வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

நாகூர் தர்காவில் சந்தனம் பூசும் விழா

From மரபு விக்கி

Jump to: navigation, search

நாகூர் தர்காவில் சந்தனம் பூசும் விழா

                                                                                                 
WR 79106.jpeg


நாகப்பட்டினம், மே 14: நாகையை அடுத்த நாகூரில் உள்ள பாதுஷா சாகிபு ஆண்டவர்கள் தர்காவின் 454-ம் ஆண்டு கந்தூரி விழாவையொட்டி, சந்தன பூசும் நிகழ்ச்சி சனிக்கிழமை அதிகாலை நடைபெற்றது.

இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற தர்காக்களில் ஒன்று நாகூர் பாதுஷா சாகிபு ஆண்டவர்கள் தர்கா. இந்த தர்காவின் கந்தூரி விழா சந்தனக் கூடு ஊர்வலம் மற்றும் சந்தனம் பூசும் விழா ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும்.

நிகழாண்டுக்கான (454-ம் ஆண்டு) கந்தூரி விழா கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மே 12-ம் தேதி பீர் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து, சந்தனக் கூடு ஊர்வலம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

நாகை யாஹூசைன் பள்ளி தெருவிலிருந்து தொடங்கிய சந்தனக் கூடு ஊர்வலம், சாலா பள்ளித் தெரு, நூல்கடைத் தெரு, பெரிய கடைத் தெரு உள்பட முக்கிய வீதிகள் வழியாக, சனிக்கிழமை அதிகாலை தர்காவின் அலங்கார வாசலை அடைந்தது.

இதையடுத்து, பாரம்பரிய முறைப்படி மிகுந்த மரியாதையுடன், சந்தனக் கூட்டிலிருந்த சந்தனக் குடங்கள் இறக்கப்பட்டு, தர்காவுக்குக் கொண்டு செல்லப்பட்டன. சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னர், ஹஜரத்து ஆண்டவர்கள் புனித ரவுலா ஷரீப்புக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பிரமுகர்கள், இறை அன்பர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.




--பவள சங்கரி திருநாவுக்கரசு. 11:39, 15 மே 2011 (UTC)

நன்றி - தின மலர்.

Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 15 May 2011, at 11:41. This page has been accessed 2,151 times.