வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

தேங்காய் பால் குழம்பு

From மரபு விக்கி

Jump to: navigation, search

வசந்தா குகேசன்


தேவையான பொருட்கள்;-


தேங்காய் முற்றியது -1

புளி — எலுமிச்சைஅளவு

வறுத்து அரைக்க;-

உளுத்தம் பருப்பு -1 ஸ்பூன்

கடலைப் பருப்பு -1 ஸ்பூன்

வெந்தயம் -1/2 ஸ்பூன்

வரமிளகாய் – 6

பெருங்காயம் -சிறிதளவு


செய்முறை;-


1.உளுத்தம் உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, வெந்தயம், வரமிளகாய், பெருங்காயம் இவற்றை வறுத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.

2.தேங்காயை ஆட்டி பால் பிழிந்து கொள்ளவும்.

3.முதல் பாலை தனியாகவும் இரண்டாவது பாலை தனியாகவும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

4.புளியைக் கரைத்து வடிகட்டி வைத்து கொள்ளவும்.

5.வானலியில் கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை பெருங்காயம் போட்டு தாளித்து இரண்டாவது பாலையும் புளியையும் ஊற்றவும்

6.வறுத்து அரைத்த பொடியைச் சேர்க்கவும்.

7.பாதியாக சுண்டியவுடன் முதல் பாலை ஊற்றி ஒரு கொதி வந்தவுடன் மல்லித்தளை போட்டு இறக்கவும். இது சாதத்துடன் கலந்து உண்ண மிகவும் சுவையாக இருக்கும்.









--பவள சங்கரி திருநாவுக்கரசு. 16:08, 24 ஆகஸ்ட் 2011 (UTC)

Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 24 August 2011, at 16:08. This page has been accessed 1,493 times.