வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

வள்ளலார் - பிறரை மதிக்கப் பழகுங்கள்

From மரபு விக்கி

Jump to: navigation, search


பிறரை மதிக்கப் பழகுங்கள்

                                                               
TEMPLE VALLALAR.jpg
                          



* உயிர்களிடம் நாம் காட்டும் அன்பும், உணர்ச்சியும் அருள் இரக்கங்களும், இறைவனைப் போல் பயன் கருதாததாய் இருக்க வேண்டும்.


  • தயவு அதிகம் இருப்பவரிடம் கடவுள் இருக்கிறார். தயவு இல்லாதவர்களிடம் கடவுள் இருந்தும் இல்லாமையாய் இருக்கிறார்.


  • கருணை உள்ளத்தோடு சன்மார்க்க நெறியில் நடப்பவர்கள் புண்ணியசீலர் ஆவர். அவர்கள் கூறும் திருவார்த்தைகள் வேதாகமங்களுக்கு நிகரானவை.

வாழ்க்கை ஒரு மாயப்பேழை


  • உலகம் பொன்னுக்கும், பொருளுக்கும் முக்கியத்துவம் அளிப்பதாய் இருக்கிறது. யாரையேனும் நாடிச் சென்றால் இந்த ஆள் நம்மிடம் ஏதேனும் பற்றிச் செல்லத்தான் பலகாலும் வந்து கொண்டிருக்கிறானோ என்று கருதிக் கொள்வார்கள். அதன் காரணமாக அலட்சியமாய் நடந்து கொள்ள முற்படுவார்கள்.


  • எல்லாம் தெரிந்தவர் போல் பிறர்க்கு உரைப்பது மனித இயல்பு. குறைவற்ற அறிவு நாம் பெற்றிருக்கிறோமா, குறைவற்ற மனத்தை நாம் கொண்டிருக்கிறோமோ என்றவர்கள் சுயமதிப்பீடு செய்து கொள்வதில்லை.


  • நான் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதில்லை.


  • ஏழு திரைகளுக்கு அப்பால் இருக்கிறது பேருண்மை. அவன் அத்தனை திரைகளையும் அகற்றி எனக்கு மெய்ப்பொருள் வெளிப்படச் செய்தான். நம்மில் ஒரு மாயை பேழையைத் தந்தான். அரிய பொருள் ஒன்று அதிலிருப்பதாகச் சொன்னான். திறந்து பாரென ஒரு திறவுகோலையும் கொடுத்தான். வாழ்க்கை முழுவதும் அதைத் திறந்து பார்க்கிற முயற்சியில் நான் இருக்கிறேன்.


  • பொய்யை மெய்யாக்கி போற்றத் தெரிந்தவர்கள் வணங்கி நிற்பது ஒரு தெய்வமே அல்ல, வழியாய்க் கொண்டதும் ஒரு வழி அல்ல.









--பவள சங்கரி திருநாவுக்கரசு. 11:06, 19 மே 2011 (UTC)

நன்றி - தின மலர்.

Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 27 August 2011, at 11:52. This page has been accessed 2,322 times.