வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

முதற் சங்கத் தமிழ்" சூருபாக்கின் நெறி - வரிகள் 1-55

From மரபு விக்கி

Jump to: navigation, search

சூருபாக்கின் நெறி

உரை: முனைவர் கி.லோகநாதன்

1. [u]ri-a u sud-ra ri-a ( In those distant days, in those far remote days)

ஊ எரிய ஊ சூத்திர எரிய

2. gi ri-a gi bad-du ri-a ( In those nights, in those far-away nights)

மை அரிய மை பண்டு அரிய

3. mu ri-a mu sud-ra ri-a ( In those years, in those far remote years)

மூஉ அரிய மூஉ சூத்திர அரிய

4. u-ba gestu.tuku inim.galam inim.zu-a kalam-ma ti-la-am ( In those days, the intelligent one, who made the elaborate words, who knew the (proper) words, and was living in Sumer .

ஊப கெஸ்த்துதொகு எனம்கலம் எனம் சூவ களம்ம தில்லாம்

5.Suruppak gestu.tuku inim.galam inim.zu-a kalam-ma ti-la-am ( Suruppak - the inelligent one, who made the elaborate words , who knew the (proper) words, and was living in Sumer

5. சூருபாக்கு கெஸ்த்துதொகு எனம்கலம் எனம் சூவ களம்ம தில்லாம்

சொல்லாய்வுகள்.

1. u> ஊ : முன்பு, அப்பால் எனும் சுட்டு. சுட்டுக்களாகிய அ இ உ என்பதில் 'உ' எனக் கொள்ளினும் தகும். ஊ என்பது ஓங்கி உயர்ந்து நிற்பதைக் காட்ட அதனை வேராகக் கொண்டு இச்சுட்டு பிறந்திருக்கலாம்.

ri-a > உரிய, எரிய அரிய என்றவாறு சூழலுக்கு ஏற்ப வெவ்வேறு சுட்டுகளைப் பெற்று பொருள் வேற்றுமையையுங் கொண்டுள்ளது.

ri-a> ra > ரா : ப-ரா> வரு : தோன்றி நின்று சுடர்தல், படர்தல் என்பன போன்ற கருத்துக்கள் இதில் அடக்கம். ரா-சன்> அரசன், ராயன் , அரையன் ( வடமொழி: ராஜா ). சூரியனைப் போலச் சுடர்பவன்

eri> எலி> எல். எல்லு : ஒளிப்பிரகாசம். காண்க "எல்லே விளக்கம்"

sud-ra> சூத்திர: 'சூடு' என்றால் உச்சி என்று பொருள். இங்கு அதனடியாக 'தொலைவு" என்றும் காலக் கருத்தோடு புணர்ந்து 'பழங்காலம்' என்றும் வருகின்றது. சூத்திரர் என்பார் மிகப் 'பழமையானவர்கள்' "தொல்காலத்தினர்" 'உச்சியினர்' 'உயர்ந்தோர்' என்றும் படும். இந்து சமயத்தின் சாதிப்பிரிவில் இப்பொழுது அடங்கும் சூத்திரர் ( எல்லா தமிழர்களும் சூத்திரர்தான்!) தொல்காலத்தினர் , பழமையானவர்கள், பூர்வக் குடிகள், உயர்ந்தோர் என்றெல்லாம் தொடக்கத்தில் இருந்திருக்க பிற்காலத்தில் 'தாழ்த்தப்பட்டோர்" என்றாகி விட்டது போலும்.

2. gi=mi> மை: இருண்ட. மூலம் அநேகமாக "ஙி' என்றாகலாம். இது ஙகாரம் சொல்முதல் ஆகாது என்ற தொல். விதிக்கு புறம்பானது. தொடக்கத்தில் இவ்வாறு இருந்திருக்க பிறகு ஙகாரம் கெட்டு ஞ, ந, ஆ, ம என்றெல்லாம் திரிந்துவிட்டது போலும்

bad-du> பட்டு> பண்டு. 'படு" என்றால் 'தோன்றுதல்' என்றும் பொருள்படும். இதனின் அடியாக காலக்குறிப்பின் 'பட்டு' தோன்றி மெல்லினம் பெற்று 'பண்டு" ஆகிவிட்டது போலும். இது இன்றும் நம்மிடை§ பொருள் பிறழ்ச்சியின்றி இருக்கும் ஓர் சொல்.

3. mu>மூஉ> முளை : தோன்றுதல். இதன்வழி 'தோன்றிய காலம்" என்று காலக்கருத்தும் வளர, 'ஆண்டு' எனவாகிவிட்டது போலும்.

4. u-ba> ஊப, உப்-ப: அப்பொழுது. இங்கு 'ப' எனும்சொல் பொதுவாக ஒன்றினை விளம்பும் , பெயரிடும் ஓர் சொல்லாகும். காண்க அப்-ப &இப்-ப . பழங்காலம் என்று குறிக்கும் 'உப்-ப" எனும் சொல்லும் இருந்திருக்க வேண்டும், வழக்கிழந்து விட்டதுபோலும்

gestu>கெஸ்த்து> அகத்து: அகத்தியம்: மேலான ஞானம். மேலும் gestu> காது. இதனால் கெஸ்த்து , கேள்வி ஞானம் எனினும் அமையும். பழங்காலத்தில் வாய்மொழி வழியாகவே ஞானபோதகங்கள் நடந்திருக்க, நன்றாகக் கேட்பதே ஞானத்திற்கு அறிவிற்கு ஓர் சொல்லாகிவிட்டது

கெஸ்த்து --> அகஸ்தியர் ; கெஸ்த்து எனும் அறிவுடை ஓர் ஞானவான்

gestu.tuku> கெஸ்த்துதொகு: இங்கு இந்தத் 'தொகு' மலாய் 'taaku, taahu, taau" என்பதோடு ஒப்பிட்டுக் காண 'அறிந்திருத்தல்' என்று பொருள் படுகிறது. இதன் அடியாக 'தகு' தகவு' என்பனபோன்ற சொறகள் பிறந்திருக்கலாம்.

inim.galam> எனம்கலம். இங்கு 'எனம்' எனும் பெயர்சொல் வழக்கு இறந்துவிட வினைச்சொல் வழக்காக "என, என்ற், என்" என்றெல்லாம் இன்னும் வழக்கில் பயில்கின்றது.

galam> கலம்: சொற்களால் விளம்பப்படும் அறிவு. கலம்--> கல்வி: இந்த அறிவினைத் தரும் செயல்கள். 'கல்" என்ற சொல்லே 'உரக்கப் பேசுதல்' 'கலி-த்-தல்" ஆகும். கலித்தொகை : உஅரியாடல்கலை மையமாக் கொண்ட பாடல்களின் தொகுப்பு. கலி என்றால் ஆர்வாரம் என்பதைக் காண்க. கலிகாலம்: வாய்விட்டு கதறி அழுகின்ற பொல்லாத காலம். கலியுகம்: இப்படிப்பட்ட இன்னல்களைத் தரும் யுகம். உ-கம் > உகம், யுகம்.

சுமேருப் பண்பாடு சிதைவுற்ற காலத்திலிருந்து (அதாவது கி.மு 2000) இந்த கலிகாலக் கணக்கு தோன்றி இருக்கலாம்.

zu-a, ju-a > ஜூவ, சூவ: தெளிந்திருத்தல் . சூ> சுடர்: வெளிச்சம், பிரகாசம் தெளிவு

kalam-ma> களம்ம: இங்கு அகார ஈறு இடப்பொருன்மையைத் தரும் வேற்றுமை உருபு. 'களம்" என்பது 'போர்க்களம்' 'அமர்க்களம்' என்ர சொற்களில் பயில்வது தான், பரந்த வெளி என்னும் பொருளது. சகளம், நிஷ்களம், அகளம் என்றெல்லாம் தத்துவத் தமிழில் பயிலும்.

ti-la-am = til-la-am> தில் ஆம் : தில்: வாழ்தல். தில்-அ> திரம், தினம்?

5. suruppak> சூருபாக்கு : கூரான சூலம் அல்லது ஈட்டி; சூலமாகிய வேல் என்பதின் பழைய பெயர் இதுவெனத் தோன்றுகிறது. ஒன்றினை பகுத்து வெட்டுவது 'பாக்கு' ஆகின்றது. மலாய் மொழியில் 'paakku"என்றால் 'ஆணி' என்று பொருள்படும். சூலத்தின் பெயராக அதனை தாங்கி நிற்கும் சிவபெருமானின் திருமுருகனின் பண்டையப் பெயர்களில் இது ஒன்றாக இருக்கலாம்.

