முதற் சங்கத் தமிழ்: சூருபாக்கின் நெறி - வரிகள் 56-78

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

சூருப்பாக்கின் நெறி

முனைவர் கி.லோகநாதன்

இனி அடுத்த சில வரிகளுக்குச் செல்வோம்:

சூருபாக்கின் நெறி

51. us si-ga kaskal si-ga-am ( A safe foundation is a safe road)

  • Ta. உச்.இ சிங்க கசிகால் சிங்க ஆம் ( Having a good goal is moving in the good road)

52. kaskal gi na-du sa-bi sag hul-a ( Do not walk on the road at night, its interior is (both) good and bad)

  • Ta. கசிகால் மை நா உடு, சாய்பி சான் ஒல்ல ( Do not walk in dark streets, inside there may be evil people)

53. anse.edin-na na-ab-sam[....] ugula da-bi-es (....)-e-zal ( Do not buy a steppe-ass, constantly the foreman(?) must ... at its side.

  • Ta. அன்சே ஏதில்ல நா ஆப் சும்.உ [...] ஊக்குளு இடபியிசு ( ...) ஏ செல் ( Do not buy a wild horse, rider has to go to its side always?)

54. geme-zu-ur gis na-an-du zu-ur su-mu--ri-in-sa ( Do not have sexuakl intercourse with your slave girl, she will call you: Traitor ! (?)

  • Ta. கைம்மே சோர குச்.இ நாஅன் இடு, சோர் சூ முறையின் சொல் ( Do not have sexual intercourse with an immoral woman, she will announce it to the public)

55 .as a.zi na-ab-bal-e su-us im-si-nigin ( Do not curse with violanace, it will turn around your hands)

  • Ta. ஆசி அழி நா அவல்லே சூர்-உசு இம்சி நீங்கின் ( Do not curse for the destruction of others, it will torture you for a long time)

சொல்லாய்வுகள்.

51. us> Ta. உச்.இ : உச்சி: உயர்ந்த மேலான, உன்னதமான ; si-ga> சிங்க, சிக்க> சொக்க, சாங்க: அழகிய;
kaskal= kashikaal > Ta. கஷிகால்> கடிகால்: விரைந்து செல்லுதற்குரிய வழி, செப்பமிட்ட சாலை; கசி, கஷி> கழி, கடி : விரைதல்

52. gi = ngi> மி, மை : இருள்; du> உடு > விடு : செல்லல்; sa-bi> சாய்.பி> சாய்வு : பள்ளம், உட்பக்கம்; sag> சான்> தான் : ஒருவன்; hul-a> ஒல்ல : தீய

53. anse> அன்சே> அசுவம்: குதிரை; edin-na>ஏதில்ல : காட்டுப் பகுதி: காண்க - ஏதிலாளன்: அந்நியன், அயல் இடத்தன்; sam > சும்: சுமத்தல்; ugula> ஊக்குளு: உக்குவித்து ஓட்டுபவன்; zal> செல், சல் > சரி

54. geme> கைம்மை: இங்கு அடிமைப் பெண்; zu-ur> சோர்: சோரம் போகும் பெண்; கற்புறுதி இல்லாதவள். gis> குச்.இ : இங்கு ஆண்குறி; gis-du> குச்.இ இடு: புணர்தல்; mu-ri-in-sa> முறையின் சொல்?

55. as> ஆசி : வாழ்த்துதல்; a.zi> அழி ? ; ab-bal> அவல் ; உரக்கச் செப்பல்? காண்க: அவல்.அம்; im-si> இம்சி: துன்புறுத்தல்? nigin> நீங்கின்: நீண்ட காலமாக

(தொடரும்) 10



11


அன்பர்களே,


இன்றும் ஞானவழி காட்டும் சொற்களாக நிலவும் பல அன்றே, சுமேருக் காலத்திலேயே, தமிழர்தம் சிந்தையில் தோன்றிவிட்ட அழகினை இந்த சில வரிகளில் காண்கின்றோம். வாழ்க்கை ஓர் பயணம், ஓர் யாத்திரை. அதனை செவ்வே பிழையினின்றி செய்யவேண்டும்னெறால் சூல்கி போன்ற ஞானவேந்தர்கள் தெய்வங்கள் காட்டும் வழியிலேயே செல்ல வேண்டும் என்று கூறி தங்கள் வாழ்க்கையே அதில் தாம் அடைந்த வெற்றிகளே அதற்ற்கெல்லாம் சான்று என்று கூறியிருக்கின்றார்கள். ஆயினும் இங்கு இதன் விளக்கம் வேறுவகையில் அமைவதைக் காண்பதோடு உளவியல் சான்றதாகவும் இன்றும் நாம் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும் இருப்பது வியப்பிற்குரிய ஒன்றே யாகும்.


கீழே வரும் வரிகளை இன்னும் சிறிது ஆழமாக நாம் கருதினால் இதன் உண்மை வெளிப்படுகின்றது.


51. us si-ga kaskal si-ga-am ( A safe foundation is a safe road)

  • Ta. உச்.இ சிங்க கசிகால் சிங்க ஆம் ( Having a good goal is moving in the good road)

52. kaskal gi na-du sa-bi sag hul-a ( Do not walk on the road at night, its interior is (both) good and bad)

  • Ta. கசிகால் மை நா உடு, சாய்பி சான் ஒல்ல ( Do not walk in dark streets, inside there may be evil people)

இங்கு us என்பதை உச்.இ என்றோ ஓச்.உ என்றோ கொள்ளலாம். தன்னை ஓச்சுவது அல்லது இயக்குவது , உள் நின்று ஓர் திசையைத் தந்து அவ்வழி செல்லவேண்டும் என்று அகத்திருந்து விரட்டுவது. ‘si-ga' என்பது அழகிய , உயர்ந்த என்ற பொருளுடைய ‘சிங்க' என்பதலிருந்து ‘செங்க” என்றாகி ‘செம், செம்ம” என்றெல்லாம் உருமாறி வந்திருக்கின்றது. இதுவே வேறொரு வழியில் ‘சிக்க, சொக்க” என்றெல்லாம் வளர்ந்து ‘அழகிய , குற்றமற்ற' என்றெல்லாம் ஆகியுள்ளதையும் காணமுடிகின்றது.


