"ரைஸ் கிரிஸ்பீஸ்" கண்டு பிடித்தது யார்?

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

தமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள்

ச.சுவாமிநாதன், எம்.ஏ., (பிரித்தானியா)

"ரைஸ் கிரிஸ்பீஸ்" கண்டு பிடித்தது யார்?

மேலை நாடுகளில் வாழும் சிறுவர்களும், பெரியோர்களும் காலையில் எழுந்தவுடன் பாலில் ஏதேனும் ஒரு தானியத்தைக் கலந்து (Breakfast Cereal)சாப்பிடுவதைக் காண்கிறோம். ஆனால் இன்று தமிழகத்திலோ, இலங்கையிலோ இதை அரிதாகவே காண்கிறோம். ஒரு வியப்பான செய்தி என்னவென்றால் பாலில் பொரியைக்கலந்து (Rice Crispies)சாப்பிடும் வழக்கத்தைத் தமிழந்தான் ஐரோப்பாவில் பரப்பினான் போலும். இதற்குத் தக்க சான்று சங்க இலக்கியத்தில் ஒரு நூலான குறுந்தொகையில் உள்ளது.

"யாங்கு வல்லுநள் சொல்தானே ஏந்திய
செம்பொற் புனை கலந்து அம்பொரிக்கலந்த
பாலும் பல என ஊண்ணாள்
கோல் அமை குருந்தொடித்தளிர் அன்னோளே."

--குறுந்தொகை பாடல் 356

கயமனார் என்னும் புலவர் பாடிய இப்பாடலில் "கையில் ஏந்திய செம்பொன்னால் ஆன பாத்திரத்தில் உள்ள அழகிய பொரியோடு கலந்த பாலையும்" சாப்பிடத் தயங்கும் என் மகள் இன்ரு காதலன் கொடுத்த கலங்கிய தண்ணீரையும் சாப்பிடுகிறாள்" என்று கூறுகிறார். தங்கக் கிண்ணத்தில் "ரைஸ் கிரிஸ்பீஸ்" சாப்பிட்டது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.

அரிசியையோ, நெல்லையோ மேலை நாட்டார் பழங்காலத்தில் சாப்பிட்டதில்லை. தமிழர்கள் மட்டுமே சாப்பிட்டு வந்தனர். ஆகையால் பாலுடன் பொரியைக் கலந்து சாப்பிடும் வழக்கத்தைத் தமிழனே கற்றுக் கொடுத்தான் என்றால் மிகையில்லை. இதுவே பின்னர் "கார்ன் பிளேக்ஸ்" (Corn flakes) போன்ற பலவகை தானிய உணவுகளுக்கும் அடிகோலியிருக்க வேண்டும்.


நெல்லிக்கனி மகிமை


நெல்லிக்காயை முறையாகச் சாப்பிட்டால் இளமை பெருகும், ஆயுள் வளரும் என்பது எல்லாருக்கும் தெரியும். "சியவனப் பிராஸ்" என்ற நெல்லிக்காய் லேகியத்தை இன்று பல ஆயுர்வேத, சித்த வைத்திய நிறுவனங்கள் ஏராளமாக விற்றுப் பணம் சம்பாதிக்கின்றன. இந்த நெல்லிக்கனி மகிமையையும் தமிழர்கள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அறிவர்.


ஆயுளை வளர்க்கும் அருமையான நெல்லிக்கனி கிடைத்தபோது, அதைத் தான் உண்ணாமல் அதை ஒளவையாருக்கு அளித்தான் கடையெழு வள்ளல்களில் ஒருவனான அதியமான் நெடுமான் அஞ்சி.

"பெருமலை விடரகத்து அருமிசை கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது
ஆதல் நின்னகத்து அடக்கிச்
சாதல் நீங்கி, எமக்கு ஈத்தனையே

--புறநானூறு பாடல் 91

ஆயுள் வளர்க்கும் எளிய வழியினைப் புறநானூற்றுப் பாடல் மூலம் நமக்கு அளித்த ஒளவையாரை வாழ்த்துவோம்


--Geetha Sambasivam 01:31, 17 நவம்பர் 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 17 நவம்பர் 2011, 01:31 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,728 முறைகள் அணுகப்பட்டது.