மணிமேகலைக் காப்பியத்தில் காணும் கதைகள் - பெண்கள்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

from rajam rajam@earthlink.net
to மின்தமிழ் <mintamil@googlegroups.com>

date Mon, Sep 12, 2011 at 6:26 AM
subject மணிமேகலைக் காப்பியத்தில் காணும் கதைகள் - பெண்கள் - முன்னுரை


முன்னுரை

மணிமேகலை என் உயிரில் ஒரு பகுதி. அவள் கதையை எவ்வளவு விளக்கமாகச் சொல்ல முயன்றாலும் எனக்குத் தோல்வி.
விட்டு ... விட்டு ... இடையீடுகளின் இடுக்கில் ... ஏதோ சொல்லப் பார்க்கிறேன்.


மணிமேகலைக் காப்பியம் என்று சொன்னவுடன் ... மணிமேகலை என்ற ஒருத்தியைப் பற்றித்தான் சிலருக்கு நினைவு வரும்.

இந்தக் காப்பியக் கதையை நடத்திச் செல்ல வேறு பல பெண்களைப் பற்றிய செய்திகளும் தேவை என்று தெரிகிறது.


மணிமேகலைக் காப்பியத்திலிருந்து நமக்குத் தெரிய வரும் பெண்கள் பலர்:

1. சித்திராபதி
2. வயந்தமாலை
3. மாதவி ( < தாரை; முற்பிறப்பில்)
4. சுதமதி ( < வீரை; முற்பிறப்பில்)
5. மணிமேகலை ( < இலக்குமி; முற்பிறப்பில்)
6. கோதமை
7. அமுதபதி
8. நீலபதி
9. தீவதிலகை
10. சாலி
11. (திலோத்தமை; நேரடிக் குறிப்பில்லை)
12. ஆதிரை
13. காயசண்டிகை
14. சீர்த்தி (சோழ அரசி; இராசமாதேவி)
15. மருதி
16. விசாகை
17. வாசந்தவை
18. வாசமயிலை
19. பீலிவளை
20. கண்ணகி
21. நீலி



தெய்வங்கள் பலர்:

மணிமேகலா தெய்வம்
சம்பாபதி
தூணில் இருந்த பாவை / கந்திற்பாவை (?)
சிந்தாதேவி
துர்க்கை (?)
விந்தாகடிகை
ஒரு பெரும் தெய்வம் (?)



பொதுவாகக் குறிப்பிடப் பெற்ற பெண்கள்:

1. எட்டிகுமரனுடன் இருந்த காதற்பரத்தை
2. நாடகக் கணிகையர் / சித்திராபதி, மாதவி இவர்களின் ஆயத்தவர்
3. தூண்களில் ஒரு சித்திரம் (?)
4. புண்ணியராசனின் உரிமை மகளிர்



மணிமேகலைக் காப்பிய ஆசிரியர் சாத்தனார் ஏன் இத்தனைப் பெண்களின் இருப்பை / கதைகளை இந்தக் காப்பியத்தில் புகுத்தினார்? இந்தப் பெண்களைப் பற்றிய செய்திகள் எந்த அளவிற்கு அவர் படைத்த காப்பியப் போக்கிற்குத் தேவை; எந்த அளவிற்கு அக்காலச் சமூகம் பற்றித் தெரிந்துகொள்ளப் பிற்காலத்தவருக்கு உதவும்? இவை போலப் பல கேள்விகள் ஆழமான தேர்ந்த இலக்கிய ஆராய்ச்சிக்குத் தேவை.
இக்கால ஆய்வாளர்கள் இவற்றைப் புரிந்துவைத்திருப்பார்கள் என்ற நம்பிக்கை.


இந்த எல்லாரையும் பற்றி எழுத விருப்பம். இயலுகிறதா என்று பார்ப்போம்.
அன்புடன்,
ராஜம்

--Ksubashini 06:23, 29 அக்டோபர் 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Ksubashini

இப்பக்கம் கடைசியாக 29 அக்டோபர் 2011, 06:24 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,001 முறைகள் அணுகப்பட்டது.