டாக்டர் ஜெயஸ்ரீ நீலகண்டன், நியூசிலாந்து, அளித்தது
பாடல் 1
குத்தடி குத்தடி ஜைலக்கா
குனிஞ்சு குத்தடி ஜைலக்கா
பந்தலிலே பாவக்கா தொங்குதடி டோலாக்கு
அக்கா வந்தா பாத்துக்கோ பணம் குடுத்தா வாங்கிக்கோ
சில்லறைய மாதிக்கோ சிலுக்கு பைல போட்டுக்கோ கிலு கிலுன்னு ஆட்டிக்கோ
பச்சை கிளியே வா வா வா
பாலும் சோறும் உண்ண வா
பச்சை மஞ்சள் பூசவா
கொஞ்சி விளையாட வா
பையப் பைய பறந்து வா
ஆடி பாடி களித்து வா
கையில் வந்து இருக்க வா
கனி அருந்த ஓடி வா
கவலையெல்லாம் நீங்கவே
களிப்பு வந்து பொங்கவே
பவள வாய் நீ திறந்து
பாடுவாயே என் தத்தயே!
சாரதா சுப்பிரமணியன் மேலும் அளிப்பது:
பாடல் 2
கும்ப்கோணமே கோணம்
குரவன் நட்டதே சோளம்
ராம்ன்விட்டதே பாணம்
அது எங்கேபோச்சோ காணோம்
பாடல் 3
ஜாடிக்கு மூடி
சதுருக்கு ஜோடி
பாம்புக்கு மகுடி
பறந்து வா ஒடி
ஏட்டிக்கு போட்டி
வேட்டைக்கு ஈட்டி
கட்டிக்க வேட்டி
கதை சொல்ல பாட்டி
பாடல் 4
வாசிக்க ஏடு
வசித்திட வீடு
பாலுக்கு மாடு
பண்ணாதே கேடு
பாடல் 5
அதோ பார் மைனா
*ஆஸ்பத்திரி கொய்னா
எங்க அப்பாபேர் நைனா
நான் போறேன் சைனா (கொய்னா என்பது அந்தகாலத்தில் மலேரியா சுரத்திற்குக் கொடுக்கும் C.A.Q. எனும் மருந்து ஆகும்)
பாடல் 6
ஒத்தக்கை சித்தப்பா
ரெட்டைக்கை சித்தப்பா
வட்டமாய் சுத்தப்பா
தட்டாமாலை தாமரைப்பூ
சுத்தி சுத்தி சுண்ணாம்பு ( சுண்ணாம்புக் காளவாயில் சுண்ணத்தை அரைக்கும் போது பாடும் பாடல்)
பாடல் 7
தங்கக்குடமே தாராவே *தட்டான் கடைக்கு போகாதே
தட்டான் உன்னை உருக்கிடுவன் அடித்து மாலையாய் போட்டிடுவான் *
பாடல் 8
சப்பமூக்கு ஸரோஜா எப்பக்கல்யாணம்
பங்குனி மாதம் பத்தாந்தேதி பருப்புக் கல்யாணம்
எங்கள் ப்ளாக் ஆசிரியர்களில் ஒருவரான ஸ்ரீராம் கொடுத்தவை!
பாடல் 9
கோபாலா ஏன் சார்....
எங்க போறே
கடைக்குப் போறேன்
என்ன வாங்க
விறகு வாங்க
ஓடிப் போனா
ஒளிஞ்சிப் போவேன்..
யாரைப் போலே
இந்த பொண்ணை போலே ...
பாடல் 10
வரகரைக்கறதும்
வந்து நிக்கறதும்
வா வா என்கிறதும்
வரமாட்டேன் போ என்கிறதும்
சுக்காங்குத்தறதும்
பாடல் 11
குட்டிக் குட்டிப் பேனே
குட்டார பேனே
கோந்தை தலைல ஏன் வந்தே...
பசிச்சுது வந்தேன்.
--Geetha Sambasivam 08:11, 18 மே 2012 (UTC)