(தொடரும்) 1

2

இஇந்த நூலின் தொடக்கமே விந்தையாக இஇருக்கின்றது. இஇந்த முதுமொழிகளை செப்பிச் சென்ற சூருபாக்கு மிகவும் பழமையானவர் என்று கூறுதற்கு வந்தவர் இஇந்த பிரபஞ்சத்தின் தொடக்க காலத்திற்கே செல்கின்றார். இஇதுவும் மிக மிக பழமையானது என்பதை உயர்வு நவிற்சி அணியாக , 'கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி' என்பது போன்று சுட்டுவதாகலாம். ஆக இஇந்நூலின் மிகப்பழைய எழுத்து வடிவம் கி.மூ 2500 என்றாலும் இஇந்நூல் அதற்கு முன்னதாக பல நூற்றாண்டுகள் வாய்மொழியாக வழக்கில் இஇருந்திருக்கவேண்டும். ஆக இதன் காலம் ஏறக்குறைய கி.மு. 3000 என்று கொள்வதில் தவறில்லை. சூருபாக்கு இஇன்னார் என்ற அறிவெல்லாம் மங்கிப் போய் ஓர் புராண புருடனாகத் தோன்றுவதற்கு பல நூற்றாண்டுகள் பிடிக்கலாம்.

மற்றும் திருமுருகனைத் தான் இஇப்படிக் கூறுகின்றனரோ என்று நினைக்கவும் தோன்றுகிறது.

ஆயினும் நாம் கருத வேண்டியவொன்று: இஇப்படி பழமையைக் குறிக்கவந்த ஆசிரியர் மிக நுட்பமான பிரபஞ்சவியலை கூறிச் செல்வதுதான். இஇந்த பிரபஞ்சமே இஇருளில் மூழ்கிக் கிடக்க அதுபொழுது எரிபோன்று தீக்குழம்புகள் வெடிக்க, அதுபொழுதே இஇந்த உலகமும் ஏனைய அனைத்தும் தோன்றியதாம் ! ஆக இஇந்தப் பண்டைய காலத்திலேயே சுமேருத் தமிழர்கள் வானசாத்திர அறிவில் மிகவும் சிறப்புற்று விளங்கினர் என்பதை காணமுடிகின்றது. எப்படி இஇதுவெல்லாம்? என்ற கேள்வியை எழுப்பி அன்பர்களை சிந்திக்க வைத்து அடுத்த சில வரிகளுக்குச் செல்வோம்.

சூருபாக்கின் நெறி

6. suruppak-e dumu-ni-ra na na-mu-un-ri-ri ( Suruppak gave instructions to his son)

சூருப்பாக்கே தமுநீ(ன்)ற நன(ம்) முன் உரி-உரி

7. suruppak dumu ubartu.tu-ke

8 zi.u.sud-ra dumu-ni-ra na na-mu-un-ri-ri ( Suruppak, son of Ubartutu, gave instructions to his son Ziusudra)

சூருப்பாக்கு தமு உபர்தூதுக்கே

ஜீவசூத்திரா தமு நீ(ன்)ற நன(ம்) முன் உரி உரி

9. dumu-mu na ga-ri na-ri-mu he-dab ( My son, let me give you inச்truction, may you take my instructions!0

தமுமோ நான் கரை நெறிமோ ஏய்தபு ( My son! don't neglect the well meaning words I utter)

10. zi.u.sud.ra inim ga-ra-ab-dug gizzal he-em-si-ak ( Ziusudra, let me speak a word to you, may you pay attention to it!)

ஜீயுசூத்திரா எனம் ஙா(ன்)ற அவ்தூக்கு கீச்சல் வீயிம் சீ ஆக்கு

சொல்லாய்வுகள்

6. suruppak-e> சூருபாக்கே: இஇங்கு ஈற்றில் நிற்கும் ஏகாரம், பிரிநிலை ஏகாரம்

dumu-ni-ra> தமு நீற> தமு நீ(ன்)ற. தமுநீயிட. இஇங்கு 'ra' என்பது ' ற' வாகும். ஆயினும் சுமேரு மொழி வல்லுநர்கள் இஇதனை எழுத்துப்பெயர்ப்பில் காட்டுவதில்லை. 'அவன்ற' 'இஇவன்ற' என்பன 'அவன்ட' 'இஇவண்ட' என்றும் வட்டார வழக்குகளில் இஇன்றும் பயில்வதைக் காண்க. 'நீ' என்பது முன்மை மூவிடப்பெயராக (second person personal pronoun) இஇல்லாது 'ஒருவன்' என்று உயர்தினைச் சுட்டாய் விளங்குவதைக் காண்க.

na na> நன, நலம் : நல்லவை

mu-un-ri-ri> முன் உரி உரி> முன் உரை உரை. இங்கு "முன்" என்பது 'முன்பு" எனும் கருத்தின் காலச் சொல்லாக இஇருக்கலாம்.

7.dumu ubartu.tu-ke> தமு உபர்தூதுக்கே. இஇது "கந்தனுக்கு மனைவி" என்பது போன்ற வழக்கு. இஇங்கு கே/கு உயர்திணைக் கிழமைப் பொருள் வேற்றுமை உருபு. 'கு' என் வேற்றுமை இஇப்படியும் மொழியில் வழங்கும் என்ற குறிப்பு தொல்காப்பியத்தில் உண்டு.

ubartu.tu. உபர்தூது> உமப்ர்தூது: வானிலிருந்து வெளியாகும் சொற்கள், அசரீரி வாக்குகள்.

இஇப்பெயர் நாதசொரூபனாகிய சிவபெருமானுக்குரிய ஓர் பெயராகக் கொண்டால், சூருபாக்கு அவனது மகனாக திருமுருகன் ஆகின்றான்.

8. zi.u.sudra>ஜீவசூத்திரன் : நெடுங்காலம் வாழ்பவன், நீண்ட ஆயுளை உடையவன். இஇப்பெயரே அக்காடிய மொழியில் அதே கருத்தின் 'நாபிஸ்த்து' என்று பொழிபெயர்க்கப்பட்டு செமித்திய சமயங்களின் பழைய ஏற்பாட்டில் பயிலும் 'noah" என்றும் 'நூ நபி' என்றும் ஆகிவிட்டது.

9. ga-ri>கரி. கலி, கரை: உரக்கச் சொல்வது

na-ri> நறி> நெறி : ஒழுங்கான பாதை. நறி> நதி : ஆற்றுழுக்காக நீர் ஓடும் ஆறு. இஇச்சொல் இஇன்றும் தமிழில் பயில்கின்றது.

he-dab> ஹே தபு> ஏ தபு. தபு> தம்பு : ஒடிவிடாது நிறுத்துதல். இஇது வடமொழ்யில் 'ஸ்தம்பம்" என்று வழங்கும். தம்பு> தம்பம்: நிற்கின்ற தூண். தம்பனம் > மூச்சு அடக்குதல்

10. gizzal> கீச்சல் : உரக்கச் சொல்லி ஓதுதல்

he-em-si-ak> ஈம் சீ ஆக்உ. ஈம் ஆக்கிசீ> ஈம் ஆக்கீஇ ?

(தொடரும்)2

3.

ஆய்ந்துள்ள வரிகளில், வியப்பான சில விடயங்கள், பெயர்களின் வழியாக உணர்த்தப் படுகின்றது. இவை சரித்திர புருடர்களின் பெயர்களாக இருக்கலாம். ஆனால் ஏன் இப்படிப்பட்ட பெயர்கள் என்பதே நம் ஆய்விற்குரிய விடயமாகும். மூத்தவராக உபர்தூது (ubartu.tu), அவரது திருமகனாகக் சூருபாக்கு (Suruppak), இவரின் புதல்வனாக ஜீவசூத்திரன் (zi.usud-ra). இப்பெயர்களில் புதைந்து கிடக்கும் சில கருத்துக்களைக் காண்பம்

உபர்தூது என்றால் , உம்பர் உலகத்திலிருந்து எழும் வாக்குகள் ஆகும் அல்லது ஆணையாகும். ஆக வானுலகில் யாண்டுமே ஓர் சொல், ஓர் வாக்கு இருக்கின்றது என்ற தத்துவக் கருத்து இங்கு விளம்பப்படுவதைக் காண்க. அதனை தந்தையாகக் கொண்டு அதனின்று உதிப்பதாக சூருபாக்கு அதாவது மிக கூரான சூலம் வெளிப்படுகின்றதாம் இது நமக்கு உடன் திருமுருகனின் ஞானவேலை நினைவிற்குக் கொண்டு வருகின்றது. என்றும் நிலைத்து நிற்கும் அந்தரத்து ஓர் வாக்கிலிருந்து, இருளைக் கிழித்துப்போக்கி பொருளை நிறுத்தும் ஓர் ஞானவேல் வெளிப்படுகின்றதாம். அத்தோடு மட்டுமில்லாது, இந்த சூரக் கதிர்கள் படரவேதான், அதனின் திருமகனாக ஜீவசூத்திரன் தோன்றுகின்றானாம், அதாவது உயிர்த்து வாழுகின்ற ஜீவன் பிறக்கின்றானாம்.

