பரமேஸ்வரி சமேத பரமசுந்தரர் திருக்கோவில்From மரபு விக்கிஅருள்மிகு பரமேஸ்வரி சமேத பரமசுந்தரர் திருக்கோவில்
மூலவர் : பரமசுந்தரர்
ஒவ்வொரு பிரதோஷத்தின் போதும் பாம்பானது சிவன்மேல் எந்தவித பயம் இல்லாமல் படுத்துக்கொண்டு மக்களுக்கு காட்சி அளிக்கிறது. அடிக்கடி சிவன் அருகிலே பாம்பானது சட்டை உரிப்பதும் ரொம்ப அதிசயமாகும்.
தெட்சிணாமூர்த்தி இங்கு ஞானகுருவாக உள்ளதால் நமக்கு ஞானத்தையும், கல்வி அறிவினையும், மனஅமைதியும் கொடுக்கின்றார். அவரை வியாழக்கிழமைகளில் வழிபட மனக்குழப்பம் நீங்கி சித்தம் தெளியும் என்பது நம்பிக்கை. பரமேஸ்வரியை ஞாயிறு அன்று வழிபட கல்யாணம் நடைபெறுவதாக கூறுகின்றார்கள்.
தலபெருமை:
10வது பாம்பு ஊர் : கல்வெட்டு தகவலின்படி இன்றும் இந்த ஊர் கோயிலானது. 10வது பாம்பு ஊர் என்று கூறப்படுகிறது. திருநாகேஸ்வரம், திருபாம்பிரத்திற்கு இணையாக பாம்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக கோயில் அருகே நிறைய பெரிய பெரிய புற்றுகள் உள்ளன. இன்றும் ஒவ்வொரு பிரதோஷத்தின் போதும் பாம்பானது சிவன்மேல் எந்தவித பயம் இல்லாமல் படுத்துக்கொண்டு மக்களுக்கு காட்சி அளிக்கிறது. அடிக்கடி சிவன் அருகிலே பாம்பானது சட்டை உரிப்பதும் ரொம்ப அதிசயமாகும். ஆனால் எத்தனை புகைப்படம், எப்படி எடுத்தாலும் பாம்பு மாத்திரம் காட்சி அளிக்கவில்லை என்பது உலக அதிசயம். ஆனால் பாம்புகள் கடிப்பதோ, கஷ்டமோ கொடுப்பதில்லை. கல்வெட்டு : இந்த நிகழ்வுக்கு சான்றாக தெட்சிணாமூர்த்திக்கு பின்புறம் கல்வெட்டு உள்ளது. அதன்படி கி.பி. 917 ஆம் ஆண்டு முதலாம் பராந்தக சோழனால் திருப்பணி செய்யப்பட்டது, என்றும் இந்த கோயிலுக்காக நிறைய தானங்கள் அவன் கொடுத்தாகவும் தகவல் உள்ளது. பரமசுந்தரர், அமரசுந்தரர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது அங்குள்ள குருவானவர் ஞானகுரு என்றும் ஞானகாரகன் என்றும் தெரிவிக்கிறது. பரமசுந்தரர் : கல்வெட்டுக்கள் மூலம் சுவாமி பரமசுந்தரர் என்று அறியப்படுகிறது. மிகவும் அழகாக, நேர்த்தியாக ஆவுடையாருடன் காட்சி அளிக்கிறார். பரமேஸ்வரி : அம்பாள் மிகவும் அழகான தோற்றத்துடன் லட்சணமாக காட்சி அளிக்கிறாள். தெட்சிணாமூர்த்தி : வேறு எங்கேயுமே காணமுடியாத அழகான சிலை. தெட்சிணாமூர்த்தி பின்புறமே எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சிலையின் பின்புறம் கல்வெட்டு இருப்பது அதிசயமாகும். மற்ற சிலைகள் எதுவும் காணப்படவில்லை. கோயிலின் அருகே நிறைய புற்றுகள், பாம்புகள் இருப்பதாலும், செவ்வாய், வெள்ளி பாம்புக்கு பால் ஊற்ற ராகு, கேது, நாக தோஷம் போகும் என்கின்றனர். இது ராகு, கேதுவிற்குரிய பரிகாரஸ்தலங்களில் ஒன்றாகும்.
தல வரலாறு:
திருவிழா:
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 03:29, 5 மே 2011 (UTC) நன்றி - தின மலர்
|

