ஆகிய நானில இயற்கை, இளமையில் அவர்களின் தாய்மடியாகவும், வளர்ச்சியில் பள்ளியாகவும் திகழ்ந்தது. திங்களும் தென்றலும், புல்லும்
நன்றி:- தினமணி --Ksubashini 17:11, 24 மே 2010 (UTC) |