ஆக இங்கு சிவபெருமான் நாதசொரூபனாக நிற்பதையும் அவன் ஆணையின் வெளிப்பாடாக ஞானவேலின் திருமுருகன் தோன்றுவதையும், அதன் காரணமாக அநாதியே இருளிற் கிடந்த ஆன்மாக்கள், உயிர்ப்புப் பெற்று வாழுகின்ற உயிர்களாக வாழத்தொடங்குகின்றன என்றவாறு இந்நூலின் பிரபஞ்சவியல் செல்கின்றது.

மேலும் இக்கருத்துக்கள் கிரித்துவ சமயத்தில் பல பிறழ்ச்சி வடிவங்களில் இன்றளவு பயில்வதையுங் காண்கிறோம். ஜீவசூத்திரனே அக்காடிய மொழியில் நாபிஸ்துவாகி பின் நோவா என்றும் இஸ்லாத்தின் நூ நபி என்று ஆகிவிட்டதை சுட்டியுள்ளோம். இன்னொன்றையும் இங்குக் கருதவேண்டும். zi.u என்ற சொல் zi.us என்றும் சுமேரு மொழியில் பயில்கின்றது. இச்சொல்லே Jesus என்றாகி இயேசுநாதருக்கும் ஓர் பெயராகி ஆகி இருக்கலாம். ஜீவசூத்திரன் என்ற பழந்தமிழ் பெயரே ஜீசஸ் என்றாகி பிறகு தற்காலத் தமிழில் இயேசு என்றாகி இருக்கலாம்.

இனி அடுத்த சில வரிகளுக்குச் செல்வோம்.

11. na-ri-ga-mu su nam-bi-bar-re ( Do not neglect my instructions)

நெறிஙான் மோ சூர் நாஅம் பின்பார்ரே (Do not trangress the way I instruct you on in times to come)

12. inim dug-ga-mu na-ab-ta-bal-e-de ( Do not transgress the word I speak)

எனம் தூக்கமோ நா ஆப்த பாலிடே

13. na.ri ab.ba nig kal-la-am gu-zu he-em-si-gal (The instructions of old man are precious, may you submit to them)

நறி அப்பா நிக கல்லாம் கவ்ஜூ ஏயிம்சீகால்

14. dur gu-di na-ab-sam-sam gu egir-zu sa-ra-ab-si-il ( Do not buy an ass which bleats (too much), behind you it will scream with a ear- splitting voice )

தூர் குதி நா அப்சம்சம் கூ எதிர்ஜு சர ஆப் செல் ( Do not buy a horse galloping (to much), in future it will go away from you galloping)

15. gan kaskal-la nam-bi-ib-ga-ga nam-silig gu-ga-am ( Do not place a filed on a road, it is disastrous)

காணி கசிகால்ல நாஅம் கால்கால்-இப்பி சிளிங்குநம் கவ்வுகாலாம் (Do not have your field blocking the canals, there will be problems that make you weep)

சொல்லாய்வுகள்

11. na.ri> நறி, நெறி; su=sur> சூர், சொல் . காண்க மலாய்:suruh : to tell , to order.

bar-ra(< bal-le) > பால்ல, பார்ர : பாரு: விரட்டுதல் போக்குதல். பால்> கடந்து செல்லல், பாலம்: கடந்து செல்ல உதவும் அமைப்பு, கருவி. பரம்பரை பாரம்பரியம், பராப்தம் போன்ர சொற்கள் இதனைடியாகப் பிறந்துள்ளன்.

bi-bar-re> பீ பார்ரே: 'பீ' என்பது 'முன்' ஓர் முன்னொட்டு, "தருவது" என்ர கருத்தது -- திரிதரு என்பதில் போல. பிற்காலத்டில் இதுவே (bi, bi-in) 'பின்' என்ற காலச்சொல் ஆகியிருக்கலாம்.

12. na-ab-ta-bal-e-de> நா ஆப்து பாலிடே:

ஆப்து> அவற்றை எனும் பன்மை சுட்டு. பால்=பார்: கடத்தல், மீறுதல்

13. ab.ba> அப்பா: தந்தை, முத்தவர், பெரியோர். இன்றும் பயிலும் ஓர் சொல் இது.

nig kal-la-am> நிக கல்லாம் . மிக கல்லாம்: இங்கு 'கல்' என்பது அருங்கலம் என்பதில் வரும் 'கலம்' என்னும் பொருளது, விலை மதிப்பற்றது. இதேக் கருத்து "அருங்கலச் செப்பு" என்பனபோன்ற நீதி நூறகளிலும் பயில்கின்றது.

nig> நிக: உயர்ந்து நிற்பது. நிக> மிக: மிகவும் மேலானது.

14. dur> தூர்> துரகம்: குதிரை; gu-di> குதி ?

samsam> சும்சும்: சுமத்தல், உடன் கொண்டு செல்லுதல்.

sa-ra> சர, சரி: சரிதல், நழுவிச் செல்லுதல். si-il> செல் sa-ra-si-il> சரி(ந்து) செல்(லும்)

15. gan> கண், காணி ; வயல்; kaskal> கசிகால்: வாய்க்கால், கால்வாய்?

nam.silig > சிளிக்குநம்> சிணுங்குநம்: சிறிது அழுதல்

(தொடரும்) 3


4

அன்பர்களே,

மேலே ஆய்ந்த சில வரிகளில் சில அழகிய சொற்களைக் கண்டோம். அவற்றில் 'காண், காணி' (gan) என்ற சொல் சிறப்புமிக்கது. அன்றே உழவுத் தொழிலில் தமிழ மக்கள் சிறப்புற்று விளங்கினர் என்பதையும், பெரும்பாலான நந்நெறிக் கருத்துக்கள வேளாண் மாந்தர்களாக இருந்த மக்களிடையே எழுந்துள்ளது என்பதையும் காண்கிறோம். இங்கு 'அப்பா' (ab-ba) என்ற சொல்லும் உருவிலும் பொருளிலும் எவ்வித மாற்றமுமின்று பயில்வதைக் காண்கிறோம். மேற்கொண்டு 'துரகம்' என்ற சொல் வரலாற்று சிறப்பு மிக்கது. ஆரியர் என்றோர் இனம் இந்தியாவிற்கு வந்தது என்றும் அவர்கள் தான் குதிரைகளைக் கொண்டு வந்தார்கள் என்றும் ஓர் கதை உண்டு. ஆரியர் என்ற இனத்தின் அடையாளக் குறியாக இதனை வற்புறுத்துவர். ஆயினும் இவ்வரி பண்டையத் சுமேருத் தமிழர்கள், குதிரைகளை அறிந்திருந்தார்கள் என்று காட்டுகின்றது. இந்த குதிக்கின்ற துரகம் ( dur gu-di; துர் குதி) நிச்சயமாக குதிரைதான். 'துரிதம்' 'துரிசு" என்பனபோன்ற சொற்களைக் காண, வேகமாக ஓடும் ஓர் பிராணியாக சுமேருத் தமிழர்கள் இதனை அறிந்திருந்தனர் என்பது தெளிவு. இன்னொரு சொல் 'an-se" என்பது. இதுவும் 'அசுவம்" என்ற சொல்லின் மூலமாகத் தெரிகின்றது. 'அசை' என்ற வேரிலிருந்து இது பிறந்திருக்கலாம்.

இனி அடுத்த சில வரிகளுக்குச் செல்வோம்.

16. a.sa x kaskal anse-ka nam-ba-e-ur-ru ze.u.bur.su-ga-am ( Do not plough a field on the road of asses, it is quicksands (?)

ஆல்செய் x கசிகால் வன்செய்யக நாஅம் பா ஏ உறு, சே ஊ புல் சூழ்காம் ( Do not plough fileds watered by canals like dry lands, tall grass will surround the crops)

17. gan sa[......] puu na-an-du-un a-e sa-re-eb-hul-hul ( Do not make a well in the midst of a filed, the water will do damage to you)

காணி சா[....] பூ நாஅன் எடுவன் ஆலே சரி இப்பு ஒல் ஒல் ( Do not dig a well in the middle of filed, the water that overflows will bring damages)

18. e sila.dagal-la nam-bi-ib-la-e kes.da gal-la-am ( Do not palce a house too close to a public square, it is taboo)

இல் சாலைதகல்ல நாஅம் பீஇப்பு எழுவே கஷ்டம் கால்லாம் ( Do not build a house near the highway, there will be many difficulties)

19. su.du.a nam-mu-un-tum lu-bi sa-ba-e-dab-be ( Do not gurantee (for someone), that man will have a hold on you)

சூதுவ நாஅம் முந்தூவும் ஆளுபி சபையே தப்பு ( Do not gamble people will complaint in the assembly)

20. za.e su.du.a nam-mu-e-ak lu sag bi-ib-sal-la-e-a ( And you -- do not cause someone to gurantee, a man( who does this) is silly(?)

