வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

திருவண்ணாமலை =அருணாசல அருள் வரலாறு - பகுதி (4)

From மரபு விக்கி

Jump to: navigation, search

சிங்கை கிருஷ்ணன் 


மலை வலம் வர சிறந்த, சிறப்பான நாள்
"""""""""""""""""""""""""""""""""""""""""""" `
புராண காலத்தில் பார்வதி தேவியார் சிவனின் இடப்பாகம் பெற வேண்டும் என்பதற்காக கார்த்திகை மாதத்தில் கிருத்திகை நட்சத்திரத்தில் விழா எடுத்து மலையை வலம் வந்தார்.அப்போது தான் சிவன் காட்சி தந்து உமையாளுக்கு இடப்பாகம் அளித்தார் என்பது வரலாறு.  சித்தர்கள், ஞானிகள் ஆகியோர் ஒவ்வொரு மாதப்பிறப்பு மற்றும் பிரதோஷ காலத்தில் மலை வலம் வந்தனர். அதன்பின்னர் பெளர்ணமி அன்று மலைவலம் வர ஆரம்பித்தார்கள்.சந்திரன் நம் மனத்துக்கு (எண்ணத்திற்கும்) காரகன். அன்று பூமியில்சூரியனிடமிருந்து சக்திகளை
அதிகளவில் பெற்று பூர்ண நிலவாக சந்திரன் நிறைந்த உயிர்களை தருகிறார். இதனால் பெளர்ணமி மலை வலம் வருவது சாலச்சிறந்தது என பெரியோர்களால் போற்றப்பட்டது. மனோன்மணியான சக்தி சிவனுடன் இரண்டற கலக்கும் இந்த நாளில் வழிபடும் பக்தர்களுக்கு
விசேஷ சக்திகளை வழங்குகிறது என முனிவர்கள். கூறுகின்றனர்.இதை விஞ்ஞானமும் உறுதிபடுத்துகிறது. இதை விட அதிசூட்சம் நாளாக வியாதீபாத யோக நாள் அன்று மலை வலம் வந்தால் நினைத்த காரியம் சித்தி அடையும் என்று கோயில் குருக்கள் கூறுகின்றனர்.


