வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

நவரத்தின மாலை - பகுதி - 4

From மரபு விக்கி

Jump to: navigation, search

’என் கடன் பணி செய்து கிடப்பதே’


பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல்போற்றி
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான் அடிபோற்றி
வாழிதிரு நாவலூர் வன்றொண்டர் பதம்போற்றி
ஊழிமலி திருவாத வூரர்திருத் தாள்போற்றி.

தில்லைவாழ் அந்தணரே முதலாகச் சீர்படைத்த
தொல்லையதாம் திருத்தொண்டத் தொகையடியார் பதம்போற்றி
ஒல்லையவர் புராணக்கதை உலகரிய விரித்துரைத்த
செல்வமலி குன்றத்தூர்ச் சேக்கிழார் அடிபோற்றி.



தமிழ் நாட்டிலேயே பெயர் சொல்லும் அளவிற்கு ஒரு திருக்கூட்டத்தை உண்டாக்கி அமைத்து நல்ல வழியில் செல்ல வழிவகுத்த பெரியவர், என்றென்றும் நினைவில் நிறுத்த வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் ஐயா தவத்திரு தொண்டர்சீர் பரவுவார், ரா.ப. தங்கவேலனார் அவர்கள்.

அவருக்கென சில ராகங்கள் அதைத் தொண்டர்களுடன் பாடும் பொழுது மிகவும் ஈர்ப்புள்ளதாக விளங்கும். நன்கு இசை பாடும் சங்கீத வித்வான்கள், பரனை பாடும் பக்தர்கள் அனைவரும் இவர் இசைக்கும் வண்ணமே அதே தொனியில் பாடி மனமும், மொழியும் ஒருங்கு சேர்ந்து இறைவனுடன் தொண்டர்களை ஒருமைப்படுத்தும் அரிய செயல பல்லோராலும் அதிசயத்தக்க வகையில் காணப்பட்டது. நால்வர் பெருமானாரில், திருநாவுக்கரசு சுவாமிகள் தொண்டின் மூலமாகவே இறைவனின் உண்மை வடிவத்தை உணர்ந்த பெரியவர்கள், ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்று திருமேனி உழவாரப்படையைத் தாங்கி நிற்கும் கோலத்தையே காணமுடிவது போல், தன் வாழ் நாள் முழுவதையும் இறைபணி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தார். திருநாவுக்கரசு பெருமானின் நினைவாகவே சதயத் திருவிழாவினை, சிறந்த விழாவாக பத்து நாட்களுக்குக் கொண்டாடுவார்கள். அதுபோது, தேரோட்டம்,சமயச் சொற்பொழிவு, முத்தமிழ் இயல், இசை, நாடகங்களை நடத்தி மக்களுக்கு சமய உணர்வை ஊட்டி வந்தார்.


சென்னை மயிலாப்பூரிலே அறுபத்து மூவர் விழா சிறப்பாக நடந்தது கண்டு உள்ளம் மகிழ்ந்த ஐயா அவர்கள் அது போல தமதூரிலும் கொண்டாட வேண்டுமென விருப்பம் கொண்டு, அறுபத்து மூவரின் செப்புச் சிலைகளைச் செய்து முடிக்கச் செய்து, அறுபத்து மூவர் விழாவும் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டு, அது தொடர்ந்து தொய்வில்லாமல் நடக்கும் ஏற்பாடும் செய்யப்பட்ட பெருமையும் ஐயாவைச் சாரும்.


திருத்தலப் பயணம் :


நால்வர் பெருமக்கள் மற்றும் திருமுறை ஆசிரியர்கள் பாடிய தலங்களுக்கும், வைப்புத் தலங்களுக்கும், ஏனைய அடியயோருடன் ஆண்டுக்கு ஒரு முறை 15 நாட்கள் செல்வது வழக்கம். திங்கள் தோறும் வைப்புத் தலப்பயணமும் பல்லாண்டுகளாக தொடர்ந்திருக்கின்றது.

இமயம் முதல் கதிர்காமம் வரை மூன்று முறைகள் பயணம் செய்துள்ளார். இலங்கை மக்களின் வேண்டுகொட்கிணங்க, சொற்பொழிவு செய்யும் பொருட்டு சுமார் 20 நாட்கள் தங்கி இருந்து வந்துள்ளார். தில்லை, திருவாரூர், பழனி, திருச்செங்கோடு போன்ற பல்வேறு இடங்களுக்கு, அன்பர்களுடன் நடைப்ப்யணம் சென்றுள்ளார்.

பலமுறை ஐயா அவர்கள், இறைப்பணியில் போல் வேறெதிலும் மனம் அவ்வளவாக நாட்டம் கொள்வதில்லை என்பதை பல முறை சொல்லக் கேட்டிருக்கிறோம்.


திருப்பணி :


திருப்பணி என்று வந்துவிட்டால், முழுநேரப்பணியாக வேகாத வெய்யிலிலும், குடை பிடித்து நின்று கொண்டு பல மணி நேரம் பணியில் ஈடுபடுவதைக் காண வியப்பாக இருக்கும். அவர் அத்துனை சுறுசுறுப்பாக தன்னுடைய தள்ளாத வயதில் கூட, நின்று கொண்டும், நடந்து கொண்டும் பணியாளர்களை பணித்த வண்ணம் இருந்தது ஆச்சரியமான காரியமாக இருந்தது. திருத் தொண்டீசர் கோவிலிலுள்ள் ஒவ்வொரு கல்லும் இவரைப் பற்றிப்பேசும் என்கின்றனர் இன்றும். திருத்தொண்டீசரின் ராச கோபுரப் பணி மிக நுட்பமாக அமைத்துச் செய்ய வைத்தார் என்கின்றனர். மகிமாலீசுவரர் ஆலயத்தில், பன்னிரு சோதிலிங்கம் அமைத்ததும் மிக அரிய செயலாம்.


திருப்பயணம் தொடரும்.







--பவள சங்கரி திருநாவுக்கரசு. 13:32, 9 ஜூலை 2011 (UTC)







Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 9 July 2011, at 13:32. This page has been accessed 1,897 times.