வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

ரமணர் - வலது பக்கத்தில் ஒரு இதயம்

From மரபு விக்கி

Jump to: navigation, search

 

                                                                                             
Ramanar-casual 170x250.jpg

* ரமணர் - வலது பக்கத்தில் ஒரு இதயம்


  • பிரபஞ்சம் முழுவதும் உடலில் இருக்கிறது. உடல் முழுவதும் இதயத்தில் அடங்குகிறது. எனவே, பிரபஞ்சமே இதயத்தில் அடக்கம். உலகத்திற்குச் சூரியனைப் போன்று உடலுக்கு இதயம். சூரியன் சந்திரனுக்கு ஒளி தருவதுபோல இதயம் மனதிற்கு ஒளி தருகிறது.


  • சூரிய அஸ்தமனத்தின்போது சந்திர ஒளியை மட்டும் காண்பதைப் போன்று, இதயத்திலிருந்து விலகி நிற்கும்போது மனத்தை மட்டுமே காண முடிகிறது.


 சும்மா இருப்பது சிரமம்


  • கடவுளும், குருவும் உண்மையில் வேறு வேறு அல்ல, புலி வாயில் பிடிபட்டது எப்படி திரும்பாதோ, அதேபோல் குருவின் அருட்பார்வையில் விழுந்தவர்களும் கைவிடப்படமாட்டார்கள்.


  • நீ விரும்புவது அனைத்தையும் பகவான் உனக்குத் தருவார் என்று நம்பினால், உன்னை அவரிடம் முழுமையாக ஒப்படைத்துவிடு.


-அருளின் உயர்ந்த வடிவம் மவுனம்


அருளின் மிக உயர்ந்த வடிவம் மவுனமாகும். அதுவே உயர்ந்த உபதேசமாகும்.


இதயத்தில் அகந்தை உருகி மறைதலே சரணாகதி என்பதாகும். கடவுள் வெளிப்புறச் செயல்களால் ஏமாந்து விடுவதில்லை. அவரது நோக்கமெல்லாம், அகந்தை இன்னும் எந்த அளவுக்கு இருக்கிறது, அதை எப்படி போக்குவது என்பதுதான்.


மயக்கம், அதிகமான மகிழ்ச்சி அல்லது அதிகமான துக்கம், அச்சம் போன்றவற்றால் எண்ணங்கள் வலுக்கட்டாயமாக நிறுத்தப் பெறும்போது மனம் தன் மூலமாகிய இதயத்திற்குச் செல்கிறது.


  அகந்தை அகலட்டும்.


இதயத்தில் இருக்கும் அகந்தை விலகுதலே சரணாகதி
ஆகும். கடவுள் வெளிப்புறச் செயல்களால்
ஏமாறுவதில்லை, அவர் காண்பதெல்லாம் அகந்தை, எந்த அளவுக்குப் பாக்கி இருக்கிறது என்பதும், அதனை எந்த அளவில் அழிக்கலாம் என்பதுமேயாகும்.


தெய்வீகம் அனைத்துக்காலங்களிலும் அனைத்து
சூழல்களிலும் பரவி நிற்கிறது. தனி மனிதர் தன்
விருப்பம் போல் நடக்க முடியாது, தெய்வீகத்தின்
சக்தியை உணர்ந்து நடக்க வேண்டும்.


 தான் தானாயிருத்தலே பரமானந்தம்


வெளிமுக நாட்டம் நீங்கி மூல சொரூபத்தை உணர்தல் வேண்டும் என்பதே சாஸ்திரங்கள் அனைத்தின் உட்கருத்து. புதிதாய் எதனையும் அடைய வேண்டியதில்லை. அஞ்ஞானம் அகல வேண்டும். விபரீதப் பிரமைகளே ஒழியவேண்டும். அமைதியும் ஆனந்தமும் தன்னைவிட்டு வேறெங்கோ இருப்பதாக எண்ணி அலையாமல், அயலேதுமில்லாத தன் பரிபூரண நிலையில் அமரவேண்டும். தான் தானாயிருத்தலே பரமானந்தம். அவ்வமைதியே ஆனந்தமயம்.


