வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

பொங்கல் வாழ்த்து - வரலாறு

From மரபு விக்கி

Jump to: navigation, search


பெ.தூரன், சி.சுப்பிரமணியம், ஓ.வி.அழகேசன் முதலானோர் மாநிலக் கல்லுாரியில் பயின்று வந்த காலம், இவர்கள் ஒன்று சேர்ந்து சங்கம் ஒன்றை
அமைத்திருந்தனர். ஒரு கூட்டத்தில் கிறிஸ்துமஸ் வாழ்த்து மடலை போல நாமும் வாழ்த்து மடல் அனுப்பும் பழக்கத்தைத் தோற்றுவித்தால் நலமாக இருக்குமே என்று பெரியசாமித் தூரன் கருத்துத் தெரிவித்தார்.


அவரே பனங்குருத்துக்களை நறுக்கி அவற்றில் வண்ண மைகளில் அழகு செய்து பொங்கல் வாழ்த்துக்களையும் எழுதினர். இந்தப் பொங்கல் வாழ்த்துக்களைத் தமிழ்ப் பெருமக்களாகிய திரு.வி.க., கல்கி கிருஷ்ணமூர்த்தி, கா.நமச்சிவாயர் ஆகியோருக்கு அனுப்பினார். இந்தப் பழக்கம்
வரவேற்கத்தக்கது என்று கருதிய திரு.வி.க, தமது நவசக்தி ஏட்டில் தமிழ்மக்கள் அனைவரும் இந்தப் பழக்கத்தைக் கைக்கொள்ள வேண்டுமென
வேண்டுகோளும் விடுத்தார். இதன் பின்னரே பொங்கல் வாழ்த்து அனுப்பும் பழக்கம் 1928ம் ஆண்டில் தமிழர்களிடையே பரவியது. மகாராஷ்டிரத்தில் இருவர்
ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது எள்ளும் வெல்லத்தையும் தந்து நல்ல வார்த்தைகளால் ஆசீர்வதியுங்கள் என்று கூறிக் கொள்வர்.
பொங்கல் சிறப்பு பொங்கல் வைக்க பயன்படும் அரிசியும் பாலும் வளமையை உணர்த்துவதற்காக கரும்பு வைப்பது மகிழ்ச்சியைக் குறிப்பதற்காக பொங்கல் பானையில் மஞ்சள் சுற்றுவது இனிவரும் காலம் காத்து வளமையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே.


ஆந்திர மாநிலத்தில் பொங்கலன்று பொம்மைகளை கொலுவில் வைத்து மகிழ்கிறார்கள். இந்த கொலுவில் உழவர், உழத்தி, ஏர் முதலிய பொம்மைகள்
பிரதான இடம் பெறும்.


உத்தரப்பிரதேசத்தில் பொங்கலன்று வீட்டுக்கு வருவோருக்கு கரும்புத்துண்டுகள் மற்றும் வெற்றிலை பாக்கை ஒரு தட்டில் வைத்துக்
கொடுத்து ஆசீர்வதிப்பர். கர்நாடகா ஆந்திர பகுதிகளில் பொங்கல் திருநாளன்று ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது வெல்லம் கலந்த பருப்பு
உருண்டைகளை பல வண்ணங்களில் செய்து ஒரு தட்டில் கரும்பு வெற்றிலையுடன் வைத்து தங்களுக்குள் பரிமாறிக்கொள்வர்.


இலங்கையில் பொங்கல்!
இலங்கையில் வாழ்பவர்கள் மார்கழி மாதம் வீட்டு வாசலில் கோலம் இடும்போது மாட்டு சாணத்தினால் ஆன சாணப் பிள்ளையார் பிடித்து வைக்கின்றனர். இந்த பிள்ளையாரை தினமும் சேர்த்து வைத்திருந்து தைப்பிறந்ததும் பொங்கலுக்கு மறுநாள் பிள்ளையார் பொங்கல் கொண்டாடுகின்றனர்.

ஆர்.மகாதேவன்.
நன்றி: தினமலர், 2008

--Ksubashini 18:30, 19 ஜனவரி 2012 (UTC)

Contributors

Ksubashini

This page was last modified on 19 January 2012, at 18:31. This page has been accessed 2,128 times.