வாழ்க்கையின் நீண்ட பயணமே ‘kaskal' அதாவது ‘கசிகால்” என்று வழங்கப்பட்டுள்ளது. இது ‘நெடுஞ்சாலை' என்றும் பொருள் படும். அக்காலத்தில் கசிதல் என்றால் நீர் ஆற்றொழுக்காக ஓடுவது போன்று ஓடுவதாகும். கசி என்றால் மதுபானம் , நீர் என்றும் பொருள் படும். ‘கால்' என்பது மிகவும் நீண்டு இருப்பது. இப்படிப்பட்ட நெடுஞ்சாலையில் ஒழுகுவது போன்றதுதான் வாழ்க்கைப் பயணம், அதுபொழுது உயர்ந்த எண்ணங்கள் நம் அகத்திலிருந்து நம்மை செழுத்தினால், பயணம் அழகிய நல்ல பயணமாக இருக்கும் என்கின்றார் இந்த சூருபாக்கு. இதுதானே பிறகாலத்தில் புத்தர் பெருமானும் தன் தம்ம பாதத்தில் விளம்பியது? நம் உயர்விற்கும் தாழ்விற்கும் காரணம் நம் உள்ளமே, ஆங்கு விளங்கும் எண்ணங்களே என்று புத்தர் பெருமான் கூறியது புதிய ஒன்றல்ல, மறந்துவிட்ட பழைய ஒன்றை மீண்டும் மக்கள் மனதில் பதிய வைத்துள்ளார் என்றுதான் நாம் கொள்ளவேண்டும்.


இனி தொடர்வோம்


சூருபாக்கின் நெறி

56 a su nu-gid-de na-an-e-de aa sig su-mu-e-re-gal ( Do let loose the water when you cannot control it (?) , you arms are too weak

  • Ta. aal suur naa kaddee naan idee aal sikka suur mooyiree kaal ( “ )

57.mah-bi nig [x]- ba-an-sub-be nig-e ba-an-sub-be ( Do not throw anything too fiercely, it will throw you down)

  • Ta. maahbi mika [x] baN cuumbee nikavee baNcuumbee ( what is too great will cause you withdraw, will really make you exhausted)

58. ur-tuku na-an-bad-e lu-bi sa-ba-e-re -eb-kur ( Do not drive away a debtor, that man may turn hostile against you)

  • Ta. oortoku naan paaddee uLubi cabaiyiree ib kuuR.u ( Do not talk ill of the great ones, they will complaint in the assembly)

59. sun-na-da e na-an-da-ga-ga-an ( Do not manage your house with discord)

  • Ta. saniyuda il naan idu kaalkaalan ( “)

60 gi-in-se du-de si-me-si-ib-sub-sub ( When you go to the slave girl, she will throw it back to you)

  • Ta. kannisee eduyidee siimmee seyyib.u cuumb.u-cumb.u ( When you approach a virgin , she may ( initially) withdraw)

சில சொல்லாய்வுகள்


56. a Ta. aal, am : water; su. Ta. suur: something that radiate out, here the limbs; gid-de . Ta. kaddee : to control, bind; aa. Ta. aal, aaRRal: power, competence, strength; sig> Ta. sikku : to be confused, become unsteady ?;

57. mah > Ta. maa, mahaa : great, lofty'; sub-be > Ta. cuumbu: to recoil, withdraw, to curl around; ba-an > Ta. paN, paNNu: to do, an aux. Verb

58. ur-tuku> Ta. oortoku: those who are great or higher; bad-de > ta. paaddee: to curse? Or speak low? , sa-ba> Ta. sabai: assembly; kur. Ta. kuuRu : to tel , complaint

59. sun-na> Ta, suunna : hot; sani: troublesome. Perhaps also suunyam: like hot desert; sun-na> suulai : extremely hot fire place

60. gi-in> Ta. kanni: virgin , young unmarried maiden


(to continue) 11

12

சூருபாக்கின் நெறி.


ஆய்வுக்குரிய வரிகளில், வரம்பு மீறி செல்லக்கூடாது என்பதை வற்புறுத்துவனவாக பல முதுமொழிகள் விளங்குவதைக் காண்கின்றோம். தன்முயற்சியை வற்புறுத்தும் அதேபொழுது, தனது ஆற்றலுக்கு அப்பாற்பட்டதை செய்து முடிக்க நினைத்தால் , அதனை கண்டு மலைத்து ஊக்கங்கெடும் நிலையும் உண்டு என்பதாக ஏது நுதலிய முதுமொழியை இங்கு காண்கின்றோம்.

56 a su nu-gid-de na-an-e-de aa sig su-mu-e-re-gal ( Do let loose the water when you cannot control it (?) , you arms are too weak

  • Ta. aal suur naa kaddee naan idee aal sikka suur mooyiree kaal ( “ )

ஆல் சூர் நா கட்டே நாஅன் இடே ஆல் சிக்க சூர் மோயிரே கால்

அநேகமாக இந்த முதுமொழி எழுவதற்கு உரிய சூழலைத் தந்துள்ளது உழவு தொழிலாகும் என்பதொடு நீரினை கால்வாய்களில் அல்லது அணைக்கட்டுகள் வழியாக தேக்கி வைத்து பிறகு வேண்டுங்கால் வயலிற்கு திறந்துவிடும் பழக்கம் அன்றே இருந்திருக்க வேண்டும். “ஆல் சூர் நா கட்டே” என்பது தன் வலிமையால் கட்டிவைக்க முடியாது மிக வேகத்தோடு பாயும் நீர் ஆகும். சூர்> கூர்> கரம் : ஈட்டிகள் போல உடம்பிலிருந்து விரிந்து நிற்பன. மேலும் ‘ஆல் சிக்க” என்பது ‘ஆற்றல் சிங்குதல், அல்லது குறைந்து நிற்பது. ‘ஆல்' என்ற சொல்லே முதலில் நீராகப் பொருள் தந்து பிறகு ‘ஆற்றல்' ( ஆல்-அல்) என்று நிற்கின்றது. தனது கரங்களின் அல்லது ஆற்றலின் ஆகாத காரியங்களை செய்யக் கூடாது என்று அறிவுரைப் பகரப்படுவதைக் காண்க.


