வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

தூத்துக்குடி பனிமயமாதா கோயில் வரலாற்றுக் கட்டுரைகள் 20

From மரபு விக்கி

Jump to: navigation, search
அதிசயப் பனிமயத் தாயே!

திரைகடலோடி அலைந்து மீன் பிடித்த
தேர்ந்த மீனவர்கள் பன்னிருவர்
திருத்துவ இரண்டாம் சுதனுந்தன் மைந்தன்
சீடராய் அமைந்ததெம் அதிர்ஷ்டம்
திசை பல சென்றுன் திருமகன் நெறியை
சீடர்கள் புகட்டி எம் நாட்டில்
திறனிலோர் வேத சாட்சியாய் சீடர்
திகழ்வதெம் மீனவர் மகிமை.

உரை பல கோடி உன் புகழ் பாடி
உலகங்கள் யாவுங்கொண்டாடும்
உரிமை என்றாலும் மீனவர் எமக்கு
ஒரு வினாடியும் தவறாது
உள்ளதத்தில் நாவில் உதட்டினிலே இனிப்பதும்
உரைப்பதும் மரியமாதாவே!
உண்மையில் இதுவே பரம்பரையான
உன்னத ஜீவமந்திரமே!

கரையும் மறைந்து உன் ஆலயக் கோபுரக்
காட்சியும் மறைந்து ஆழ் கடலில்
கலம் விசைப் படகைச் செலுத்தி மீன் பிடிப்போர்
காவல் நீ காலங்கள் யாவும்
கடும்புயற்காற்றில் மின் இடி மழையில்
கலங்கிடும் தருணமே விரைந்து
காத்தருள் அடைக்கலம் நீயே!

அரைமதி ஆதவன் ஆறிரு மீனணி
ஆனந்த ரமணி கல்யாணி
அழகுயர் தங்க ரதமதில் பவனி
அடியர் இன்புற எழுந்தருளும்
ஆனந்தச் சகாய அன்னையே எம்மை
ஆதரித்தருள் புரிவாயே
அலைமயர் மந்தர நகரின் தெய்வீக
அதிசயப் பனிமயத்தாயே!


--Geetha Sambasivam (பேச்சு) 09:52, 4 ஜனவரி 2014 (GMT)

Contributors

Geetha Sambasivam

This page was last modified on 4 January 2014, at 09:53. This page has been accessed 1,573 times.