காய்கறிகள் தோட்டத்துக்குக் கத்திரிக்கா ராசாவாம் -அந்தக்
கத்திரிக்காராசாவுக்கு கல்யாணம்தான் பேசாவாம்
பொருத்தமான பொண்ணதேடி ராசா போனாராம்
பொருத்தமான பொண்ணதேடி ராசா போனாராம்
அடுத்தத் தெரு மார்கெட்டுல வந்து நின்னாராம்
ராசா வந்து நின்னாராம்
சொகுசா வந்து நின்னாராம்
பச்ச மிளகா பொண்ண பார்த்துபுட்டாராம் -அது
பார்க்க நல்லா அழகுதான்னு நினைச்சுகிட்டாராம்
ராசா நினைச்சுகிட்டாராம்
மனசுல நினைச்சுகிட்டாராம்
கிட்டவந்து தொட்டுப் பார்த்து ஆஹா என்றாராம்
கிட்டவந்து தொட்டுப் பார்த்து ஆஹா என்றாராம்
வாய்வரை வைத்து காரத்தால துடிச்சுபுட்டாராம்
ராஜா துடிச்சு புட்டாராம்
ரொம்பவும் துடிச்சுபுட்டாராம்
பாவம் துடுச்சுபுட்டாராம்
குட்டி குட்டி சுண்டக்கா கூட்டம் கூட்டமா-அது
குமுஞ்சுகெடந்த அழகபார்த்து சொக்கிபுட்டாராம்
ராசா சொக்கி புட்டாராம்
அதுல ஒரு சுண்டக்காய அழைச்சுகிட்டாராம்
ஆவணியில் கலியாணத்த முடிச்சுகிட்டாராம்
ராசா முடிச்சுகிட்டாராம்
ஜோரா முடிச்சுகிட்டாராம்...
பீப்பீப்பீ டும்டும்டும் பீப்பர பீப்பர பீ
பீப்பீப்பீ டும்டும்டும் பீப்பர பீப்பர பீ
மேற்கண்ட பாடலை அளித்தவர் பிரியமுடன் பிரபு அவர்கள்.
கீழுள்ள பாடல்களை அளித்தவர் திருமதி சாரதா சுப்பிரமணியன் அவர்கள்
கும்பகோணமே கோணம்
குரவன் நட்டதே சோளம்
ராமன்விட்டதே பாணம்
அது எங்கேபோச்சோ காணோம்
ஜாடிக்கு மூடி
சதுருக்கு ஜோடி
பாம்புக்கு மகுடி
பறந்து வா ஒடி
ஏட்டிக்கு போட்டி
வேட்டைக்கு ஈட்டி
கட்டிக்க வேட்டி
கதை சொல்ல பாட்டி
வாசிக்க ஏடு
வசித்திட வீடு
பாலுக்கு மாடு
பண்ணாதே கேடு
சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் கல்யாணமாம்
ஒரு எலி ஓடி வந்து ஊருக்கெல்லாம் சொல்லித்தாம்
ரெண்டெலி ஓடி வந்து ரத்தினக்கம்பளம் விரிச்சுதாம்
மூணெலி ஓடி வந்து முக்காலி போட்டதாம்
நாலெலி ஓடி வந்து நாற்காலி போட்டதாம்
அஞ்செலி ஓடி வந்து மஞ்சள் அரைச்சுதாம்
ஆறெலி ஓடி வந்து அப்பம் சுட்டதாம்
ஏழெலி ஓடி வந்து எண்ணி எண்ணிப் பார்த்துதாம்
எட்டெலி ஓடி வந்து கொட்டகை போட்டதாம்
ஒன்பதெலி ஓடி வந்து ஒய்யாரமாய் ஆடித்தாம்
பத்தெலி ஓடி வந்து பல்லக்கைத் தூக்கித்தாம்
முருகப்பா வீட்டில்
முட்டை விற்பாள் பாட்டி
கோழிமுட்டை வாங்கிக்
குஞ்சு குவைப்பேனே
புள்ளிக்கோழிக் குஞ்சு
பொரிக்க்குமிரண்டை ஐஞ்சு
குஞ்சுகள் வளர்ந்து
கோழியாகும் விரைந்து
விரைந்துவளர்ந் திடுமே
வெள்ளைமுட்டை யிடுமே.
~ பவளக்கொடி என்ற பாடலிலிருந்து: யாழ்ப்பாணத்து நவாலியூர சு.் சோமசுந்தர புலவரின் ‘சிறுவர் செந்தமிழ்’
அளித்தவர் திரு இன்னம்புரான் அவர்கள்
--Geetha Sambasivam 08:41, 9 ஜூலை 2012 (UTC)