வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

ராமானுஜர் - அழியா இன்பத்தின் வாசல்.

From மரபு விக்கி

Jump to: navigation, search
                                                                                      
Ramanujapage.jpg


ராமானுஜர் - அழியா இன்பத்தின் வாசல்.


  • இறைவன் தொண்டினையும், அடியவர்களின் தொண்டினையும், ஆசிரியரின் தொண்டினையும் சமநிலையில் கருதிச் செய்யவேண்டும். முன்னோர்கள் கூறியிருக்கும் தெய்வீகமான நூல்களில் நம்பிக்கை வைக்க வேண்டும்.


  • சிறந்த அடியார்களாகிய நல்லோரிடம் சேருவதே அழியாத இன்பத்திற்கு வாசல் ஆகும். அதனால் அடியார்களின் உள்ளம் மகிழும் படி நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும்.


எல்லாம் அவன் கையில்!


  • நீங்கள் எவ்வளவு அறிவாளிகளாக இருந்தாலும், பரமனுக்கும் அவனுடைய அடியார்களுக்கும் தொண்டு செய்தால் தான் வாழ்க்கையில் உய்வு பெற முடியும்.


  • பரமனின் திருவடிகளில் தன்னை உண்மையாகச் சமர்ப்பித்த ஒருவன், தன் வருங்கால வாழ்வுபற்றிக் கவலை கொள்ள வேண்டியதில்லை. காரணம் பரமனின் கையில் தான் எல்லாமே உள்ளது. இதுபற்றித் துளியளவு கவலை கொண்டாலும், அவனது சரணாகதி பொருளற்றதாகும்.


  • இந்த உலகில் வாழும் காலத்தில், உங்கள் நண்பர் யார், பகைவர் யார் என்பதை விவேகத்துடன் அறிந்து
    கொள்ளுங்கள்.


 * பிறரை அவமதிக்காதீர் ! - ஸ்ரீராமானுஜர்.

  • ஒரு கடவுளை வணங்குவது நல்லது. பல தெய்வங்களை வணங்குதல் கூடாது. அது கடவுளை அவமதிப்பதாகும். நீ விரும்பும் கடவுளின் மீது உன் மனதை செலுத்துவது நல்லது.


* நற்குணமுடையவர்கள், அறிவாளிகள், தர்மசிந்தனையுடையவர்கள் ஆகியோர்களை கண்டால் பணிந்து வணங்கவேண்டும். இன்பம், துன்பம் இரண்டையும் சமமாக பாவிக்க வேண்டும். தொண்டு செய்வதன் மூலமே கடவுளை அடைய முடியும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.





















--பவள சங்கரி திருநாவுக்கரசு. 02:20, 3 மே 2011 (UTC)
நன்றி - தின மலர்.

Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 31 May 2011, at 03:14. This page has been accessed 2,104 times.