வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

ஹெர்பல் சூப்

From மரபு விக்கி

Jump to: navigation, search

 உமா சண்முகம்


தேவையான பொருட்கள்


சுக்கு மிளகு திப்பிலி -2 டீஸ்பூன்

எலுமிச்சை -1/2 மூடி

இஞ்சி பூண்டு விழுது -1 டீஸ்பூன்

வேக வைத்த பருப்பு -1/2 கப்

மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்

அரிசி மாவு -1 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கொத்தமல்லித் தழை- சிறிதளவு


செய்முறை


வேக வைத்த பருப்பை மசித்துக் கொள்ளுங்கள். அதனுடன் சுக்கு, மிளகு, திப்பிலி, இஞ்சி பூண்டு விழுது, சீரகம், மஞ்சள்தூள் சேர்த்து தேவையான நீர் விட்டுக் கொதிக்க வையுங்கள்.


கொதித்ததும் நீரை மட்டும் வடித்துக் கொள்ளுங்கள்.


இந்த நீரை மீண்டும் கொதிக்க விட்டு அரிசி மாவை நீரில் கரைத்து ஊற்றுங்கள்.


ஒரு கொதி வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி எலுமிச்சைச் சாறு பிழிந்து கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறுங்கள்.










--பவள சங்கரி திருநாவுக்கரசு. 09:59, 27 நவம்பர் 2011 (UTC)

Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 27 November 2011, at 09:59. This page has been accessed 1,694 times.