மேற்கண்ட அறிவுரையை ஏது நுதலிய முதுமொழியாக்குவது, அதற்கு காரணம் என்ன என்பதை விளக்கும் அடுத்து வரும் வரியாகும்.

57.mah-bi nig [x]- ba-an-sub-be nig-e ba-an-sub-be ( Do not throw anything too fiercely, it will throw you down)

  • Ta. maahbi mika [x] baN cuumbee nikavee baNcuumbee ( what is too great will cause you withdraw, will really make you exhausted)

மாபி மிக [x] பண்.உ சூம்பே நிகவே பண்.உ சூம்பே

இங்கு பயிலும் ‘மா, மாஹ்' என்பன தமிழிற்கும் வடமொழிக்கும் பொது. ‘பண்ணு' ‘சூம்பு' என்பன தமிழில் இன்றும் பயில்வன. ‘சூம்பு ‘ எனும் சொல் ‘சோம்பு' என்று வளர்ந்திருக்கின்றது. சுருங்குதல் என்ற கருத்தின் அடிப்படையில் சோம்பல் என்ற கருத்து முகிழ்ந்துள்ளது. தனது ஆற்றலுக்கு அப்பாற்பட்ட ஓர் காரியத்தை செய்து முடிக்க நினைக்கும் போது, இயலாமையின் காரணமாக, சோம்புதல் அதாவது சுருங்கிப் பின்வாங்குதல் நடக்கும், அதனால் பொதுவான ஊக்கமும் கெடும் என்று அழகிய உளவியல் நுட்பத்தோடு இங்கு அறம் பயில்வதைக் காண்க.

இனி காதல் வாழ்க்கையும் இளைஞர்களுக்கு உதவும் வகையில் விளக்கப்படுதையும் அங்கு இதேச் சொல் பயில்வதையும் காண்கின்றோம்.

60 gi-in-se du-de si-me-si-ib-sub-sub ( When you go to the slave girl, she will throw it back to you)

  • Ta. kannisee eduyidee siimmee seyyib.u cuumb.u-cumb.u ( When you approach a virgin , she may ( initially) withdraw

கன்னிசே எடுயிடே சீம்மே செய்யிப்.உ சூம்ப்.உ சூம்ப்.உ

ஓர் இளைஞன் ஓர் கன்னிப் பெண்ணை அவசரப்படு அணுகினால் அவள் சூம்பி சூம்பிச் செல்வாளாம், அதாவது அச்சத்தின் ஒதுங்கிடுவாளாம், பின்வாங்குவாளாம். இது சூருபாக்கு அன்றே அறிந்திருந்த கன்னிப் பெண்களின் உளவியல்பு போலும்

மேலும் சமுதாயத்தில் அன்றே உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற பாகுபாடும் உயர்ந்தோர் பால் சிறிது அச்சமும் இருந்ததாக கீழ்காணும் வரியின் மூலமாக அறிய வருகின்றோம்

58. ur-tuku na-an-bad-e lu-bi sa-ba-e-re -eb-kur ( Do not drive away a debtor, that man may turn hostile against you)

  • Ta. oortoku naan paddee uLubi cabaiyiree ib kuuR.u ( Do not talk ill of the great ones, they will complaint in the assembly)

ஓர்தொகு நாஅன் பட்டே உளுபி சபையிரே இவ் கூற்.உ

இங்கு ur-tuku எனும் சொல் ur-sag அதாவது ‘சான் - ஓர்> சான்றோர்' என்பதுபோன்ற ஓர் சொல்லாகும். ‘ஓர்' என்பது ‘உயர்' ஆகும். ஆக ஓர் ஊரில் வாழ்ந்த மக்களிடையே சிலர் உயர்ந்தோராகிட வேறு சிலர் சாதாரண அல்லது தாழ்ந்த மக்களாக பிரிக்கப்பட்டு இருந்தனர் போலும். மேலும் ஊர் மன்றமாகிய சபையில் சிறப்பிடம் பெற்றவர்களாக இந்த உயர்ந்த மக்கள் இருந்தனர், தம்மை அவமானப்படுத்துவாரை சபையில் முறையிட்டு தண்டனைக்கு ஆளாக்குவர் என்று ஓர் வகையில் அச்சுறுத்தப்படுவதையும் காண்க.

இப்படிப்பட்ட சமுதாயக் கூறுகள்தாம் பிற்காலத்தில் இறுகி பொல்லாத சாதிக் கோட்பாடுகளாக ஆயிற்றோ என்று நினைக்கத் தோன்றுகிறது.


இனி அடுத்த சில வரிகளுக்குச் செல்வோம்
சூருபாக்கின் நெறி



61 uru.tus lu-ka na-ab-ta-bal-e-de ( Do not transgress people's dwelling places)


ஊருதுஞ்சு உளுஅக நா ஆப்து பால் யிடே ( “)


62. si-du-un si-du-un si-me-si-ib-bi-e-ne ( Go away ! Go away! - they will say to you)


சீயிடுயென் சீயிடுயென் சீம்மே செப்பியினே ( “ )


63. gi.dug.ga gis) kiri-ka da-bi nam-bi-du-a ( Do not break the side of the sweet reeds in the garden)


கீர்துங்க கிரியக இடைபி நாஅம் பீய்த்துவ ( “)


64. su-ga-ab su-ga-ab si-me-si-ib-be-e-ne ( restore! Restore! - they will say to you.


