வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

வலி நிவாரணியாக செயலாற்றும் பால்!

From மரபு விக்கி

Jump to: navigation, search

பாலின் மகத்துவம் குறித்து மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் ஏற்கனவே ஏகப்பட்ட தகவல்களை தெரிவித்துள்ள போதிலும், தற்போது பால் வலி நிவாரணியாகவும் செயல்படுவதாக ஆராய்ச்சி ஒன்றில் தெரியவந்துள்ளது.


இது தொடர்பாக மருத்துவ விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில், ஒரு டம்ளர் பாலில் 20 வகையான வலி நிவாரணிகள் குணத்தை கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக மிக மிக நுட்பமாக மேற்கொண்ட ஆய்வில், மிருகங்கள் மற்றும் மனிதர்களுக்கு உண்டாகும் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கு மருந்தில் காணப்படும் இரசாயனங்கள், ஆடு, மாடு மற்றும் மனித பாலில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

ஒரு டம்ளர் பாலை ஒருவர் அருந்தினால், அதில் இருக்கும் இரசாயனம் மிக மிக குறைவாகவே உள்ளது. ஆனால் அதன் பயன் அபரிதமாக உள்ளது.குறிப்பாக வலி நிவாரண விடயத்தில் அற்புத பங்காற்றுவதாக இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஸ்பானிஷ்-மொராக்கான் பகுதியை சேர்ந்த ஒரு ஆராய்ச்சி குழுவினர், அந்த பகுதிகளில் உள்ள பசு மாட்டு பால் மாதிரிகளை, ஆடு மற்றும் மனித பால் மாதிரிகளுடன் சேர்த்து ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் தெரியவந்த உண்மை என்னவெனில், விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு கொடுக்கப்படும் வலி நிவாரணியில் அடங்கியுள்ள எதிர்ப்பு அழற்சி மருந்து, "Mefenamic" அமிலம் மற்றும் "Ketoprofen" ஆகிய இரசாயனங்கள் அடங்கியுள்ளது என்பதுதான்.

மேலும் செக்ஸ் ஹார்மோனின் வடிவமாக உள்ள ஈஸ்ட்ரோஜனும் பாலில் அடங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் ஆட்டுப்பாலில் "Niflumic" என்ற ஒரு வகையான அமிலம் இருப்பதும், இது தாய்ப்பாலில் உள்ள வலி நிவாரணி குணங்களை ஒத்து இருப்பதும் தெரியவந்துள்ளது.




--பவள சங்கரி திருநாவுக்கரசு. 05:30, 7 செப்டெம்பர் 2011 (UTC)

நன்றி - வெப்துனியா

Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 7 September 2011, at 05:30. This page has been accessed 1,427 times.