பருப்பு உருண்டை மோர்க்குழம்புFrom மரபு விக்கிதிருமதி. கீதா சாம்பசிவம் மேற்சொன்ன முறையில் கடலைப்பருப்பை ஊற வைத்து மி.வத்தல் உப்பு, பெருங்காயம் சேர்த்து அரைத்த விழுதில் ஒரு டேபிள் ஸ்பூன் அரிசி மாவைக் கலந்து வைத்துக்கொள்ளவும். இவற்றைச் சின்ன எலுமிச்சை அளவு உருண்டையாக உருட்டி ஆவியில் வேக வைக்கவும். உருண்டைகளைத் தனியாக வைக்கவும். இப்போ மோர்க்குழம்பு. கொஞ்சம் புளிப்பு இருக்கணும் மோரில். புளித்த மோர் கிடைக்கவில்லை என்றால் ஒரு நெல்லிக்காய் அளவு புளியை எடுத்துக்கொண்டு மோர்க்குழம்புக்கு அரைக்கும் சாமான்களோடு ஊற வைத்து அரைத்துக் கலக்கலாம்.
மோர்க்குழம்புக்குத் தேவையான சாமான்கள்: மோர் சுமார் 100 மி.லி. கெட்டியாக இருந்தால் நல்லது. உப்பு, மஞ்சள் பொடி தேவையான அளவு.
--Ksubashini 17:15, 18 மே 2010 (UTC) |