திவ்ய பனிமயமே தூய நறுமணமே
செ.கைத்தான் கோமஸ், தூத்துக்குடி
தமதிரித்துவ சர்வேசுவரவே வாழ்க!
தாய்மரி என்னும் நறுமணமே வாழ்க!
தூய அன்னாளின் மடியினிலே--தாயே
அமலோற்பவ மணம் வீசினீர்!
தூதரின் வாழ்த்துரையில்--மரியே
தேவத்தாயாகி நறுமணம் வீசினீர்!
தேவ சுதனை சுமந்த போது--தாயே
தேவாலயமாய் ஒளி வீசினீர்!
கர்த்தரைப் பெற்ற பின்பும்--மரியே
கன்னிகையாய் மணம் வீசினீர்!
கிறிஸ்துவோடு வாழ்க்கையிலே--தாயே
ஏழ்மை தரித்து நறுமணம் வீசினீர்!
இரட்சகரின் பாடுகளிலே--மரியே
இணை இரட்சகியாய் மணம் வீசினீர்!
திருமகனின் உயிர்த்தெழுதலில்--தாயே
திருச்சபைக்கு திடம்தந்து நறுமணம் வீசினீர்!
தூய ஆவியின் வருகையிலே--மரியே
தூய அக்கினி விளக்காக ஒளி வீசினீர்!
நின் எழுபது வயதினிலே---தாயே
விண்ணரசியாக நறுமணம் வீசினீர்!
பரகதி என்னும் தங்கத் தேரினிலே
துலங்கும் பனிமய நறுமணமே!
மானிடம் மீட்படைய கமழ்ந்திடுவாய்
கிறிஸ்து என்னும் நறுமணத்தை!
--Geetha Sambasivam 06:20, 11 செப்டெம்பர் 2012 (UTC)