வைத்தமாநிதி பெருமாள் திருக்கோவில்மரபு விக்கி இருந்துஅருள்மிகு வைத்தமாநிதி பெருமாள் திருக்கோவில் மூலவர் - வைத்தமாநிதிபெருமாள் உற்சவர் - நிஷோபவித்தன் அம்மன்/தாயார் - குமுதவல்லி நாயகி , கோளூர் வல்லி நாயகி தீர்த்தம் - தாமிரபரணி, குபேர தீர்த்தம் பழமை - 1000-2000 வருடங்களுக்கு முன் புராண பெயர் - திருக்கோளூர் ஊர் - திருக்கோளூர் மாவட்டம் - தூத்துக்குடி மாநிலம் - தமிழ்நாடு
பாடியவர்கள்: மங்களாசாஸனம் நம்மாழ்வார் வைத்தமாநிதியாம் மது சூதன னையே யலற்றி கொத்தவர் பொழில் சூழ் குருகூர் சடகோபன் சொன்ன பத்து நூற்றுளிப் பத்து அவன் சேர் திருக்கோளூர்க்கே சித்தம் வைத்துரைப்பார் திகழ் பொன்னுலகாள்வாரே. -நம்மாழ்வார்
தல சிறப்பு:
பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று நவதிருப்பதியில் இது 3 வது திருப்பதி. நவக்கிரகத்தில் இது செவ்வாய் ஸ்தலமாகும். பெருமாள் இத்தலத்தில் தனது வலது தோளுக்கு கீழ் நவநிதிகளை பாதுகாத்து வருவதை இன்றும் நாம் தரிசிக்கலாம்.
நவதிருப்பதியை தரிசிக்க ஒவ்வொரு ஊருக்கும் பஸ் ஏறிச் சென்று வருவது சிரமம். எனவே கார் ஒன்று அமர்த்தி சென்று வந்தால் ஒரே நாளில் அனைத்துத் தலங்களையும் தரிசித்து விடலாம். சென்னையில் இருப்பவர்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு செய்து தருகிறது. மாதம் இருமுறை சென்னையிலிருந்து நடத்தப்படும் இச்சுற்றுலா முதல் மற்றும் மூன்றாவது வெள்ளிக் கிழமைகளில் புறப்படுகிறது.
நவதிருப்பதிகள் என்றழைக்கப்படும் ஒன்பது வைணவ தலங்களிலும் உள்ள பெருமாளே நவகிரகங்களாகக் கருதப்பட்டு வழிபடப்படுகிறது. அதன்படி
1. சூரியன் : ஸ்ரீ வைகுண்டம் 2. சந்திரன் : வரகுணமங்கை (நத்தம்) 3. செவ்வாய் : திருக்கோளூர் 4. புதன் : திருப்புளியங்குடி 5. குரு : ஆழ்வார்திருநகரி 6. சுக்ரன் : தென்திருப்பேரை 7. சனி : பெருங்குளம் 8. ராகு : 1. இரட்டைத் திருப்பதி (தொலைவில்லிமங்களம்) 9. கேது : 2. இரட்டைத் திருப்பதி (தொலைவில்லிமங்களம்)
திருவிழா:
வைகுண்ட ஏகாதசி
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 09:30, 9 மே 2011 (UTC) நன்றி - தின மலர். |
