வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

பாதாம் பிஸ்கெட்

From மரபு விக்கி

Jump to: navigation, search

 உமா சண்முகம்


தேவையான பொருட்கள்


மைதா மாவு- 200 கிராம்

கார்ன்ஃப்ளோர்- 50 கிராம்

வெள்ளைச் சர்க்கரை- 75 கிராம்

வெண்ணெய் – 100 கிராம்

பாதாம் பருப்பு- 25 கிராம்

ஆல்மண்ட் எஸன்ஸ்- 10 துளிகள்

பேக்கிங் சோடா- 1/2 தேக்கரண்டி



செய்முறை


1. சர்க்கரை வெண்ணெய் இரண்டையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக நுரை வரும் வரை தேய்த்துக் குழையுங்கள்.

2. மாவுகள் இரண்டையும் சலித்து வெண்ணெய் சர்க்கரைக் கலவையில் போட்டுப் பிசையுங்கள்.

3. பாதாம் பருப்பை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மாவில் போட்டுக் கொள்ளுங்கள்.

4. வெண்ணெயை விட்டு எல்லாவற்றையும் நன்றாக பிசையுங்கள். தேவைப்பட்டால் சிறிது பால் அல்லது தண்ணீர் விட்டு மாவைப் பிசையுங்கள்.

5. அரை செ.மீ உயரத்திற்கு மாவை அப்பளம் செய்யுங்கள். வட்டமான பிஸ்கெட் அச்சை எடுத்து மாவைத் துண்டித்து தட்டில் வரிசையாக வையுங்கள்.

ஓவனில் பேக் செய்து எடுங்கள்.








--பவள சங்கரி திருநாவுக்கரசு. 02:21, 25 அக்டோபர் 2011 (UTC)

நன்றி - வல்லமை

Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 25 October 2011, at 02:21. This page has been accessed 3,289 times.