சூழ்க ஆப்.உ சூழ்க ஆப்.உ சீம்மே செப்பியினே ( “)


65. ur nam-mu-un-ku-e-en du nam-ur-ur-re-en ( Do not feed a hostile person, do not throw down a man)


ஓர் நாஅம் முன்கூழியென் இடு நாஅம் உரிஉரியென் ( Do not eat (sitting) in the corners, and do not suck in (the food)




சில சொல்லாய்வுகள்


61 uru: Ta. uuru, ஊரு. tus> Ta. tunjcu, துஞ்சு. uru.tus> ஊரு.துஞ்சு : ஊரே உறங்கும் போது. Lu-ka> உளுஅகம் : மக்களிடம். ab-ta> ஆப்து: இங்கு ‘ஆப்” அவர்கள் எனும் சுட்டு. “-து” இடப்பொருள் வேற்றுமை உருபு. bal-e-de > Ta. பாலிடே: பால்தல்: கடத்தல், இடு: செய் எனும் துணைவினை. பால்> பார்: பாரம்பரியம், பரம்பரை பரார்த்தம் என்பனபோன்ற சொற்களின் மூலச் சொல்


62. si-du-un> Ta. செல்லிடுயென்; si> சீ > சீல்> செல் : அகன்றிடல்; si-me> சீம்மே : அவர்கள்; si-ib-bi-e-ne> செப்பியினே : சொல்வார்கள்.


63. gi.dug.ga> கீர்துங்க: இனிமையான பயிர்: கரும்பு? kiri-ka> கிரியக ; கிரி இங்கு வயல் அல்லது தோட்டம். காண்க ‘கீரை”. கீரைகள் வலரும் இடம் கிரி. பிற்காலத்டில் செடிகள் நிறைந்த மலைபகுதிக்கு பெயராயிற்று போலும் . bi-du-a> பீய்த்துவ, பிடுங்குவ?


64. su-ga> சூழ்க ?


65. mu-un-ku-e-en> முன்கூயியென்: ku> கூழ்> கூய் ? uru-ur-re-en> உரிஉரியியென்> உரிஞ்சுதல்?


(தொடரும்) 12


13



சூருப்பாக்கின் நெறி



ஆய்வுக்குரிய வரிகளில் “ஊருதுஞ்சு உளுஅக' என்பதையும் அதனை ஒட்டி வருவதையின் சற்று விரிவாக ஆய்ந்து தனிக் கட்டுரையே எழுதியுள்ளோம். தமிழின் மூல வடிவைக் காட்டுவதோடு பல இலக்கணக்கூறுகள் எவ்வாறு தோன்றின, வளர்ந்து உருமாற்றம் பெற்றன என்பதையெல்லாம் நலமே விளக்க இவ்வரிகள் பெரிதும் உதுவுவன வாகும்.


இனி உழவுத் தொழிலைப் பற்றி வரும் ஏனைய வரிகளை சிறிது காண்பம். சூருப்பாக்கு என்ற இப்பெரியார் ஓர் இருடி அல்ல, உழவுத் தொழில் புரிந்து ஆங்காகும் அனுபவங்களை அகப்படுத்தி நன்னெறி யாதென்று திறம்பட விளக்கிய ஓர் கிழார். இத்தகைய கிழார்களே வேளாண் மாந்தர்களே சிந்தனை ஆய்வு நெறிச் சான்ற தமிழ் வழக்கிற்கு மூலபுருடர்களாக விளங்கி இருக்கின்றனர் போலும். இந்த சிந்தனை பாரம்பரியமே தொல்காப்பியம் போன்ற அறிவியல் சார்ந்த நூல்கள் எழுவதற்கு காரணமாகி பிறகு சமய வாழ்க்கையையே ஓர் அறிவியல் துறையாக அறிந்து மகிழ வித்திட்டது எனினும் அமையும்.


கரும்பு விவசாயம்


உணவாக விளங்கிய பயிரினை ‘சீ' அல்லது ‘சே” ( se) என்று அழைத்துள்ளனர். இச்சொல் அரி-சி , செ-ம்-பு என்பனபோன்ற சொற்களில் இன்றும் புதைந்து கிடக்கின்றது.


இவற்றோடு கரும்பினையும் சுமேருத் தமிழர்கள் பயிரிட்டுள்ளதாக கீழ்வரும் வரிகளின் வழி அறிய வருகின்றோம்.



63. gi.dug.ga (gis) kiri-ka da-bi nam-bi-du-a ( Do not break the side of the sweet reeds in the garden)


கீர்துங்க கிரியக இடைபி நாஅம் பீய்த்துவ ( “)


64. su-ga-ab su-ga-ab si-me-si-ib-be-e-ne ( restore! Restore! - they will say to you.


சூழ்க ஆப்.உ சூழ்க ஆப்.உ சீம்மே செப்பியினே ( “)


இங்கு gi.dug.ga என்பது ‘கீச்.உ.துங்க' , இனிமையான குச்சி அல்லது புல் என்பதாகலாம். ‘gi' என்பது ‘'gis' என்பதின் குறை வடிவம். இதுவே திரிந்து இப்பொழுது கீச்ச்.உ > குச்சி என்று வழங்குகிறது போலும். இதேச் சொல்லின் அடிப்படையில் ‘கீதம்' என்ற சொல்லும் வந்திருப்பதைக் காணவும், ஆயுதங்களுக்கு பொதுப்பெயராகவும் ( காண்க gis.tukal) இருப்பதையும் காணவும் மூங்கிலுக்கு உரிய ஓர் சிறப்புப்பெயராக இருந்து அதனின்று கரும்பினை வேறுபடுத்த ‘குச்.இ துங்க” எனப்பட்டது போலும்


சுமேருத் தமிழர்கள் கரும்பினை பயிரிட்டு வளர்த்தார்கள் என்பதொடு அதனை ஒர் cash crop ஆக. பொருளாதாரப் பயிராக போற்றினார்கள் என்பதை வரி 64 -இல் காண்கிறோம்.