ஜாயே சூதுவ நாம் முன்.ஆக்.உ ஆளு சான் பீ.இப்.உ சல்லையே.அ ( And you, shold not encourage gambling, whoever does this gets ruined.)

சொல்லாய்வுகள்.

இங்கு வரிகள் 18-20 வரை நாம் பொருளை வேறாகக் கொண்டுள்ளதைக் காண்க. இவற்றின் விளக்கங்கள் கீழே. ஏற்கனவே விளக்கப்பட்டுவிட்ட சொற்கள் ஓர் சிறிதே இங்கு விளக்கமுறும்.

16. a.sa> ஆசா> ஆல்செய்: நீர் பாசனம் உள்ள வயல். ஆசா> ஆசை: அந்தக் காலத்தில் மக்கள் பெரிதும் விரும்பியது நீர் பாசன வயல்களாக இருக்க, 'ஆசை'ப்படுவதாக இருக்க, 'ஆசை' என்னும் சொல் அதனடியாகப் பிறந்துள்ளது போலும்.

an.se> வன்செய் : வறண்ட நிலம், புஞ்சை நிலன். நஞ்சை புஞ்சை என்ர சொல்லாட்சிகளைக் காண்க. நீர்ப் பாசனம் உள்ளது 'நஞ்சை' யாக, அது இல்லாத நிலம் 'புஞ்சை' எனப்படும். அதுவே இங்கு 'ஆசெய்" "வன்.செய் " என்று குறிக்கப்படுகின்றது போலும்.

ur-ru> உறு ,உழு :ஆழப் பதிதல்

u.bur> ஊ புல்: மிக உயர்ந்து வளரும் புல். bur>புர்> புல்

ze> சே , சீ: காண்க: (அரி)சி, செம்(பு) ; su-ga-am> சூழ்காம் :

17. gan> காண். காணி; puu> பூவம்: கிணறு. 'பொந்து' இதனடியாகப் பிறந்திருந்தால் , 'பூ' என்பது ஓர் குளி என்று தொடக்கத்தில் இருந்திருக்க வேண்டும். இதண்டியாக 'பூமி' என்ர சொல்லும் பிறந்திருக்கலாம்.

du> எடு > வெடு: இங்கு உருவாக்கல். வெடு-டு> வெட்டு?

a-e sa-re> ஆல்.ஏ சரி : சரிந்தோடும் நீர். a> அம், ஆல் : நீர்

18. e sila.dagal-la > இல் சாலைதகல்ல. sila> சீல: சாலை : வெட்டப்பட்ட பாதை; சில்> சிதைத்தல், சில்லு சில்லாக உடைத்தல்; சிலை: இவ்வாறு செய்து உருவாக்கபட்டது? சில்> சின்: சின்ன, சிறிய

la-e> எழுவே? kes.da> கஷ்டம்: இது இன்றும் பயிலும் ஓர் சொல். இது 'ஷ'கரம் சுமேருத் தமிழில் பயின்றதைக் காட்டும். இதேச் சொல் கட்டு (< kes.da) என்றும் சுமேருத் தமிழில் பயிலும்

gal-la-am> கால்லாம் ;உறுதியாக நிற்றல்; கால்: உறுதியாக நிற்க உதவும் உடல் உறுப்பு. மேலும் "கால்லாம்" நீண்டிருப்பது என்ர பொருளைன் 'கால்" என்ற வேரின் அடியாக பிறந்தது என்று கொண்டால், கஷ்டங்கள் 'நீடும்' என்றும் பொருள் கொள்ளலாம்.

19. su.du> சூது; sa-ba> சபா, சபை> அவை. இங்கு ஊர் சபை , அவை எனத் தெரிகின்றது. ஊர் மன்றங்கள் அன்றும் இருந்ததைக் காட்டும்.

dab-be> தப்பே: தப்பு அடித்து பறைசாற்றுதல்

20. mu-un-ak > முன்ஆக்கு: ஊக்குவித்தல் ? முன்னேறு - முன்னேற்று , முன்நட - முன்நடத்து போன்ற சொற்களைக் காண்க.

sal-la> சல்லை (< சில்லை) : வறிதாகுதல் ?பயனற்ற ஒன்றாய் விழுதல்

(தொடரும்)4

5.

ஆய்ந்துள்ள வரிகளில், பண்டே தமிழர்கள் உழவுத் தொழிலில் மேம்பட்டிருந்ததைக் காட்டுவதொடு ,வேளாண் மாந்தர்களே ஆழச் சிந்தித்து வாழ்க்கைக்குத் தேவையான அறநெறிக் கருத்துக்களை கூறிசென்றுள்ளனர் என்றும் காட்டுகின்றது. இவர்கள் பார்ப்பனர்கள் அல்ல, பண்டாரங்கள் அல்ல, புரோகிதர்கள் அல்ல, பிற்காலத்தில் கிழார்கள் என்று அழைக்கப்பட்ட வேளாண் மாந்தர்கள், வாழ்க்கைக்கு தேவையான உணவுகளை உழவுத் தொழில் வழி மக்களுக்கு வழங்கியவர்கள், உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்பதற்கேற்பத் திகழ்ந்தவர்கள். உழவுத் தொழிலோடு வந்ததே இவர்களது மிக நுட்பமான வானசாத்திர அறிவும் என்று தெரிகின்றது. பருவகாலங்களை முற்கூட்டியே அறிந்து உழவினை திறன்பட செய்வதற்கு வானசாத்திர அறிவு தேவையாகின்றது.

இவ்வகையில் நிலத்தினை இவர்கள் ஆசெய் (a-se) என்றும் , வன்செய் (an-se) என்றும் இன்றும் வழங்கும் 'நஞ்சை' 'புஞ்சை' நிலப்பாகுபாட்டை அன்றே கொண்டிருந்தனர் என்பது வியப்பிற்குரிய ஒன்றுதான். அத்தோடு காண், காணி (gan) என்று வயலைக் குறிக்கும் இன்றும் பயிலும் ஓர் சொல் அன்றும் இருந்ததைக் காண்கின்றோம். உறுதல் ( ur-ru) என்னும் சொல்தான் 'உழு' என்றாகிவிட்டது என்றும் நினைக்கத் தோன்றுகிறது. சீ அல்லது சே (se) என்னும் பயிர்களுக்குப் புறம்பாக நீண்டு வளர்ந்துள்ள களைப்புற்களையும் ( u.bur> ஊ புல்) கண்டுள்ளனர். அரிக்கப்பட்ட சீ, அரி.சி ஆகிவிட்டது போலும். ஆக அன்றே நெல் விவசாயம் செய்தார்கள் என்றும் தெரிகின்றது.

வயலை உழுதற்கு துரகங்களாகிய குதிரைகளையே (dur gu-di) பயன்படுத்தியும் இருக்கின்றனர். இந்தத் துரகங்களை காளைமாடுகள் என்றோ எருமைகள் என்றோ கொள்வதற்கும் இடமில்லை - துரிசு, துரிதம் என்பன வேகமாக ஓடுதலையேக் காட்டும். ஆக அத்தைய குதிரைகளையேக் காட்டும்

உழவுத் தொழிலில் ஈடுபட்டோர் சூதாடுதலையும் பொழுதுபோக்காக கொண்டிருக்க, அது கண்டிக்கபட வேண்டிய ஒன்றாக கருதப்படுகின்றது. அடுத்து நாகரீக வாழ்கையின் சின்னமாக அகன்ற நெடுஞ்சாலைகள் ( si.la.dagal-la) இருந்தமையையும் அறிய வருகின்றோம். பல நெடுஞ்சாலைகள் இருந்த ஊர்கள், நகர்கள் (uru) இருந்தன என்றும் அங்கு இல்லங்கள முறையாக எழுப்பப்பட்டன என்றும் அறியவருகின்றோம். ஆக நகர் என்னும் அமைப்பை ஆக நாகரீகம் என்பதை தோற்றியவர்கள் வேளாண் மாந்தர்களே என்றும் அறிய வருகின்றோம்.

மேலும் இங்கு 'ஏது நுதலிய முதுமொழி' எnpaதின் தோற்றத்தையும் காண்கிறோம். சூதாடுதலை ஊக்குவிக்கக் கூடாது என்னும் போது அதற்கு ஒர் காரணமும் தரப்படுகின்றது -- ஊர் சபையில் அது தப்படிக்கப்படும் (dab-be) ஆகவே ஊர் மக்களால் தூற்றpபடும் என்பதே அது. மேலும் இது ஊர் சபை (sa-ba) என்று ஓர் அமைப்பு இருந்தது என்பதையும் அவர்களே ஊர் மkகளை நல்வழியில் நடாத்திச் சென்Raனர் என்பதையும் காட்டுகின்றது. இது இன்றளவு தமிழக கிராமப் புறங்களில் பயிலும் ஓர் முறைதான்

இனி தொடர்ந்து அடுத்த சில வரிகளுக்குச் செல்வோம்.

