வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

லெமூரியா-ஆய்வுக் கட்டுரை-- 5

From மரபு விக்கி

Jump to: navigation, search
.லெமூரியா-  குமரிக்கண்டம்- கோண்ட்வானா (பாகம்-5)

பெருகடலடி முகடுகள்- கடலடி நிலப்பரப்பு பரவுதல்
(MID OCEANIC RIDGES AND OCEAN FLOOR SPREADING)
நிலப் பரப்பில் உள்ள பாறைகள் அடர்த்தி குறைந்த சிலிக்கா மற்றும் அலுமினியம் (Si Al) நிறைந்தவை-ஆனால் கடலடிப் பரப்பில் உள்ள பாறைகளில்  சிலிக்காவுடன் அடர்த்திமிகுந்த  மக்நீசயுமும் (SiMa) அதிகம்; ஆதலின் கண்டங்கள் கடல் பரப்பை கிழத்துக் கொண்டு செல்ல இயலாது என்பதே அன்றைய புவியியலாலர்களின் வாதம்- வேக்னேர் 1930ஆம் ஆண்டு வடதுருவத்தில் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் போது இயற்கை எய்தினார். அது ஒரு சோகக்கதை.
காலங்கள் மாறின – கருத்துக்களும் மாறின-
இரண்டாம் உலகப் போர் துவங்கியது. அமெரிக்காவின் ‘பிரின்ஸ்டன் பல்கலைக்கழக’த்தில் புவியியல் பேராசிரியராகப் பணியாற்றிய ஹேரிஹெஸ் (24.05.1906—25.08.1969), அமரிக்கக் கடற்படையில் ரியர் அட்மிரல் பதவியேற்று, அட்லாண்டிக் பெருங்கடலில் பணியாற்றினார். அப்போது அவர் அட்லாண்டிக் பெருங்கடலின் மையப் பகுதியில் கடலுக்கடியில், வடக்கு-தெற்காக பல ஆயிரம் கி.மீ. நீளமுள்ள மலை முகடு (MID OCEANIC RIDGE)  இருப்பதையும், அந்த முகட்டின் மையப் பகுதியிலிருந்து எரிமலைக் குழம்பு வெளியேறி கிழக்கு-மேற்காக பரவுவதையும் கண்டறிந்தார். இந்த புதிய புவியியல் உண்மையை “ கடலின் கீழுள்ள நிலப் பரப்பு  பரவுதல் (OCEAN FLOOR SPREADING)“ எனும் தலைப்பில் வெளியிட்டார். இதனை 1960 களில் அறிவியல் உலகம் ஏற்றுக் கொண்டது.
கடலடி நிலப்பரப்பு பரவும் போது அதனோடு சேர்ந்து கண்டங்களும் நகந்திருக்க வேண்டும் எனும் உண்மையும் வெளிப்பட்டது. இந்த கடலடி முகடுகள் அட்லாண்டிக் பெருங்கடலில் மட்டுமல்ல, இந்தியப் பெருங்கடலிலும், மற்றைய பெருங்கடல்களின் அடியிலும் உள்ளது காலப் போக்கில் கண்டு பிடிக்கப் பட்டது. தொடர்ந்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன
லெமூரியா-  குமரிக்கண்டம்- கோண்ட்வானா (பாகம்-5)

லெமூரியா-  குமரிக்கண்டம்- கோண்ட்வானா (பாகம்-6 –(நிறைவுப் பகுதி))
கண்டப்பெயர்ச்ச்சி , கடலடி நிலப்பரப்பு பரவுதல் ஆகிய கோட்பாடுகளைத் தொடர்ந்து மேற்கொள்ளப் பட்ட ஆய்வுகளின்  பயனாக , “பெரும்தட்டுகளின்  கட்டமைப்பு”  எனும் அருமையான கோட்பாடு ஒன்ற உருவானது. இதுவரை விடையளிக்கப்படாத வினாக்கள் பலவற்றிற்கு இந்த கோட்பாடு விடை அளித்தது. இதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பொது, முற்காலத்தில் இணைந்திருந்ததாகக் கருதப்படும் கண்டங்களில் உள்ள அழற் பாறைகள், உருமாற்றுப் பாறைகள் மற்றும் படிவப் பாறைகளின் வயது–அமைப்பு-புவி வேதியியற்கூறுகள் தொல்லுயிர் எச்சங்களின் தொகுப்பு, வயது போன்றவை அறிவியற் பூர்வமாக ஆய்ந்து ஒப்பு நோக்கப்பட்டன. கண்டங்களுக்கு இடையே விரிந்து கிடக்கும் பெருங்கடலின் தரை ௨௨பகுதிகளில் உள்ள பாறைகளும் பெரும் ஆய்வுகளுக்கு உட்படுத்தப் பட்டன.
இந்த ஆய்வுகளின் அடிப்படையில் சுமார் 22.5 கோடி ஆண்டுகளுக்கு முன் , பூமியின் பரப்பில் உள்ள எல்லா கண்டங்களும்  ஒன்றாக சேர்ந்து ஓர் பெரிய அகண்டமாக இருந்திருக்கவேண்டும் எனு கருத்தை  புவியியலாளர்கள் வெளியிட்டனர். இந்தப் பேரகண்டத்திற்க்கு “பான்ஜியா”-( பெரும்  நிலப் பரப்ப) என்று பெயரும் இட்டனர். சுமார் 2.5 கோடி ஆண்டுகளுக்குப் பின் பான்ஜியா பேரகண்டம் வடக்கே “லவ்ரேஷ்ய” என்றும் தெற்கே, “கோண்ட்வானா” என்றும் இரு அகண்டங்களாகப் பிரிந்தது. தென் அமெரிக்கா, ஆப்ரிக்கா , மடகாஸ்கர், இந்தியா , ஆஸ்திரேலியா , அண்டார்க்டிக்கா ஆகிய தென் கண்டங்கள்  ஒன்றாக இணைந்திருந்த நிலப்பகுதியே கோண்ட்வானா அகண்டம்.

PLATE TECTONICS என்று அழைக்கப்படும் இந்த “ பெரும்தட்டுகளின் கட்டமைப்பு” கோட்பாடு பல புரியாத புதிர்களை அவிழ்க்கிறது. இந்தக் கோட்பாட்டின்படி பூமியின் மேலுள்ள தட்டுகள் இன்றும் நகர்ந்து கொண்டுதானிருக்கின்றன – ஆண்டிற்கு சுமார் 5 செ .மீ . என்ற அளவில்.
ஆதலின் , தமிழ் ஆர்வலர்கள் “ குமரிக்கண்டம்தான் கோண்ட்வானா....லேமுரியாதான் குமரிக் கண்டம் ..” என்றெல்லாம் குழப்பிக் கொள்வதை கைவிடவேண்டும்.
உலகம் யாவையும் .......ஆக்கலும்-நிலைபெறுத்தலும்-நீக்கலும்....... 

ஆக்கம்:  திரு சிங்கநெஞ்சம் சம்பந்தம்

--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] ([[பயனர் பேச்சு:Geetha Sambasivam|பேச்சு]]) 09:57, 19 மே 2014 (GMT)

Contributors

Geetha Sambasivam

This page was last modified on 19 May 2014, at 10:01. This page has been accessed 2,448 times.