இங்கு su-ga-ab என்பதை ‘சுங்க அவ்” அதாவது அவற்றின் சுங்கம் என்பதாக கொள்வதே சிறப்பு என நினைக்கின்றேன். கரும்புச் செடிகளை உடைத்துத் தின்போர், அதற்குரிய சுங்கத்தினை செலுத்தவேண்டும் என்று வற்புறுத்தப்படுவர் என்பதே இவ்வரியின் பொருள் . பிற்காலத்தில் “சுங்கம்' என்பது சிறிது பொருள் திரிபுற்று ‘வரி' ‘இறை' என்றெல்லாம் ஆகிவிட்ட போதிலும், அதன் மூலப்பொருள் வாணிபச் சந்தையில் ஓர் பொருளுக்குரிய கிரயம் என்றே இருந்திருப்பதை இவ்வரி நலமேக் காட்டுகின்றது. இதனால் கரும்பு ஓர் cash crop ஆக பயிரிடப் பட்டுள்ளது என்பதையும் நாம் அறியவருகின்றோம்.


சுமேருத் தமிழர்கள் ஆகவே தமிழர்களின் பூர்வீகத்தையும் அவர்கள் பிறகு எவ்வாறு எவ்வாறெல்லாம் புலம் பெயர்ந்து உலகெலாம் படர்ந்தனர் என்பதையும் அறிவியல் திறத்தோடு அறிந்துகொள்ள இக்கண்டு பிடிப்பு உதவலாம்.


இனி அடுத்த சில வரிகளுக்குச் செல்வோம்


சூருப்பாக்கின் நெறி


66. dumu-mu nam.silig nam-mu-e-ak-en lu ki nam-us-e-en ( My son, do not use violence, do not throw down a man)


  • Ta. தமுமோ சில்லிங்குநம் நாம் மோ ஆக்கென், உளு கீழ் நாஅம் ஓச்சுயென்


67. dumu lu-ra gis a.zi na-an-ne-en kisal-e ba-e-zu-zu ( Do not commit rape upon a man's daughter, she will announce it to the courtyard)


  • Ta. தமு உளுன்ற கீச்ச்.உ ஆழி நா அணையென் கீசால்ல ப ஏ சூசூ ( ?)


68. a.tuku na-an-bad-e-en bad.sul.hi na-an-gul-e-en ( Do not drive away a mighty man, do not destroy the city wall)


  • Ta. ஆல்தொகு நாஅன்படிஇயென் பாடிசூழ்கி நாஅன் கொல்.இயென் ( Do not put down the (rebellious) youth and kill them side the city walls)


69. gurus na-an-bad-e-en uru-ta na-an-gur-re-en ( Do not drive away the young man, do not turn him away from the city)


  • Ta. குருசு நாஅன் படிஇயென் ஊருத்த நாஅன் குறையென் (Do not put down the youths and kill them around the city walls ?)


70. lu inim.sig.ga-ke igi.bala-gim si-in-sir-sir ( The slander turns like a ‘turncoat')


  • Ta. உளு எனம்.சிக்ககே இமைபலஙிம் சீயின் சீர் சீர் ( ( You must sing the praises of the great persons with beautiful words and steady eyes?)


சொல்லாய்வுகள்


66.


dumu > Ta. தமு, தமர் : மகன் மகள் என்ற கருத்திலிருந்து ‘தமர்' அதாவது உறவினர் சுற்றம் என்ற கருத்துக்கள் வளர்ந்துள்ளன போலும். ஆயினும் தமக்கை ( <தமு.அக்கை) தமையன் ( < தமு .ஐயன்) என்ற சொற்களில் இது புதைந்து கிடப்பதாகக் கொள்ளலாம். nam-silig > சிலிங்குநம் : சில், சில்லு அதாவது வெட்டி வெட்டி சிதைத்தல் என்ற கருத்தில் இந்த சிலிங்குநம் தோன்றி இருக்கலாம். இவ்வாறு சிலைத்தலால் பெறப்படுவது ‘சிலை” ஆகும். சிலிங்கு> இலிங்கு> இலிங்கம் ?


ak-e-en> ஆக்.உ.இயென் ; us- e-en > ஓச்ச்.உ.இயென் : விரட்டுத்தல்.


67.


gis > கிச்சு ; இறந்துவிட்ட ஓர் வழக்கு போலும். ஒருவனின் குழந்தைகள், சிறுசுகள் என்ற பொருளது. காண்க ; மலாய்: kechil, kechi : சிறுசு; a.zi> அழி? an-ne-en > அண்.இயென், அணை.இயென் ? ki.sal> கீழ் சாலை : பொதிவிடம்?


68.


a.tuku> ஆல்தொகு : ஆற்றல் மிக்க. bad-e-en > படு.இயென்: கீழ் தள்ளல், அவமதித்தல்; படுத்தல்: கீழ் வீழ்த்தல். bad> பாடி ; ஊரைச் சுற்றி எழுப்பப்படும் மதில்; bad-sul-hi> பாடிசூலி? பாடிசூழ்கி? மதில் புறம்?. gul-e-en > கொல்.இயென் : கொலை செய்தல்?


69.


gurus> குறுசு: சிறியவர்கள், இளவல்கள். gur-e-en > குறை.இயென், கூறு.இயென்?


70.


inim.sig.ga> எனம்சிக்க> எனம் சொக்க: அழகிய சொற்கள். igi.bala> இமை.பல : உறுதியான நாட்டம்? . si-in-sir-sir> சீயின் சீர் சீர்> செய்யின் சீர் சீர்: சீராட்டிப் பாராட்டுதல்


(தொடரும்) 13


14


சூருபாக்கின் நெறி


அன்பர்களே


நந்நெறி என்பதற்கு ஏற்ப, சூருபாக்கு இவ்வரிகளில், பொல்லாதவை, செய்யத்தகாதவை அதாவது பிற்காலத்து இன்னாதவை பாவங்கள் போன்றவற்றில் சிலவற்றை முன்மொழிகின்றார், கற்பழிப்பு வன்முறை அடக்குமுறை போன்றவற்றை பட்டியலிடுகின்றார். அவற்றில் அக்காலத்தேயும் இளைஞர்கள் பொல்லாத சமுதாயத் தலைவர்களுக்கு எதிராக எழுந்ததையும், அதிகாரத்தில் உள்ளார் கடுஞ்சினத்தோடு அவர்களைக் கொன்று அழித்ததையும் கண்டு இத்தன்மையக் கொடூரம் கூடாது என்கின்றார். அகிம்சா நெரியின் தோற்றத்தை இங்கு காண்கின்றோம்.