சூருப்பாக்கின் நெறி

21. lu-ra igi-du na-an-ak uru-bi sa-[....]-x-dug ( Do not give evidence against (?) a man, that city will speak [in his favour]

உளுன்ற இமையிடு நாஅன் ஆக்.உ ஊருபி சா-[......]-x-தூக்.உ

22. ki du-da-ka nam-bi-du-du.....? ( Do not roam about where people quarrel, (.....)

கீழ் தூதிடகம் நாஅம்பீ.இடு.இடு

23. du-de lu ki.inim-ma-bi [...............]-ku ( [you will be] made awitness in the quarrel ! ( Or; [do not] enter as a witness in a quarrel))

தூத்தே உளு கீழ்.எனம்ம.பி [...........]-கோ

24. du-de ni-ba [te-bi-ib] ( [Let[ the quareel [be extinguished ] by itslef.

தூத்தே நீப தேய்.பீ.இப்.உ

25. du nam-aka-de-en [.........]

தூ(த்தே) நாஅம் ஆக்கிடுயென் [.......]

26-29 : missing

சில சொல்லாய்வுகள்

21. lu-ra igi.du> உளுன்ற இமையிடு? தவறு செய்யும் போது ஒருவனை காண்பதாகலாம். igi =ingi > ibi, இமை. 'கண்டிடு' (< கண்.இடு) என்ற சொல்லைக் காண்க. 'இடு' இங்கு துணைவினை.

ak> ஆக்.உ : செய்தல். இன்றும் பயிலும் ஓர் சொல். ".உ" இங்கு குற்றியலுகரம்.

22. du-de-ka> தூத்தகம். தூத்து< தூற்று : பழிபேசுதல், வீணாக குறை கூறுதல், அவமதித்தல்

23. du-de> தூத்தே

24. ni-ba> நீப: தானேயாய்; te> தேய், தொய்: கரைதல், குறைதல் , மெதுவாக இல்லாது போதல்

25. du = dud>தூத்.உ = தூற்.உ ? காண்க மேலே du-de = dud.e?

(தொடரும்) 5

6.

ஆய்வுக்குரிய வரிகளில், நீதி நெறிகள் வழங்கப்படுவதைக் காண்கின்றோம். சூதாடுதல் தவிர்க்கப்படவேண்டும் என்னும் மூதுமொழியோடு அடுத்தபடியாக 'தூற்றுதல்' வேண்டப்படா ஒன்று என்றும் அறிவுரை பகரப்படுகின்றது. dud.u என்பதை நாம் 'தூத்.உ" என்றே வாசிக்கவேண்டும் என்று தெரிகின்றது. சொல்லின் ஈற்றில் வல்லினம் வந்தால், அதனை அடுத்துவரும் உயிர்ப்பாக குற்றியலுகரம் , குற்றியலிகரம் போன்றவை பயின்றிருக்க வேண்டும். ஆனால் இவற்றிக்கென தனி எழுத்துக்கள் இல்லைபோலும். இங்கு புள்ளியை அடுத்துவரும் உகரமாக இகரமாக அது காட்டபடுகின்றது ( தூத்.உ). இதேப்போன்று ஆக்.உ ( ak) என்றும் இன்னும் பலவும்.

மேலும் தூத்.உ என்பது தூற்.உ என்று பயில்வதை நோக்க றகாரம் சுமேருத் தமிழில் வழங்கியதெனினும் அதன் எழுத்துப்பெயர்ப்பில் ரகரமாகவே ஆக பிழையாகவே காட்டபடுகின்றது என்பதையும் காண்க. இவ்வாறு எழுத்துச் சீர்மைகளை சுமேருமொழியும் அவாவி நிற்கின்றது என்பதை இங்கு சுட்ட விரும்புகின்றேன். இவற்றில் 'வாசித்தல்' எனும் கருத்தின் 'துப்.உசாற்.உ' (dub-sar) என்பது மிக முக்கியமானவோர் சொல். 'சாற்.உ' எனும் இதிலிருந்தே , சாத்திரம், சாத்தன், சாத்திரி சாதனம் என்று எத்தனையோ சொற்கள் பிறந்துள்ளன என்ரும் அவை ஒபிழையாக வடமொழிக்கே உரியவை என்ரும் கருதப்படுகின்றது. ' துப்.உ' என்னும் இதுவே எழுத்துப் பிறழ்ச்சி கண்டு 'புத்.உ' என்றாகி புத்தி போதகம் புத்தகம் என்றெல்லாம் வளர்ந்திருக்கவேண்டும் . போது.இல்> பொதியில் ; போதகம் நடக்குமிடம், பாடசாலை

சூருபாக்கின் நெறி

இனி அடுத்த சில வரிகளுக்குச் செல்வோம்.

30. [...............] [x]-ka e [x] [du izi]-am ba-ra-si-ga ( [.... the quareel is like fire] -- it cannot be silenced.

...............அக ஏ [x] எடு இஜி ஆம் பிற சீங்க

31. du-de bar-bar-ta gub-gub-ba in-nu.us sila.kur dab-ma-ni-ib ( Stay far-away from quareel, go the other way from taunt)

தூத்தே பார்பார்த்தா(ல்) குப்குப்ப இன்னு ஓச்.உ சாலைகுற்.உ தப்.இ இப்.உமினே

32. nig nam-mu-zuh-zuh ni.zu nam-mu-us-e ( Do not steal anything, do not kill yourself)

நிகழ் நாஅம் ஜூஹ்ஜூஹ்.உ நீஜு நாஅம் மோ ஓச்.உ

33. e na-an-ni-bur-e-en mi.si.sahara al nam-me ( Do not break into a house, do not demand the sieve)

இல் நாஅன் நீ பூருயியென் மசி சகற அழ்.இ நம்மே ( Do not enter the house without cleaning your feet with dark soil)

34. ni.zu pirig na-nam ul.KU sag na-nam ( The thief is indeed a lion, the receiver(?) is indeed a slave)

நீசு பிலி நனம் ஒள்.KU சான் நனம்

சில சொல்லாய்வுகள்

30. izi, ezi > எழில் : ஒளிப்பிரகாசம். பல இடங்களில் 'ஜ்' எனும் எழுத்து 'ழ்'ஆக மாறியுள்ளது. gaz> கழி, zi.zi> விழிவிழி etc.

31.bar-bar-ta> பார்பார்த்தால். இங்கு bar > பார் ஆகும். 'பார்பார்' என்னும் இரட்டு, தொடர்ந்து பார்த்தலைச் சுட்டு. '-ta; > த்-ஆல் : இங்கு 'ஆல்' எனபது வினையொடு வரும் இடைச்சொல்.

gub-gub-ba> குப்குப்பல் :நிலைத்து நிற்றல். குப்.உ> குவி, கும்பு . இதனின்ரே 'கும்பல், குப்பம், குந்து' என்பனபோன்ர சொற்கள் வந்திருக்க வேண்டும்

in-nu> இன்னு, இன்னே : தாமதியாது உடனடியாக

us> ஓச்.உ : ஒசி , ஓடு . இங்கு தன்னையே ஓச்சுதல்

sila.kur> சாலைகுற்.உ ; குறுக்குச் சாலை?

dab> தப்.உ > தப்பு : தப்பிச் செல்லல்

32. nig> நிக்.உ > பொருள், அழியாது வெளிப்படு நிற்பது. காண்க ; நிகமம் : கடை தெரு, பண்டங்களை குவித்திருக்கும் கடைகள்.

zuh-zuh> சோஹுசோஹு ? சொக்.உ சொக்.உ ?

33. bur-e-en> பூர்.ஏ.என் : பூரீஇயென் : bur> பூர்: புகுதல்

mi.si. sahar> மசி சகற்.உ ; மிசி> மசி : மை. sahar> சகறு, சேறு > சகதி

al> அழி, அலு? இல்லாதாக்குதல்?

34. ni.zu> நீசு: நீசன் : கீழானவன்.

pirig> பிரி, வரி> பிலி> புலி : உடலெங்கும் வரிகளைக் கொண்டிருக்கும் மிருகம்

na-nam > நனம் : மிக நன்றாக, தெளிவாக

(தொடரும்) 6


7

அன்பர்களே,

ஆய்ந்த வரிகளில் பல இரட்டைக் கிளவிகள் இருப்பதைக் காண்கிறோம். சுமேருத் தமிழில் இத்தகைய இரட்டைக் கிளவிகள் பெயர்ச்சொல்லிலும் வினைச்சொல்லிலும் வரும். kur-kur என்றவாறு "குன்றுகள்" என்ற பன்மைக் கருத்தினை இப்படித்தான் குறித்தனர். பலவாக இருப்பதை 'அது! அது! ' என்று சுட்டுவதுபோல மானிட அறிவு பெரிதும் வளராதிருந்த ஞான்று பொருட்பன்மைக் குறிக்க இவ்வாறு மொழியப்பட்டது என்று நன்றாகத் தெரிகின்றது. இவ்வழக்க மலாய் இனமொழியில் இன்றும் தொடர்கின்றது.

