வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

தூத்துக்குடி பனிமயமாதா கோயில் வரலாற்றுக் கட்டுரைகள் 18

From மரபு விக்கி

Jump to: navigation, search
பார் புகழும் பன்முகத் தாயே

Er. ஹாமில்ற்றன் அ.காற்றார்

தாவீதின் குலமலராய் தயை செய்யும் சகாயமாய்
பாவிகளின் அடைக்கலமாய் தரணியாளவந்த தயாபரியே
அலகையின் தலை மிதித்த அமல உற்பவியாய்
அலங்கார ரதவீதி வரும் பனிமயமே நீ வாழி!

பார் போற்றும் முத்து தாரகையே!
கார்மெல் மலையில் கலங்கரை விளக்காய்,
லூர்து நகரில் உருகிடும் மெழுகாய்,
சோர்ந்திடும் மக்களைத் தேற்றிடும் அமலியே வாழி!

உதயம் உயர உதயதாரகையாய்
பதமும் பணியும் பெரிய நாயகியாம்
குவலயம் கமழும் குவாடலுக் அன்னையாய்
நிதமும் நினைக்கும் பெம்பெய் மாதாவாம்
சுதனவன் மடிசுமந்த வியாகுலியே நீ வாழிய்!

ஜெயம் பெருக்கும் ஜெபமால அன்னையாம்
பயம் போக்கும் பரம்பொருளே!
பன்னிரு விண்மீன் மகுடமேந்தி
தன்னில்லாத் தலைவியாய் தரணியில் வாழி நீ!

மாசனுகா மாசில்லாக் கன்னி எம் ஆரோகனத்தாய் நீ
நேசரின் நோய் நீக்கும் ஆரோக்கிய அன்னையாய்
பாசமோடு வரன் நல்கும் திருக்கல்யாண நாயகியாம்
வாஞ்சையுடன் வந்துதித்த வானோரின் ராக்கினியே வாழ்க நீ!

உன்னதர் உருகும் உபகார மாதாவாம்
மன்னவர் மருகும் பாத்திமா மாதாவாம்
விண்ணவள் விதைத்த சலேத் அன்னையாம்
கண்ணின் மணி காக்கும் தெய்வநாயகியே நீ வாழி!

தரணியில் தயை கூர்ந்து தங்கத்தாரகையாய்
தங்கரதம் வீற்றிங்கு தரணியாள வந்த
பனிமயமே எம் தஸ்நேவிஸ் தாயே
தொழுதோம் நின்னையே என்றுமே!


--Geetha Sambasivam (பேச்சு) 13:21, 6 டிசம்பர் 2013 (GMT)

 

Contributors

Geetha Sambasivam

This page was last modified on 25 December 2013, at 10:05. This page has been accessed 2,410 times.