வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

Amen: The autobiography of a nun - நூல் விமர்சனம்

From மரபு விக்கி

Jump to: navigation, search

Amen: The autobiography of a nun by Sister Jesme

ஷைலஜா


’தன் வரலாறு’என்று பொருள்படும் ‘ஆட்டோபயாகிராஃபி’ என்கிற பிரிவு இலக்கிய அந்தஸ்துக்கு உரியதுதானா என்ற விவாதம் ஆங்கில இலக்கிய விமர்சகர்களிடையே நடைபெற்றுள்ளது.

ஆனால் சில சிறப்பான தன் வரலாறுகள் அதன் நடையழகிற்காகவும் சத்தியமான உள்ளடக்கத்திற்காகவும் சுவாரஸ்யமான அனுபவங்களூக்காகவும் சிறுகதை நாவலுக்கு அளிப்பதைப்போலவே அதே இலக்கிய அந்தஸ்தினை விமர்சகர்கள் அளிக்கமுன்வந்தார்கள்.

அரசியல்வாதிகளான் காந்தி நேரு போன்றவர்கள் மற்றும் குஷ்வந்த் சிங் கண்ணதாசன் கிரண்பேடி அப்துல்கலாம் போன்று சிலரின் தன்வரலாறு நூல்கள் வாசிக்க சுவாரஸ்யமானது

தன்வரலாறு என்பது எழுதுபவர்களின் திறந்த டைரிக்குறிப்புகள்தான் அவர்களின் அந்தரங்கங்கள் ஒளிவுமறைவின்றி எழுதப்பட்டிருக்கும்,ஆ்னால் ஆர்கே நாராயணன் எழுதிய என்நாட்கள் (mydays)எனும் தன்வரலாற்று நூலுக்குரிய அத்தனை தகுதிகளையும்கொண்டிருக்காது சற்றே ஏமாற்றிவிடும்!

கேரள மண்ணிலிருந்து கமலாதாஸ் எழுதிய மைஸ்டோரி வெளிவந்தபோது எழுத்துலகில் சலசலப்பு ஏற்பட்டது. கொச்சையாய் பச்சையாய் இருப்பதாகப்பலர் கூறினர். அதே மண்ணிலிருந்து பாலியல்தொழிலாளியான நளீனி ஜமீலா தன்கதையை ஒருபத்திரிகை நிருபரிடம் சொல்லச்சொல்ல அவர் அதை பதிவு செய்து வார இதழில் வெளியிட அது பலரைக்கவர்ந்தது.

அதில் ஒருபாலியல்தொழிலாளியை போலீசும் சமூகமும் தங்கள் துறைக்கு எப்படிசாதகமாக்கிப்பலன் பெறுகின்றன என்பதை வெளிச்சம்போட்டுக்காட்டி இருந்தது அந்த தன்வரலாற்றில் ஒரு ஜீவன் இருந்தது.

பேச்சில் மட்டுமல்ல எழுத்திலும் உண்மை இருப்பின் அது பலரின் மனதை ஊடுருவிச்செல்லும். அந்தவகையில் மிகவும் வித்தியாசமான நூல் ஒருகன்னியாஸ்திரி எழுதி உள்ள என்னும் தன்வரலாற்று நூல் இது

அதிர்ச்சியூட்டும் தகவல்கள் ஆச்சரியமான விஷயங்கள் ஒருகன்னியா ஸ்திரியின் மத கல்விக்கூட அனுபவங்கள் மதம் சார்ந்த கல்விக்கூடம் கல்லூரியில்பணி்யாற்றுகையில் பெற்ற அனுபவங்கள் என தன்கைப்பட ஆங்கிலத்தில் சிஸ்டர் ஜெஸ்மி எழுதி வெளிவந்த நாவல்தான் Amen: The autobiography of a nun

இவரது இயற்பெயர் மீமிரஃபேல் 1956ல்பிறந்தவர் திருச்சூர் பாலக்காடு பெங்களூர் ஆகில் உள்ள கிறிஸ்துவ மிஷின் பள்ளி கல்லூரிகளில் பணிபுரிந்திருக்கிறார்

  • மீமிரஃபேல்

  • ஆங்கில இலக்கியத்தில் எம் ஏ, எம்ஃபில் ,பிஹெடி பட்டம் பெற்றிருக்கிறார் விருப்ப ஓய்வு பெற்று மத நிறுவனக்கட்டுப்பாட்டிலிருந்தும் விடுபட்டுவிட்டார்.