இதன் பிறகே 'இனம் ' (< e-ne) என்ற சொல்லும் பிறகு பெருமை¨ உயர்வினை பெருங்கூட்டத்தை குறிக்கும் 'கள்' (கண், கணம்) என்ற சொல்லும் வழக்கத்திற்கு வந்திருக்கின்றது.

வேறு காரணங்களுக்காகவும் வினைச்சொற்கள் இரட்டிக்கும் . இங்கு 'பார்-பார்' 'குப்.உ-குப்.உ' மேலும் 'எடு-எடு' ;தூக்.உ-தூக்.உ' என்றெல்லாம் பல வினைச் சொற்கள் பயில்வதைக் காண்கின்றோம். இங்கு சில இடங்களில் விரைவினைக் கருதியும் ஆனல் பெரும்பாலும் ஒடிவின்றி தொடர்தலையுமே காட்டும் (continuous present tense). இந்த நிகழ்கால தொடர்ச்சியினைத் தான் இப்பொழுது 'கொண்டிருத்தல்" என்கின்றோம். இப்படிப்பட்ட காலக் குறிப்பின் இரட்டை வினைச் சொற்கள், காலவுணர்வு செவ்வே தோன்றாத போது எழுந்த மொழியாக்கங்கள் என்றே கொள்ளவேண்டும்.

மேலும் மேலே உள்ளவரிகளில் சில அழகிய , இன்றும் பயில்கின்ற தமிழ் சொற்களையும் காண்கின்றோம்: நீசு, பிரி, பூர், ஓச்சு , இன்னே, நனம், தப்பு. மசி, சகறு(சேறு) என்றவாறு இவைத் திகழ்வதைக் காண்க.

சூருப்பாக்கின் நெறி

35. dumu-mu sa.gaz nam-mu-u-ak-e ( My son, do not commit murder, do not cut yourself with an axe)
&
36 ni-zu TUN-am nam-bi-ib-bar-re

தமு மோ சா(ன்)கழி நாஅம் மோ உள் ஆக்கே, நீசு துன்?- ஆம் நாஅம் பீயிப்.உபறி (பறை?) ( Do not do the cutting the head off someone; your life may be finished with an axe)

37. nitah nim.gir.si na-an-ak ni.zu na-an-[x]-[x] ( Do not let a male serve as a paranymph, do not [deceive] yourself

நாத நிம்கிரிசி நாஅன்.ஆகு நீசு நாஅன்[x]-[x] ( Do not become the man of a hill woman , your reputation will suffer?)

38. ki-sikil dam tuku-e-da nam-mu-un-ne-e inim.sig.ga mah-am ( Do not speak(?) with a girl if you are married (?), the slander is strong)

கைசுக்கில் தம் தொகுயிட நாஅம் முன்னி ஏய், எனம் (அ)சிங்க மாஆம்

39. dumu-mu daggan-na lu dam.tuku-da tus nam-bi-ga-ga ( [My] son, do not sit (alone) in a [chamber] with someone's wife)

தமுமோ தங்ஙன்ன உளு தம்தொகுவுட துஞ்சு நாஅம் பிகால்.கால்

40. du na-mu-mu-de ni-zu na-an-si-ib-la ( Do not pick a quarrel, do not humiliate yourself)

உடை நா மூள்மூளிடே நீசு நாஅன் சீயிப்.உ அலை ( Do not cause quarrels, then you have to move around as a lowly person)

சில சொல்லாய்வுகள்

35&36

sa.gaz > சான்கழி : சென்னி கழித்தல் , தலைஅயை அரித்தல் ஜகரம் கெட்டு பல இடங்களில் ழகரமாகியுள்ளது.

u-ak-e> உள் ஆக்கே: உள்ளதாக்குதல், மெய்ப்பட நிறுத்தல், மெய்யாக்குதல்

ni.zu> நிசு> நீசம்?

bar-re> பறை?

37. nitah> நாத(ன்); இங்கு ஆண்மகன், nitah-dumu என்றால் புதல்வன் என்று பொருள் படும். அனேகமாக நீத(ன்)> நாத(ன்) என்று வந்திருக்கலாம். நீ என்பது இங்கு உயர்ந்து நிற்பதைக் குறிக்கும்.

nimgir> நிம்கிரி : உயர்ந்து நிற்கின்ற மலை. nim.gir.si> நிம்கிரிசி : குன்றக் குறத்தி; மலைசாதிப் பெண்?

38. ki.sikil> கைசுக்கில்: தூய்மையான(சுக்கில்) இளம்பெண்(கை)

dam tuku-e-de > தம் தொகுயிடே: தாரமாக வரிக்கப்பட்டப் பெண் , ஒருவனின் மனைவி

mu-un-ne-e> முன்னே ஏ : முன்னி ஏகுதல் : விரும்பிச் செல்லல்

inim.sig.ga> எனம் சிக்க(ல்)? அவதூறு, அலர்?

mah-am> மா ஆம்: மா மஹா என்பன தூயத் தமிழே, வடமொழியிருந்து கடன்வாங்கப்பட்டது அல்ல.

39. daggan-na > தங்ஙன்ன> தன்னன> தன்னின> தனி, தமி: தனித்து, தனியாக

tus> துச்சு> துஞ்சு: படுத்தல், உறங்குதல்

40 du mu-mu-de> உடை (?) மூள் மூளிடே: சண்டை மூட்டல்

si-ib-la> சீஇப்.உ அலை: அலைதரல், திரிதல்

(தொடரும்) 7

8

ஆயப்பட்ட வரிகளில் இன்றும் என்றும் எழக்கூடிய காமத்தைப் பற்றி அது தொடர்பான திருமணத்தைப் பற்றி பல அறவுரைகள் நவிலப்படுகின்றன என்பதொடு இல்லத்தை எப்படி நடத்தவேண்டும் என்றும் சில விசயங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன.

சாதிக் கட்டுபாடு போன்று ஓர் கட்டுப்பட்டு இருந்ததையும் நம்மால் காணமுடிகின்றது. மலைசாதிப் பெண்னை அல்லது ஆடவனை மணந்தால் ஊர் பழிதூற்றும் என்பதைக் கொண்டு, அத்தகைய திருமணங்கள் அங்கீகரிக்கப்படாதிருந்தைக் காணமுடிகின்றது. இப்படிப்பட்ட கட்டுப்பாடுகள் தாம் பிற்காலத்தில் சாதி கட்டுப்பாடுகள் ஆகிற்றோ என்று நினைக்கவும் தோன்றுகின்றது.

அத்தோடு திருமணம் என்பது கற்பு நெறியோடு தொடர்பு படுத்தப்பட்டுள்ளதையும் காண்கின்றோம். ஓர் திருமணமாகா இளைஞன் ஓர் திருமணமான பெண்ணோடு தனித்து இருப்பதும் பழகுவதும் சரியில்லை, ஊர் மக்களால் அலர் தூற்றப்படும் என்றும் கூறப்படுவதைக் காண, திருமணங்கள் பழகுவதற்கும் பேசுதற்கும் சில வரன்முறைகளை உண்டாக்குகின்றன, அவைக்கு உட்பட்டே ஆணும் பெண்ணும் பழக வேண்டும் என்று அக்காலத்திலே§ அறம் கூறப்படுவதைக் காண்கின்றோம்.

அடுத்து வீணாக சண்டை இடுதல் அல்லது சண்டை மூட்டுதல் போன்றவை தவிர்க்கப்படவேண்டியவை, பொல்லாதவை என்றும் கூறப்படுகின்றது.

இதில் வியப்பு என்னவென்றால், இவை இன்றும் பகரப்படுபவைதாம்! மக்கள் உள்ளம் பெரிதும் மாறவில்லை போலும். வாழ்க்கையில் எழும் பிரச்சினைகள் இன்றிருப்பது போலத்தான் அன்றும் இருந்திருக்கின்றன.

இனி அடுத்த சில வரிகளுக்குத் தொடர்வோம்.

சூருபாக்கின் நெறி:

41. LUL nam-gur-gur sag gu SAL-SAL-am ( Do not belch forth lies, it is silly (?)

ஊழல் நாஅம் கூற்.உ கூற்.உ சான் கூவ் சல்சல்.ஆம் ( ?)