68. a.tuku na-an-bad-e-en bad.sul.hi na-an-gul-e-en ( Do not drive away a mighty man, do not destroy the city wall)


  • Ta. ஆல்தொகு நாஅன்படிஇயென் பாடிசூழ்கி நாஅன் கொல்.இயென் ( Do not put down the (rebellious) youth and kill them side the city walls)


69. gurus na-an-bad-e-en uru-ta na-an-gur-re-en ( Do not drive away the young man, do not turn him away from the city)


  • Ta. குறுசு நாஅன் படிஇயென் ஊருத்த நாஅன் குறையென் (Do not put down the youths and kill them around the city walls ?)


இங்கு gurus என்பது ‘குறுசு' என்ற பொருள் உடையது, ஆக இளஞர்கள் என்று கொள்ளலாம். “bad-e” என்பதை (கீழ்) படுத்தல் எனக் கொண்டால், தகாத முறையில் குறை சொல்லி பெருமக்களை அவமதித்தல் என்று பொருளாகும். ‘gul” என்பது குல் கொல் என்றெல்லாம் இன்றும் பயிலும் சொற்களின் மூலமாவது வெளிப்படை. ‘kur-re” என்பதை குறைத்தல் எனக் கொண்டு, கைகால்களை வெட்டல் உறுப்புக்களைக் குறைத்தல் என்று கொள்ளலாம்.


இளைஞர்களுக்கு நந்நெறியாக , வலியோர்களை அவமதித்தில் கூடாது என்று செப்பும் அதேபொழுது, எதிர்த்து எழும் இளவல்களை ஊரின் மதிற்சுவர் பக்கத்தில் உறுப்புக்களைக் குறைத்தல் கொலை செய்தல், வன்முறையின் அடக்குதல் போன்றவை தகாது என்றும் கூறுகின்றார்.


இதனால் சமுதாயப் போராட்டங்கள் இன்று இருப்பதைப்போல அன்றும் இருந்த உண்மையைக் காண்கின்றோம். ஞானி போன்ற பெருமக்கள், இப்படிப்பட்ட சமுதாயச் சீர்கேடுகளை அன்றும் கண்டித்திருக்கின்றனர் என்பதொடு வன்முறைக்கு எதிர்ப்பும் தெரிசித்துள்ளதையும் அன்புநெறியை பாராட்டியுள்ளதையும் காண்கின்றோம்


இதனை வெளிப்படையாகவே கீழ் வரும் வரியில் காண்கின்றோம்.



66. dumu-mu nam.silig nam-mu-e-ak-en lu ki nam-us-e-en ( My son, do not use violence, do not throw down a man)


  • Ta. தமுமோ சில்லிங்குநம் நாம் மோ ஆக்கென், உளு கீழ் நாஅம் ஓச்சுயென்



இங்கு வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதோடு, மக்களை அடக்கு முறையில் கீழ் படுத்தல் அடிமைப் படுத்தல் போன்றவற்றையும் தகாதவை என்று கூறப்படுவதைக் காண்க.



சிலிங்கம், இலிங்கம்


இன்னுமொன்று. சைவ சமயத்தில் பயிலும் ஓர் முக்கியமான சொல்லாகிய ‘இலிங்கம்” என்ற சொல்லும் தூய தமிழே என்று ‘nam-silig” என்ற சொல் காட்டுவதாகக் கொள்ளலாம். இதன் வேர் sil அதாவது ‘சில்” என்பதே. செதுக்குதல், குறைத்தல் என்று மூலப்பொருள் உடைய இக் கற்காலச் சொல்லிருந்தே சாலை (sil-a), சில்லு, சின்ன (சிறிய) , சிலை (செதுக்கப்பட்டது) என்பவற்றொடு சின்னாபின்னம் போன்றவையும் வளர்ந்திருக்கவேண்டும். இவ்வகையில் “சிலிங்கம்” எனும் சொல் ஏறக்குறைய ‘சிலை' என்ற கருத்தில் தோன்றி பிறகு சகரங் கெட்டு ‘இலிங்கம்' ஆகியிருக்கலாம்


கைக்கிளை பெருந்திணைகள்.


தொல்காப்பியத்தில் தகாத காமவுறவுகள், அது ஒருதலையாக இருக்க ‘கைக்கிளை' என்றும் ஒவ்வாததாக இருக்க ‘பெருந்திணை' என்றும் வகை செய்யபட்டு இவை தெய்வங்கள் பயிலாத தினையின் செயல்கள் என்றும் கூறப்படுவதைக் காண்கிறோம். இதன் தோற்றுவாயை கி.மு 3000 ஆண்டு வாக்கில் எழுதப்பட்ட இந்நூலில் காணவருவது வியப்பிற்குரிய ஒன்றே. கீழே அவ்வரி



67. dumu lu-ra gis a.zi na-an-ne-en kisal-e ba-e-zu-zu ( Do not commit rape upon a man's daughter, she will announce it to the courtyard)


  • Ta. தமு உளுன்ற கீச்ச்.உ ஆழி நா அணையென் கீசால்ல ப ஏ சூசூ ( ?)


இங்கு gis என்பதை mis என்று வாசித்து ‘மைசீ' எனக் கொண்டு புதல்வி என்ற் கொள்ளலாம். இங்கு ‘மை' என்பது ‘மைந்தன்” எனும் ஆண்பால் சொல்லில் புதைந்து கிடக்கின்றது. மேலும் gis என்பதை கிச்ச்.உ > குச்சி எனக்கொண்டு ஆண்குறி எனவும் கொள்ளலாம் . ஆக gis a-zi என்பதை ‘குச்சி ஆழி' எனக்கொண்டு ‘புணர்தல்' என்று கொள்ளலாம்.