    பெங்குவின் பதிப்பகம் வெளியிட்டுளள இந்த தன் வரலாற்று நூல் புதிர் நிறைந்த ஒருரகசிய வாழ்க்கையின் பல பகுதிகளைக்கொண்டது.வாசிக்கும்போது வியத்தகு அதிர்வலைகளை ஏற்படுத்தும். பெண் என்பதால் பென்ணுக்கே உரிய இயற்கைஉபாதைகளுக்கு உள்ளானவர் வெளியில் பேசிக் கொள்ள முடியாத கூசிக்குறுகி நெஞ்சுக்குள்புதைத்துக்கொண்டு கன்ணீருடன் கழித்த நாட்களை இந்த தன்வரலாறு மூலம் அதிர்ச்சியூட்டும் தகவல்களாகத்தந்து உணர்ச்சிபொஙக்எழுதி இருக்கிறார்

    சற்றே திடுக்கிடுவதுபோல இருந்தாலும் வாசிக்கும்போது மனம் வருந்தாமல் இல்லை. எதையுமே அனுபவித்தவர் கூறும்போது அதன் தாக்கம் அதிகமே அந்த வகையில் பாலியல் வேட்கை வேட்டை என்பது கன்னியாஸ்திரி நன்னறி பள்ளிக்கூட உள் அறைகளில் அரங்கேறும் அவலத்தை அங்குதான் பட்டஇன்னல்களை நிர்ப்பந்தங்களை பட்டவர்த்தனமாய் எழுதி உள்ளார்.

    கட்டுப்பாடுமிகுந்த அந்த கன்னியாஸ்த்ரி மடத்திலிருந்து விடுபட்டு வெளியேற தான் பட்டபாட்டை சிலப்பக்கங்களில் விவரித்திருகிறார்.

    மத குருமார்கள் ஆணோ பெண்ணோ உடலின் இயற்கைவேட்கையிலிருந்து விடுபடமுடியாமல் விதிமீறல்களில் ஈடுபடும் விவரங்கள் மனித இயல்பின் எதார்த்தம் என்ற உண்மையை ஏற்றுக்கொண்டு இந்த நூலைவாசித்தால் நூலின் உண்மையான ஆழத்தைப்புரிந்துகொள்ளமுடியும் இந்த நூல் வெளிவந்ததும் கேரளகிறிஸ்துவ அமைப்புகள் பெரிதும் எதிர்த்தன ஜெஸ்மி ஒரு மனோவியாதி பிடித்த நபர் என்றெல்லாம் கூற முயன்றன.

    பிரும்மச்சரியத்தைப் பலவந்தப்படுத்தி அச்சுறுத்தி கடைபிடிக்க இயலாது என்பதை தனது சொந்த அனுபவங்கள் மூலமாக நூலில் கூறுகிறார் ஜெஸ்மி

    ’இந்த தனவரலாறு கனியாஸ்த்ரிமடங்களின் நேர்மையான் செயல்பாட்டிற்கு உதவினால் மகிழ்வேன்’ என முத்தாய்ப்பாய் ஒருவாக்கியத்தில் எழுதி இருக்கிறார்.

    --Ksubashini (பேச்சு) 04:22, 19 அக்டோபர் 2013 (CDT)

    Contributors

    Ksubashini

    This page was last modified on 19 October 2013, at 09:25. This page has been accessed 2,724 times.