42. inim nam-ku-ku-re-e-en inim-zu gar-ra-am ( Do not swear, your word is fixed)

எனம் நாஅம் குர்குரையீயென் எனம்ஜூவ் காராம் ( Do not speak loudly, your word becomes fixed)

43. inim nam-gi-gi igi.dugud nu-mu-e-da-il ( Do not answer back, a 'heavey eye' you cannot bear)

எனம் நாஅம் மீமீ இமைதொங்கு நா மோஎடு இயல் ( Do answer back, (you may) have droop your eyes without being able to lift it up)

44. lu-da nig.ku zuh-a nam-mu-da-ku-e ( Do not eat food which is stolen from a man)

ஊளுயிட நிக்.அகூழ் சூத்.அ நாஅம் மோ இடுகூய்யே

45. su-zu us-am na-di-ni-ib-su-su ( Do not sprinkle (?) your hands with blood)

சூர்ஜுவ் எச்.இஆம் நாஇடுனிஇவ் சூழ் சூழ் ( (When eating) do not cover your hands with spittle)

சில சொல்லாய்வுகள்

41.

gur-gur> கூற்.உ கூற்.உ: கூறுதல், செப்பல், இங்கு இரட்டைக்கிளவி விடாது கூறிக்கொண்டிருப்பதைக் காட்டும்.

42.

ku-ku-re-e-en> குரைகுரையீயன் ; குரைத்தல்: உரக்க எடுத்துரைத்தல், பேசுதல், சினத்தோடு அறைதல்

gar-ra-am> காராம், காலாம்: கார் ,கால்: திடமாக நிற்றல்; 'காரம் சாரம்' என்பதில் 'காரம்' உறைத்து கல்லென நிற்பதைக் காட்ட 'சாரம்' நெகிழ்ந்து நீரென ஓடுவதைக் காட்டும்.

43.

gi-gi> மீ மீ: மீண்டும் மீண்டும் சலிப்பின்றி

igi.dugud> இமை தொங்கு ; இங்கு தலை தாழ்தல் என்பதாகலாம், அதாவது அவமானப்படுதல்.

e-da-il> எடு இயல், எடு எழு ? எடுப்பித்தல், நிமிர்தல்

44.

ku> கூழ்; nig.ku> நிககூழ்: உயர்ந்த வகை உணவு ?; கூழ்> கூய் : காண்க Malay: kueh: பலகாரம்.

45.

us-am> எச்.இ ஆம் ; us> உதிரம் என்றும் விஷம் என்றும் ஆகியிருப்பதொடு 'எச்சில்" என்றும் திரிபுற்றிருக்கின்றது.

di-ni> தினி ?

(தொடரும்) 8

9.

அன்பர்களே

மேலே காட்டிய வரிகளில் சொல்லாடலைப் பற்றிய அறநெறிகள் பல பகரப்படுகின்றன. எப்படி சொல்லாடல் வேண்டும் என்பதை பற்றி தமிழர் தம் வரலாற்றில் இடையறாது கூறப்பட்டு வந்துள்ளதை நோக்க இது எவ்வளவு பழைமையான ஓர் ஆய்வு என்பதும் புலப்படும். திருவள்ளுவர் " கல்லாதவரும் நனிநல்லர் கற்றார் முன், சொல்லாது இருக்கப் பெறின்", "கற்றிலன் ஆயினும் கேட்க அஃது ஒருவற்கு; ஒற்கத்தின் ஊற்று ஆம் துணை" என்றெல்லாம் கூறிச் செல்லவில்லையா? சொல்லாடலை யார் நிகழ்த்த வேண்டும், எப்படி நிகழ்த்த வேண்டும் , எவ்வகையான மொழியை பயன்படுத்த வேண்டும் என்றெல்லாம் தமிழ் இலக்கியத்தில் நிறைய உண்டு என்பதொடு 'தர்க்க சாத்திரம்' என்ற ஓர் கலையும் உண்டு.

இவ்வகையில் வரிகள் 42& 43 மிகச் சிறப்புடையன.

42. inim nam-ku-ku-re-e-en inim-zu gar-ra-am ( Do not swear, your word is fixed)

எனம் நாஅம் குர்குரையீயென் எனம்ஜூவ் காராம் ( Do not speak loudly, your word becomes fixed)

43. inim nam-gi-gi igi.dugud nu-mu-e-da-il ( Do not answer back, a 'heavey eye' you cannot bear)

எனம் நாஅம் மீமீ இமைதொங்கு நா மோஎடு இயல் ( Do answer back, (you may) have droop your eyes without being able to lift it up)

இங்கு ku(r)-kur என்பதை 'குரைத்தல்' என்பதாகக் கொண்டு , சினத்தோடு எரிந்து விழுவதுபோன்று உரக்கச் சொல்லாடல் சரியில்லா ஒன்று என்பதொடு ஏன் அவ்வாறு என்று விளக்கவும் படுகின்றது. அதாவது ஏது ஒன்று தரப்படுகின்றது: இவ்வாறு பலரும் கேட்கவும் மறவாது மனதில் இருத்தவும் காரணமாகி விடுவதின் அதாவது 'கார்/கால் ஆம்' என்பதின் அது முறையன்று என்று அறம் பகரப்படுகின்றது. ஆகவே இது தொல்காப்பியர் கூறும் 'ஏது நுதலிய முதுமொழி' ஆகின்றது என்பதொடு எரணச் சிந்தையின் (logical thinking) தோற்றுவாயினையும் நாம் உளங்கொள்ளுமாறு காட்டிவிடுகின்றது.

இதுபோன்றுதான் காரணமின்று எதிர்த்துப் பேசுதலும். அமைதியாக இருக்க வேண்டிய இடத்தில் அவ்வாறு இராது வீணே மறுமொழி பகர்ந்தால் அவமானப்பட நேரிடும் என்று ஏதுவொன்று தரப்படுகின்றது. இங்கு "இமை. தொங்கு" (igi.dugud), பிறகு கம்பீரமாக நிமிர்ந்து நிற்றல் முடியாது போம் ( நா மோ எடு இயல்) என்பதெல்லாம் இபோழுது கண்ணிலிருந்து பெயர்ந்து தலைக்கு ஆய்விட்டது: தலை கவிழ்தல், தலை நிமிர்தல் என்றவாறு.

இங்கு நாம் நலமே கவனிக்க வேண்டியது தொல்காப்பியர் கூறிய 'கண்ணினும் செவியினும் நுண்ணிதின் " உணர்தலாகும். சுமேருத் தமிழர்கள் உலக நடத்தையை மிக உன்னிப்பாக நுட்பமாக கவனித்தினர் என்பதற்கு இப்படிப்பட்ட முதுமொழிகளே சான்று பகர்கின்றன. உலகியல் அறிவினை ஒட்டிதான் தமிழ தத்துவ சிந்தனையே வளர்ந்துள்ளது -- அதனை மறுத்து பொயயாக்கி அல்ல. அது புத்தர்கள் ஓர் சாராரின் அவர்கள் வழி சென்ற ஆதிசங்கரர் போன்ற அத்வைத வேதாந்திகளின் போக்காகும்.

இனி தொடர்வோம்.

சூப்பாக்கின் நெறி

46. pirig ur-re gud sa-ba-re-eb-su--su udu sa-ba-re-eb-su-su ( This is a lion restores an ox to you, restores a sheep to you)

பிரி ஊர்.ரே கோடு சாபரி யிப்பிசுசு உடு சா பரியிப்சுசு ( This is how a fast moving lion grabs a cow and a goat)

47. u`.nu.gar.ra na-ab-be-e ( Do not cheat?)

உள் நா. கார்.ர நா அபையே ( Do not speak what is not a truth)

48. egir-bi-se gis.par-gim si-me-si-ib-la-e ( At the end it will bind like a trap for you)

எதிர்பிசே கீபுரஙிம் சீமே செய்யிப்.உஇழை§ ( In the future they will imrison you in a castle)

49. u`.nu.kin.ga-se udu-zu sag nam-me ( Do not scatter your sheep into untested grazing grounds)

ஊண் நா. காண்க சேய் உடுஜு செல் நாஅம்மே (Do nlt let go your goats into unseen grounds)

50. us nu-si-ga-se gud lu na-[x]-e ( At an unsafe foundation a man... )

உச்.இ நா சிங்கசே கோடு உளு நா-[x].யே (?)

சொல்லாய்வுகள்

46. pirig= piri> பிரி> பிலி> புலி : ur-ra> ஊர்.ர" ஊருவது, அசைவது. இங்கு மிக வேகமாக ஓடுவது. gud> கோ. கோடு : மாடு ; ba-re> பரி: பரித்தல், வன்முறையிற் கொள்ளல். udu> உடு> ஆடு

47. u.nu.gar-ra> உள் நா கார்.ர> உள் நா கால்ல: உறுதியாய் நிற்காதவை, ஆகவே பொய்; abbe> அவை: சொல்லல் ( sa-ba> ab-ba : அவை)

48 egir> எதிர்; மேலும் egir> ஈறு: முடிவு, கடைசி

49. u`> உண் : உணவாகும் புற்கள் போன்றவை; உணா. kin> காண்

50. us> உச்சி? si-ga> சிங்க?: அழகான. சிங்க> சிம்ம> சேம?