இங்கு ki.sal-e என்பதை ‘கீழ்சாலை' எனக்கொண்டு ‘தெருவில்' என்றும் பொருள் கொள்ளலாம். கற்பழிக்கப்படும் பெண், ஊருக்குப் பறை சாற்றி அவ்வாறு செய்தவனை மக்களே தண்டிக்குமாறு செய்யும் பழக்கம் அன்று இருந்திருக்கின்றது என்பதை இது காட்டுகின்றது.


இனி ஏதுவாக இது சொல்லப்படுதால், இதுவும் ஏது நுதலிய முதுமொழியாகின்றது என்பதைக் காண்க. நந்நெறிப் பகர்வது ஏது நுதலிய முதுமொழிகளைத் தருவதேயாக அமைந்துள்ளதை நாம் தவறாது காணவேண்டும்.


இனி அடுத்த சில வரிகளுக்குச் செல்வோம்


சூருபாக்கின் நெறி


71. igi-am nam-ba-e-gub-gub-bu-de-en sa-ge bi-kur-kur ( do not stand in the front, you will change your mind)


  • Ta. இமை ஆம் நாஅம் பாயே குப்புகுப்புயிடுயென் சாங்கே பீகுறுகுறு ( Do not stand watching intensively anything, your head may be confused)


72. lu-lul-la-gim e.kas-ka inim nam-ku-ku-re ( Do not swear like a liar in a public house, (your words are fixed)


  • Ta. உளு உழல்லஙிம் இல்கசியக எனம் நாஅம்கூகூறே ( Do not speak too much like a liar in the beer-house (as you are in control of your mind)


73. ki nam-nitah-a-ka um-ma-te-en su na-an-gu-gu-de ( When you approach the battlefield, do not wave your hands)


  • Ta. கீழ் நீதநம் அக உம்ம தேயென் சூர் நாஅன் கூகூத்தே


74.ur.sag dili na-nam dili-ni lu sar-ra-am ( The “hero” he alone, is absolutely unique, but men are many)


  • Ta. ஓர் சான் தனி நனம் தனிநி உளு சர்வ.ஆம்


75. (d) u-tu dili na-nam dili-ni lu sar-ra-am ( The Sun god, he alone, is absolutely unique, but men are many)


  • Ta. (தெய்வம்) உது தனி நனம் தனிநி உளு சர்வ.ஆம்


சில சொல்லாய்வுகள்


71.


ba-e> (அ)பயே> அவையே. gub-gub-bu-de-en > குப்குபுஇடுயென்: குப்பிடுதல்; குவிந்து கூர்ந்து பார்த்தல், sa-ge> சாங்கே> சான்னே : நெஞ்சம்; kur-kur > குறு.குறு (<கிறு.கிறு ?) கலக்கம் அடைதல்? bi> வீ, வை ; தருதல் எனும் வினை முன்னொட்டு. இதனின்றே ‘வயின்' எனும் சொல் பிறந்திருக்கலாம் ( bi-in> வயின்)



72. (u)lul-la> ஊழல்ல . e-kas-ka> இல்.கசி.அகம் kas> கசி: மதுபானம், கசிந்து ஒழுவதால் ‘கசி' ஆயிற்று போலும்; inim ku-ku-re> எனம் கூறுகூறே : சொற்களைக் (எனம்) தொடர்ந்து கூறியவாறு இருத்தல்


73. nam-nitah: நீதநம்> நாதநம் : ஆண்மை சிறந்திருக்கும் இடம்; போர்க்களம்? te-en> தேய்யென் : தேய்தல்: தொடுதல் , நெருங்குதல் ; um-ma> உம்ம: காலங்குறிக்கும் இடைச்சொல்; um-ma-te-en > தேயென் உம்ம: நெருங்கும் போது; gu-gu-de> கூகூத்தே: கூத்தாடுதல்


74. ur.sag> ஓர்.சான்> சான்.ஓர்> சான்றோர்; dili> தனி; dili-ni> தனிநி; na-nam > நனம்: மிக நன்றாக; sar-ra-am> சர்வ ஆம்


75. utu> உது: உதிப்பது: சூரியன். உதி உதயம் என்ற சொற்களைக் காண்க.


(தொடரும்) 14


15


சூருபாக்கின் நெறி


அன்பர்களே


ஆய்வுக்குரிய வரிகளில், வரலாற்று சிறப்பு மிக்கதும் தமிழ மெய்யறிவுச் சிந்தனைகளின் தோற்றத்தை விளக்குவதுமாக சில விடயங்கள் கிடக்கின்றன.


முதலில் மதுபானம் உட்கொண்டு மதி மயங்குதல் அன்றே இருந்ததாக அதனை சூருபாக்கு மறைமுகமாக கண்டிப்பதை கீழ் வரும் வரியில் காண்கின்றோம்.


72. lu-lul-la-gim e.kas-ka inim nam-ku-ku-re ( Do not swear like a liar in a public house, (your words are fixed)


  • Ta. உளு உழல்லஙிம் இல்கசியக எனம் நாஅம்கூகூறே ( Do not speak too much like a liar in the beer-house (as you are in control of your mind)


இங்கு e.kas.ka நிச்சயமாக ‘இல்.கசிஅகம்' தான் அதாவது மதுபானக் கடை யாகும். Su. kas என்பது ‘கசி' என்னும் வேரினைக் கொண்டு பிறந்த ஆகுபெயர், கசிந்தோடுவது. சுமேருத் தமிழில் மதுபானம் இவ்வாறே சுட்டப்படுகின்றது. மதுபான போதையில் நினவு இழந்து மதிகெட்டு இருந்தது அன்றே உண்டென, இந்நிலையே சூருப்பாக்கிற்கு ஓர் ஊழல்பேர்வழியின் இலக்கணத்தை அறிய உதவுகின்றது. ‘lu-lul-la” என்பது “உளு உழல்ல” என்று முழு உருவம் எடுக்கும். உறுதியாகவும் தெளிவாகவும் கூறாது, பிறழ்ந்து பிறழ்ந்து ஆக பொய்யாகப் பல கூறுவான் எவனோ, அவனே உளு-ஊழல்ல ஆகும். மதுபோதையில் நினைவு தடுமாற, அங்கு உளறுதல் தான் நடக்கும், உண்மை கூறுவது முடியாது என்பதாக, அதனை இங்கு எடுத்துரைத்து அவ்வாறான செய்கை தகாதென கண்டிக்கின்றார் சூருபாக்கு.


