வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

பிரட் அடை

From மரபு விக்கி

Jump to: navigation, search

 உமா சண்முகம்


தேவையான பொருட்கள்


பிரட் துண்டங்கள் -10

கார்ன் மாவு -2 டீஸ்பூன்

பெரிய வெங்காயம் -1

மிளகாய் தூள் -1 டீஸ்பூன்

மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்

கரம் மசாலா தூள் -1/4 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

(தேங்காய் துருவல் 2 டீஸ்பூன் தேவை என்றால் சேர்த்துக் கொள்ளலாம்)


செய்முறை


பிரட் துண்டங்களை நீரில் நனைத்து லேசாக அமுக்கி அதிகமான நீரை எடுத்து விடவும்.

இதனுடன் கார்ன் மாவைக் கலந்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும்.

ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு அதில் வெங்காயத்தை வணக்கவும். மிளகாய்தூள் மஞ்சள்தூள் உப்பு சேர்த்து வணக்கவும். கரம் மசாலாவைச் சிறிதளவு சேர்த்து வணக்கவும்.

நன்றாக ஆறிய பிறகு பிரட் மாவில் கொட்டிப் பிசையவும்.

ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் அடையாகத் தட்டித் தோசைக்கல்லில் வார்த்து எடுக்கவும்.

இதற்குச் சைடு டிஷ்சாக சாஸ் தொட்டுச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.












--பவள சங்கரி திருநாவுக்கரசு. 06:28, 24 நவம்பர் 2011 (UTC)

நன்றி - வல்லமை மின்னிதழ்

Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 24 November 2011, at 06:28. This page has been accessed 3,699 times.