பாரம்பரிய முறையில் காலிஃப்ளவர் மஞ்சூரியன்!From மரபு விக்கி காலிஃப்ளவர் மஞ்சூரியன்
இப்போது பாரம்பரிய முறையில் காலிஃப்ளவர் மஞ்சூரியனைப் பார்ப்போமா?
நல்ல காலிஃப்ளவராக ஒன்று. ஒரு கிண்ணம் மைதா மாவு, வெண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்,ஒரு சிட்டிகை உப்பு, சமையல் சோடா தேவை எனில் ஒரு சிட்டிகை. பால் 200 கிராம். நீர் தேவைப்பட்டால் . பொரிக்க சமையல் எண்ணெய்.
அடுத்து கிரேவிக்கு. அரைகிலோ தக்காளி. இது தனியாகக் குக்கரில் தக்காளியை வேக வைத்தோ அல்லது கொதிக்கும் வெந்நீரில் போட்டோ தோல் நீக்கி, விதை நீக்கித் தக்காளிச் சாறாக எடுத்துக்கொள்ளவும்.
மேற்சொன்ன அளவுக்கு 5 பச்சை மிளகாய், 4 பல் பூண்டு, ஒரு அங்குலம் இஞ்சி நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
வெங்காயம் இரண்டு எடுத்துப் பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கால் கிலோ தக்காளியுடன் வெங்காயத்தைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். முன்னால் சொன்னதுக்கும் இதுக்கும் தனித்தனி செய்முறை. ஆகையால் குழம்ப வேண்டாம். முதலில் சொன்னது தக்காளி ப்யூரி. இது அரைத்து வதக்குவதற்காக. ஆகவே அது தனியாக இருக்கட்டும். இது தனியாக அரைக்கவும்.
மிளகாய்த் தூள் ஒரு டேபிள் ஸ்பூன், தனியாத்தூள் ஒரு டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் ஒரு சின்ன ஸ்பூன், கரம் மசாலாத் தூள் ஒரு டீஸ்பூன், சர்க்கரை ஒரு டீஸ்பூன். உப்பு தேவையான அளவு. ஜீரகம் வறுத்துப் பொடி செய்த தூள் ஒரு டீஸ்பூன். சமையல் எண்ணெய் கிரேவி செய்யத் தேவையான அளவு.
இப்போது காலிஃப்ளவரை நன்கு ஆய்ந்து குளிர்ந்த நீரில் கழுவிக் கொண்டு, பூச்சி, புழு நீக்கிக் கொள்ளவும். பூவாக நீளமாக வரும்படி ஆய்ந்து எடுத்துக் கொள்ளவும். இதில் உப்பு,, மஞ்சள் தூள் சேர்த்துக் கொண்டு, கொதிக்கும் வெந்நீரில் சிறிது நேரம், சுமார் அரைமணி போட்டு வைக்கவும். பின்னர் நீரை வடிகட்டிப் பூக்களைத் தனியாக வைக்கவும்.
வெண்ணெய், உப்பு, சோடா உப்பு சேர்த்துக் குழைத்து, கொஞ்சம் கொஞ்சமாக மைதாமாவை அதில் சேர்க்கவும். மாவும், வெண்ணெய்க் கலவையும் நன்கு கலந்த பின்னர் பாலை மெதுவாக அதில் விட்டுக் கலக்கவும். மாவு தோசை மாவு பதத்துக்கு வர வேண்டும். ரொம்பக் கெட்டியாக இருந்தால் கொஞ்சம் நீர் சேர்க்கலாம். கடாயில் எண்ணெயைக் காய வைத்துக் கொள்ளவும். வடிகட்டி வைத்த பூக்களை ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டு கரைத்த மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டுப் பொரித்து எண்ணையை வடிகட்டி வைத்துக் கொள்ளவும். இவை தனியாக இருக்கட்டும்.
அடுத்து கிரேவி செய்முறை:
இப்போது பரிமாறும் முறை: ஒரு சின்னக் கிண்ணம் அல்லது சைட் டிஷ்ஷுக்கான தட்டில் கொஞ்சம் பொரித்த காலிஃப்ளவர் துண்டங்களைப் போட்டுக் கொண்டு அதன் மேல்கிரேவியை ஊற்றவும். விருப்பமானால் பொடிப்பொடியாக நறுக்கிய பச்சைக் கொத்துமல்லி, பச்சை வெங்காயம் தூவிக் கொள்ளலாம். இதை அப்படியே விருந்தாளிகளுக்குக் கொடுத்து அசத்துங்கள்.
--Geetha Sambasivam 06:35, 7 ஜனவரி 2013 (UTC) |