வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

மொகரத்தில் இந்துக்கள் தீமிதிக்கும் திருவிழா

From மரபு விக்கி

Jump to: navigation, search
Fire.jpg

திருப்புவனம்: மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் மொகரம் தினத்தில் இந்துக்கள் தீமிதிக்கும் திருவிழா திருப்புவனம் அருகே நடந்தது.இந்த கிராமத்தில் நான்குதலைமுறையாக இந்த விழா நடந்துவருகிறது. திருப்புவனத்திலிருந்து 6 கி.மீ., தூரத்தில் உள்ள முதுவன்திடல் ஊராட்சியில் 500 இந்துகுடும்பங்கள் உள்ளன. ஆரம்பத்தில் முஸ்லீம்கள் வசித்ததால் இங்கு பாத்திமா நாச்சியார் தர்கா, பள்ளிவாசல் உள்ளது. காலப்போக்கில் முஸ்லீம்கள் நகரங்களை நோக்கி இடம்பெயர்ந்ததால், இந்துக்குடும்பங்களை சேர்ந்தோர் பாத்திமா நாச்சியார் பள்ளிவாசலை கோவிலாக வழிபடுகின்றனர்.


கிராம காவல்தெய்வமாகவும், வேண்டுதல் நிறைவேற்றும் தெய்வமாகவும் வழிபடுகின்றனர். இதற்காக இந்துக்கள் முறைப்படி மொகரம்பண்டிகையையொட்டி, காப்புக்கட்டி 10நாள் விரதமிருந்து தீமிதித்து வேண்டுதல் நிறைவேற்றுகின்றனர்.அமாவாசை முடிந்து மூன்றாம்நாளில் பிறைதெரிந்தவுடன் காப்புக்கட்டுதலுடன் தீமிதி திருவிழா துவங்குகிறது. 9நாள் முடிவில் அதிகாலையில் மொகரம்பண்டிகையன்று தீமிதிக்கின்றனர்.


எடுத்து உடலில் கொட்டுகின்றனர்: வேண்டுதல் நிறைவேற நேர்த்தி கடன் செலுத்தும் பெண்கள், "பூமொழுகுதல்' என தீக்கங்குகளை, ஈரத்துணியால் உடல் முழுவதும் போர்த்தி உட்காருகின்றனர். அவர்கள்மீது குழியில் கிடக்கும் "நெருப்பாய்' இருக்கும் தீக்கங்குகளை "பாத்திமா, பாத்திமா' என்ற கோஷத்துடன் மண்வெட்டியில் எடுத்து உடலில் கொட்டுகின்றனர்.


"பாத்திமா' என சூட்டி வெற்றிவாகை : இக்கிராமத்தினரின் காவல்தெய்வமான பாத்திமாநாச்சியாருக்கு முதல்காணிக்கை செலுத்துவதும், எந்த விளைபொருள் விளைந்தாலும் முதலில் படைப்பதும் இன்றளவும் தொடர்கிறது. இங்குள்ள கபாடி, கிரிக்கெட், வாலிபால் குழு, மகளிர் குழுக்கள் பெயரையும் "பாத்திமா' என சூட்டி வெற்றிவாகை சூடுகின்றனர். இந்து,முஸ்லீம்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் இந்த தீமிதி திருவிழாவைக்காண வெளிநாடு மற்றும் பல மாநிலங்களிலிருந்து வருகின்றனர்.

நன்றி - தின மணி, தின மலர்

Contributors

Ksubashini

This page was last modified on 18 December 2010, at 11:24. This page has been accessed 1,986 times.