(தொடரும்) 9

10

சூருபாக்கின் நெறி

அறநெறிச் சான்ற விடயங்களாக , தமிழச் சிந்தையில் வேரூன்றி நிற்கின்ற ஓர் கருத்து இங்கே முதன் முதலில் மிகத் தெளிவாக வெளிப்படுவதை காண்கின்றோம் என்பதொடு ஊர் மன்றம் வைத்து மக்களே ஆட்சி செய்தனர் , எனவே democracy , என்பது தமிழர்களோடு இருந்து வந்த ஓர் ஆட்சி முறை என்பதையும் காண்கின்றோம். இவை பிறகு இன்னும் மிக விரிவாக ஆராயப்படும். இங்கே ஒர் சிறிது:

47. u`.nu.gar.ra na-ab-be-e ( Do not cheat?)

உள் நா. கார்.ர நா அபையே ( Do not speak what is not a truth)

48. egir-bi-se gis.par-gim si-me-si-ib-la-e ( At the end it will bind like a trap for you)

எதிர்பிசே கீபுரஙிம் சீமே செய்யிப்.உஇழை§ ( In the future they will imrison you in a castle)

இங்கு "அவை' என்பது 'சபை' என்பதின் திரிபு. 'சபை' வரி 19-லும் இன்னும் பல இடங்களிலும் செவ்வே வருகின்றது

19. su.du.a nam-mu-un-tum lu-bi sa-ba-e-dab-be ( Do not gurantee (for someone), that man will have a hold on you)

சூதுவ நாஅம் முந்தூவும் ஆளுபி சபையே தப்பு ( Do not gamble people will complaint in the assembly)

இது தொடர்பாக பிற இடங்களில் galga ( < Ta. கழகம்) என்ற சொல்லும் பயில்கின்றதையும் காணவேண்டும். ஊர் மன்றம் எடுத்து அங்கு முறையிட்டு நியாயம் கேட்டல் பண்டே தமிழச் சமுதாயத்தில் நடந்துள்ளது. பிறகு நாகரீகம் வளர்ந்து அரசாட்சிகள் தோன்றிய போதிலும் ஊர் மன்றங்கள் அடிப்படையில் அரசவைகள் தோன்றியுள்ளன என்பதையும் அங்கு பேச்சுச் சுதந்திரம் இருந்தது என்பதையும் சூல்கியின் முதரீபியத்தில் நலமே காண்கிறோம்.

இங்கு u`.nu.gar.ra எனும் அழகிய கிளவியாக்கத்தை நாம் சிறிது ஆராயவேண்டும். இதன் முழு வடிவம் உள்.நு.கார்.ர என்பதாகும். இதுவே உள். நா. கால்ல என்றும் வளர்ந்திருக்கவேண்டும். இதன் பொருள் : 'உள்ளதாக யாது காலிடாது போகின்றதோ அது" என்பதாகும். ஆக அழியாது நிலைத்து நிற்பவை உண்மை யாகும் அதற்கு புறம்பாக நிலைத்து நிற்காது போகின்றவை பொய் என்றும் ஆகும் என்றும் கொளப்பட்டிருப்பதைக் காண்க. பொய்-மெய் என்ற பாகுபாடு , நிலைப்பது - நில்லாதுபோவது என்ற வகையில் காணப்பட்டுள்ளதை நாம் கவனிக்க வேண்டும். மெய்யில் நிற்க வேண்டும், மெய்யினையேக் காணவேண்டும் , மெய்யினையே யாண்டும் பகரவேண்டும் என்பன போன்ற தமிழச் சமுதாயத்தின் அறநெறிகள் அன்றே நின்று நிலவியதை இவ்வரிகள் காட்டுகின்றன.

இன்னும் பழமொழி போன்றவோர் ஒர் வரியும் இங்கே பயில்கின்றது.

46. pirig ur-re gud sa-ba-re-eb-su--su udu sa-ba-re-eb-su-su ( This is a lion restores an ox to you, restores a sheep to you)

பிரி ஊர்.ரே கோடு சாபரி யிப்பிசுசு உடு சா பரியிப்சுசு ( This is how a fast moving lion grabs a cow and a goat)

இதன் கருத்து : பாயும் புலிதான் மாட்டைக் கொள்ளும், ஆட்டைக் கொள்ளும் அதாவது பரிக்கும் என்பது. இது முயற்சியுடையோர் இகழ்ச்சி அடையார், முயற்சி திருவினையாக்கும் என்பன போன்ற பழமொழிகளை நினவு கூர வைக்கின்றது.

இதேப் போன்றுதான் கீழ் வருவதும்:

49. u`.nu.kin.ga-se udu-zu sag nam-me ( Do not scatter your sheep into untested grazing grounds)

ஊண் நா. காண்க சேய் உடுஜு செல் நாஅம்மே (Do not let go your goats into unseen grounds).

இது 'ஆழந் தெரியாது காலை விடாதே'. 'அறியாத இடத்தில் நுழையாதே' என்பன போன்றதாகின்றது

இனி அடுத்த சில வரிகளுக்குச் செல்வோம்:

சூருபாக்கின் நெறி

51. us si-ga kaskal si-ga-am ( A safe foundation is a safe road)

  • Ta. உச்.இ சிங்க கசிகால் சிங்க ஆம் ( Having a good goal is moving in the good road)

52. kaskal gi na-du sa-bi sag hul-a ( Do not walk on the road at night, its interior is (both) good and bad)

  • Ta. கசிகால் மை நா உடு, சாய்பி சான் ஒல்ல ( Do not walk in dark streets, inside there may be evil people)

53. anse.edin-na na-ab-sam[....] ugula da-bi-es (....)-e-zal ( Do not buy a steppe-ass, constantly the foreman(?) must ... at its side.

  • Ta. அன்சே ஏதில்ல நா ஆப் சும்.உ [...] ஊக்குளு இடபியிசு ( ...) ஏ செல் ( Do not buy a wild horse, rider has to go to its side always?)

54. geme-zu-ur gis na-an-du zu-ur su-mu--ri-in-sa ( Do not have sexuakl intercourse with your slave girl, she will call you: Traitor ! (?)

  • Ta. கைம்மே சோர குச்.இ நாஅன் இடு, சோர் சூ முறையின் சொல் ( Do not have sexual intercourse with an immoral woman, she will announce it to the public)

55 .as a.zi na-ab-bal-e su-us im-si-nigin ( Do not curse with violanace, it will turn around your hands)

  • Ta. ஆசி அழி நா அவல்லே சூர்-உசு இம்சி நீங்கின் ( Do not curse for the destruction of others, it will torture you for a long time)

சொல்லாய்வுகள்.

51. us> Ta. உச்.இ : உச்சி: உயர்ந்த மேலான, உன்னதமான ; si-ga> சிங்க, சிக்க> சொக்க, சாங்க: அழகிய;
kaskal= kashikaal > Ta. கஷிகால்> கடிகால்: விரைந்து செல்லுதற்குரிய வழி, செப்பமிட்ட சாலை; கசி, கஷி> கழி, கடி : விரைதல்

52. gi = ngi> மி, மை : இருள்; du> உடு > விடு : செல்லல்; sa-bi> சாய்.பி> சாய்வு : பள்ளம், உட்பக்கம்; sag> சான்> தான் : ஒருவன்; hul-a> ஒல்ல : தீய

53. anse> அன்சே> அசுவம்: குதிரை; edin-na>ஏதில்ல : காட்டுப் பகுதி: காண்க - ஏதிலாளன்: அந்நியன், அயல் இடத்தன்; sam > சும்: சுமத்தல்; ugula> ஊக்குளு: உக்குவித்து ஓட்டுபவன்; zal> செல், சல் > சரி

54. geme> கைம்மை: இங்கு அடிமைப் பெண்; zu-ur> சோர்: சோரம் போகும் பெண்; கற்புறுதி இல்லாதவள். gis> குச்.இ : இங்கு ஆண்குறி; gis-du> குச்.இ இடு: புணர்தல்; mu-ri-in-sa> முறையின் சொல்?

55. as> ஆசி : வாழ்த்துதல்; a.zi> அழி ? ; ab-bal> அவல் ; உரக்கச் செப்பல்? காண்க: அவல்.அம்; im-si> இம்சி: துன்புறுத்தல்? nigin> நீங்கின்: நீண்ட காலமாக

(தொடரும்) 10







Contributors

Ulagankmy

This page was last modified on 2 April 2011, at 02:29. This page has been accessed 1,833 times.