வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

பருப்பு உசிலி

From மரபு விக்கி

Jump to: navigation, search

திருமதி. கீதா சாம்பசிவம்


கடலைப்பருப்பு மட்டும் போட்டப் பருப்பு உசிலி:

தேவையான பொருட்கள், ஒரு சின்னக் கிண்ணம் கடலைப்பருப்பு ஊற வைக்கவும். மிளகாய் வற்றல், உப்பு, பெருங்காயம் சேர்த்து அரைக்கவும். வாணலியில் ஒரு கரண்டி, சுமார் 50 மி.லி.எண்ணெய் ஊற்றிக் கடுகு, உ,.பருப்பு, கருகப்பிலை போட்டுத் தாளித்து அரைத்த விழுதைக் கொட்டிக் கிளறவும், நன்கு உதிர் உதிராக வந்ததும், ஏற்கெனவே வேக வைத்த காய்களை அதில் சேர்த்து ஒரு கிளறு கிளறவும்.


இதற்கென ஏற்ற காய்கள், பீன்ஸ், கொத்தவரை, காராமணிக்காய், வாழைப்பூ, சில சமயம் அபூர்வமாய் முட்டைக்கோஸ், புடலை, இரண்டிலும் செய்யலாம் இவை இரண்டிலும் காயை வேக வைத்துச் சேர்ப்பதை விட, ஸ்டஃபிங் முறையில் அரைத்த விழுதை உள்ளே வைத்துப் பின்னர் ஆவியில் வேக வைத்தால் இன்னும் ருசி. ஆனால் கொஞ்சம் மெனக்கெடவேண்டும்.

--Ksubashini 17:13, 18 மே 2010 (UTC)

Contributors

Ksubashini

This page was last modified on 18 May 2010, at 17:13. This page has been accessed 2,508 times.