'முக்தி அடைவதற்கு மனத்தை அடக்க வேண்டும்' என்றே எந்த நூலிலும் சொல்லப்பட்டுள்ளது. ஆகையால், மனோ சிக்ரமே சாஸ்திரங்களின் முடிவான கருத்து என்று அறிந்துகொண்டபின் நூல்களை அளவின்றி படிப்பதால் பயனில்லை. மனத்தை அடக்குவதற்குத் தன்னை யாரென்று விசாரிக்க வேண்டுமே அல்லாமல் எப்படி நூல்களை விசாரிப்பது.


தன்னைத் தன்னுடைய ஞானக் கண்ணால் தானே அறிய வேண்டும். ராமன் என்பவன் தன்னை ராமன் என்று அறிய நிலைக்கண்ணாடி வேண்டுமா? 'தான்' என்பது பஞ்சகோசங்களுக்குள் இருப்பது. நூல்களோ அவற்றிற்கு வெளியே இருப்பவை. ஆகவே, பஞ்சகோசங்களையும் நீக்கி விசாரிக்க வேண்டிய தன்னை, நூல்களில் விசாரிப்பது வீணே. பந்தத்தில் இருக்கும் தான் யார் என்று விசாரித்து, தன் யதார்த்த சொரூபத்தைத் தெரிந்துகொள்வதே முக்தி. சதா காலமும் மனத்தை ஆன்மாவில் வைத்திருப்பதற்குத்தான் 'ஆன்ம விசாரம்' என்று பெயர். தியானமோ தன்னை சத்-சித்-ஆனந்த பிரும்மமாகப் பாவிப்பது. கற்றவை அனைத்தையும் ஒரு காலத்தில் மறக்க வேண்டிவரும்.


சுருதிகள் இயம்பும் இலக்கணங்களுக்கெல்லாம் இலக்கியப் பொருளாக விளங்கும் ஞானியர்களுக்கு, அச்சுருதிகளால் யாதொரு பிரயோஜனமும் இல்லை.


ஆன்ம விசாரணை 


மனம் அடங்குவதற்கு விசாரணையைத் தவிர வேறு தகுந்த உபாயங்கள் இல்லை. மற்ற உபாயங்களை மேற்கொண்டு அடக்கினால் மனம் அப்போதைக்கு அடங்கினாற்போல் இருந்து, மறுபடியும் கிளம்பிவிடும்.


இதுவே நேர்வழி. மற்றவையெல்லாம் அகந்தையை வைத்துக்கொண்டே செயல்படும் சாதனைகள். அவ்வழிகளில் பல சந்தேகங்கள் எழும், முடிவில் யாரும், 'தான் யார்?' என்று பார்த்தே ஆகவேண்டும். ஆன்ம விசாரணையிலோ, முடிவிற் கேட்டுத் தெளியவேண்டிய 'நான் யார்?' என்னும் ஒரே கேள்வியே ஆரம்பம் முதல் கேட்கப்படுகிறது. இவ்வழியைப் பின்பற்றுவோர்க்கு வேறெந்த ஊன்றுகோலோ துணையோ தேயைவில்லை.


ஆன்ம சத்தியம் விளங்க, அதை மறைத்துக் கொண்டிருக்கும் அனர்த்ம இடையூறுகளை விசாரணையால் விலக்கியே தீரவேண்டும். முடிவில், தோன்றி மறையும் அகந்தையும் விலக்கப் பெறுங்கால், சத்தியம் தடையின்றிப் பிரகாசிக்கும். அது இயல்பாகவே தானே தானாய் என்றும் ஒளிர்வது என்பதை உணர்வோம்.




--பவள சங்கரி திருநாவுக்கரசு. 02:11, 28 ஏப்ரல் 2011 (UTC)

நன்றி - தின மல்ர்.வெப்துனியா.

Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 12 June 2011, at 17:04. This page has been accessed 3,815 times.