அடுத்து சைவ சித்தாந்தத்தில் முதலிடம் பெற்றுள்ள “நாதம்' என்ற சொல்லின் தோற்றத்தை அல்லது பழைய வடிவினை கீழ் வரும் வரியில் காண்கின்றோம்.


73. ki nam-nitah-a-ka um-ma-te-en su na-an-gu-gu-de ( When you approach the battlefield, do not wave your hands)


  • Ta. கீழ் நீதநம் அக உம்ம தேயென் சூர் நாஅன் கூகூத்தே


இங்கு ‘ki nam-nitah-a-ka' என்பது ‘ கீழ் நீதநம் அக” என்று கொண்டால், நீதநம் என்பது ‘போரிடுதல் ‘ என்பதாகும். மேலும் ‘nitah' என்ற சொல் ஆண்பாலைப் பொதுவாகக் குறிக்கும். ‘dumu nitah' என்றால் ஆண்மகன் என்று பொருள் படும். இச்சொல், உயர்வினை அல்லது ஓங்கி நிற்பதினைக் குறிக்கும் “நீ' ( நில், நிவர், நிமிர் ) என்ற வேர்ச்சொல்லிலிருந்து பிறந்து “உயர்ந்து நிற்கும் உயிர்” என்று பொருள் தந்து பயன்பாட்டில் ஆண்மக்களைக் குறித்து நின்றது போலும். ஆண்மைக்கு அடையாளம் வீரம் என்பதின், அந்த வீரவிளையாட்டுகள் பயிலும் இடம், ஆண்களுக்கே உரித்தாகிய ‘கீழ் நீதநம் அகம்' என்றாகி இருக்கின்றது. ஓர் உயிர்க்கு ஆண்மையை ஆகவே வீரத்தைத் தரும் தத்துவம் இதனால் நீதம் எனப்பட்டு பிறது சிறிது திரிந்து ‘நாதம்' என்றாகி இருக்கவேண்டும். ‘நாதன்' என்றால் ‘தலைவன்' என்ற பொருள் இருப்பதையும் காண்க. ‘நாயன்' ‘நாயகன்' போன்ற சொற்களும் இவற்றின் அடியாகப் பிறந்துள்ளன என்றும் கொள்ளலாம். இதனால் நாத தத்துவம் என்பது ஆண்மைக்கு மூலமானதும் தனித்து வீரத்தின் உயர்ந்து செலற்கு ஏதுவாகிய ஓர் தத்துவம் என்றும் அறியக் கிடக்கின்றது.


இதனை உறுதி செய்வதாக வரலாற்றுச் சிறப்புமிக்க கீழ்வரும் வரிகள்.


74.ur.sag dili na-nam dili-ni lu sar-ra-am ( The “hero” he alone, is absolutely unique, but men are many)


  • Ta. ஓர் சான் தனி நனம் தனிநி உளு சர்வ.ஆம்


75. (d) u-tu dili na-nam dili-ni lu sar-ra-am ( The Sun god, he alone, is absolutely unique, but men are many)


  • Ta. (தெய்வம்) உது தனி நனம் தனிநி உளு சர்வ.ஆம்


இங்கு ‘ur-sag' என்பதே ‘ஓர்-சான்'என்றாகி மருவி ‘ஒருத்தன்' என்றும் பிறழ்ந்து ‘சான்றோன்' என்றும் ஆகியிருப்பது தெளிவு. மக்கள் பலவாக இந்தச் சான்றோன் எனப்படும் மாவீரன் ‘தனி நனம்' , ஏனையோரைவிட தனித்து உயர்ந்து நிற்பவன். இதற்கு உவமையாக சூரியனே , உதியே சுட்டப்படுகின்றான். விண்மீன்களில் எவ்வாறு ஆதித்தன் சிறந்து நிற்கின்றதோ அதேப் போல மக்களிடையே இந்த சான்றோன் சிறந்து நிற்பான் என்று கூறுகின்றார் நம் சூருபாக்கு. இதனை உள்ளுறை உவமமாகக்கொண்டால், எவ்வாறு ஆதவன் உலகிற்கெல்லாம் ஒளிதந்து உதவுகின்றானோ அதேப் போல சான்றோன் என உயர்கின்ற ஒருவனும் செய்வான் என்றும் உணர்த்தப்படுவதைக் காண்க.


தமிழப் பண்பாட்டின் கூறுகளை நிறுத்திய இக்கருத்து பிறகு விரிவாக ஆயப்பட்டு தனி கட்டுரை படைக்கப்படும்


இனி அடுத்த சில வரிகளுக்குச் செல்வோம்


சூருபாக்கின் நெறி.


76. ur.sag-da gub-bu-de ji-ju he-en-da-gal ( When you stay with the ‘hero' , your life will last)


  • Ta. ஓர்.சான்னொடு குப்புத்தே ஜீவ்சூ ஈண்டு கால்


77. (d) utu-da gub-bu-de ji-ju he-en-da-gal ( When you stay with Sun god, your life will last)


  • Ta. (தெ)உதுவொடு குப்புத்தே ஜீவ்சூ ஈண்டு கால்


78. – 87 வரை முன்பே வந்த 5 - 12 வரை வந்தவையே


சொல்லாய்வுகள்.


இங்கு விளங்கும் பெரும்பாலான சொற்கள் ஏற்கனவே விளக்கப்பட்டவை யாகும். புதிதாக he-en-da இருகின்றது, இது ‘நீண்டு' என்பதின் நகரம் கெட்டு ‘ஈண்டு' ஆகிவிட்டதைக் காட்டும் போலும்.


(தொடரும்) 15



















பங்களிப்பாளர்கள்

Ulagankmy

இப்பக்கம் கடைசியாக 2 ஏப்ரல் 2011, 02:36 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 949 முறைகள் அணுகப்பட்டது.