,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

செவ்வாய் சிறப்பு.
``````````````````````

சிவன் கோயில்கள் அனைத்திலும் சிறப்பு வழிபாடு திங்கள்கிழமையாக இருக்கும். ஆனால்,திரு அண்ணாமலை அக்னி மலை. இதனால் தான் அருணாசலம் என்ற பெயரும் உண்டு. அருணம் என்றால் சிவப்பு என்று பொருள்.இந்த கோயில் அக்னி கோயில். அக்னிக்குரிய நாள்  செவ்வாய்கிழமை. அக்னிக்குரிய கிரகம் அங்காரன்.ஆகவே இந்த கோயிலில் மட்டுமே சிவபெருமானுக்கு செவ்வாய்கிழமை அன்று விசேஷ வழிபாடு நடக்கும். அதுபோலவே செவ்வாய்கிழமை அன்று செவ்வாய் கிழமை அன்று வழிபடுவோர் பிறவி பிணியிலிருந்து விடுபடலாம் என்று புராணங்கள் கூறுகிறது.

ஆயுளைக்கூட்டும் ஆற்றல் கொண்டது. திருக்கடையூர். சனித்தொல்லையில் இருந்து விடுப்பது திருநள்ளாறு.நோய்களில் இருந்து நம்மை காப்பது வைத்தீஸ்வரன் கோயில்.அது போல் ஊழ்வினைகளை நீக்கக்கூடியது அண்ணாமலையார் கோயில். பிறவிப்பிணி நீங்க வேண்டும்
என விரும்பும் எவரும் மலைவலம் வருவதால் தத்தம் கர்மாவை குறைத்து கொள்ள முடியும். அண்ணாமலையை சுற்றி வருவது சம்சாரக் கடலை கடக்கும் தெப்பமாக அமையும்.அதுபோல் ஏழு நகரங்களையும் கடந்து முக்தி அடையும் ஏணியம்மன் கோயிக்குள் கட்க தீர்த்தம் மிகச்சிறந்த தீர்த்தமாக போற்றப்படுகிறது. மகிடாசுரனை வதம் செய்த பார்வதி தேவியின் பாபம் போக்குவதற்கு துர்க்கையம்மன் வாள் வீசி தோற்றுவித்தது. மலை சுற்றி வரவேண்டும் என நினைத்து ஓரடி எடுத்து வைப்பவர்களுக்கு ஒரு யாகம் செய்த பலன் கிடைக்கும்.இரண்டாம் அடி எடுத்து வைத்தால் ராஜிய யாகம் செய்த பலன் கிடைக்கும் மூன்றடி எடுத்து வைத்தால் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். நான்காவது அடி எடுத்து வைத்தால் எல்லா யாகங்களும் பலன் கிடைக்கும்.நினைப்பவர்களுக்கே இந்த பலன் என்றால் மலைசுற்றுபவர்களுக்கு
கிடைக்கும் பலன் கைலாசத்திற்குள், நுழைந்து பிறப்பு இறப்பாகிய பிணி நீங்கி உயர் பதவி கிடைக்கப் பெறுவார்கள் என்று அருணாசல் புராணம் தெரிவிக்கிறது. நம்பிக்கைதான் வாழ்க்கை. இன்று படுக்கும் போது நாளை காலையில் எழுந்து விடுவோம் என்ற திட நம்பிகையில்தான் துயில் கொள்கிறோம்.நம்பிக்கைதான் நமது உயிர் மூச்சு. நம்பிக்கையால்தான் எல்லாவற்றியும் சாதிக்கிறோம்.நம்பிக்கை இல்லாதவர் இந்த உலகில் வெற்றி பெற முடியாது. எனவே பூரணமான நம்பிக்கையோடு தொடங்குங்கள்.மலையை சுற்றும் போது சிவலிங்கம் சிவன்,சிவம் என்ற எண்ணத்தோடு வலம் வரத் தொடங்கினால், நீங்கள் நினைத்த எண்ணங்கள் கண்டிப்பாக நிறைவேறும்

ஞாயிற்று கிழமை சுற்றினால் சிவபதவி கிடைக்கும்

திங்கள் கிழமை சுற்றினால் இந்திர பதவி கிடைக்கும்.

செவ்வாய் கிழமை சுற்றினால் கடன்,வறுமை நீங்கும்.


தொடர்ந்து வரும் ஏழு பிறப்புகளை நீக்கி சுபிட்சும் பெறலாம்.

புதன்கிழமை சுற்றினால் கலைகளில் தேர்ச்சியும் முக்தியும் கிடைக்கும்.

வியாழக்கிழமை சுற்றினால் ஞானிகளுக்கு ஒப்பான நிலையை அடையலாம்.

வெள்ளிக்கிழமை சுற்றினால் விஷ்ணு பதம் அடையலாம்..

சனிக்கிழமை சுற்றினால் நவக்கிரகங்களை வழிப்பட்டதன் பயன் கிடைக்கும்.

நாற்பத்தெட்டு நாட்கள் அதிகாலையில் கணவனும்,மனைவியும் நீராடிமலைவலம் வந்தால் மகப்பேறு கிடைக்கும்.


அமாவாசை அன்று சுற்றினால் மனதில் உள்ள கவலைகள் போகும்.மனம் நிம்மதி அடையும்.

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

மலை வலம் வரும் போது பக்தர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை அருணாசல புராணத்தில் பிரம்மன் தெரிவிக்கிறார். மலை வலம் வரும் பக்தர்கள் அன்றைக்கு பெண்களை நினையாமலும், அவர்களோடு சேராமலும், நீரில் மூழ்கி, தூய்மையான ஆடையை உடுத்திகொண்டு விபூதி அணிந்து,தானம் தாம் கொடுத்துஒருவரிடத்தும் தானம் வாங்காமல் காலினால் நடந்து வர வேண்டும்.மலையை சுற்றி இருக்கின்ற தேவர்களையும் முனிவர்களையும் வணங்கி சட்டையும், போர்வையும் நீக்கி குடை பிடியாமல்,செருப்பு அணியாமல், பயம்,கோபம், சோகம், இவற்றை நீக்கி குதிரை,யானை இவற்றின் மீது ஏறாமல் தாம்பூலம் தரிக்காமல், சிந்தையை சிவன்பால் செலுத்தி வலம் வரவேண்டும். கையை வீசிக்கொண்டே போகாமலும், மனச் சோர்வில்லாமல்,ஆர்வத்தோடு கைகளை தலை மேல் குவித்து கொண்டு, உடல் உறுப்பு ஊனம் உற்றவர்களையும் பாராமல்,தீயவர்களை கண் எடுத்தும் பாராமல் நடத்தல் வேண்டும் மலை சுற்றப்போகும் பக்தர்களை பரிசோதிக்க நினைப்பது இறைவனின் தினசரி விளையாட்டு.எனவே இச்சோதனைகளை வென்று மலை வலம் வரவேண்டும்.

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000


அண்ணாமலையில் வாழ்ந்து முக்தி பெற்ற மகான்கள்


'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
குகை நமச்சிவாய தேவர்,
குகை நமச்சிவாய சுவாமிகள்,
அருணகிரி நாதர்,
திருவண்ணாமலை ஆதின முதல் குருமூர்த்தி,
தேசிகப் பரமாசாரிய சுவாமி,
பாணி பத்திர சுவாமி,
அன்னை மங்கையர்க்கரசியார்,
சோணாசல் தேவர்.. ஞானப்பிரகாசர்,
வீர வைராக்கிய மூர்த்தி சுவாமி ,
அப்பைய தீட்சிதர்,
ஆதி சிவப்பிரகாசர்,
ஞானியாரடிகள் தட்சிணாமூர்த்தி சுவாமி,
குமாரசாமி பண்டாரம்,
அழியாவிரதம் கொண்ட தம்பிரான்,
ஈசானிய ஞான தேசிக சற்குரு சுவாமி,
பழனி சுவாமி,
அருள்மொழி அம்மணி அம்மாள்,
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமி;
காரியானூர் நடேச சுவாமி,
அங்கப்பிரதட்சணம் அண்ணாமலி சுவாமி,
திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் சுவாமி,
சிவா சுவாமி,
பத்திராசல சுவாமி,
சேஷாத்திரி சுவாமி,
இரமண முனிவர்,
சடைச்சி அம்மாள்,
அழகானந்த அடிகளார்,
இரை சுவாமி இசக்கி சுவாமி,
சோணசால பாரதியார்,
யோகி ராம்சுரத் குமார் [விசிறி சாமியார்]


நாளும் தொழுவோர் துயர் அழிக்கும் மலை திருவண்ணாமலை


திருவண்ணாமலை கார்த்திகை தீபம் 2011 - டிசம்பர் 8-ம் நாள் நாளை சான்றோர்கள், சமயக்குரவர்கள், ஞானிகள், நமது இலக்கியங்களில்
காணப்படும் கார்த்திகை தீபப் பாடல் காணலாம்,


------ நிறைவு ---


நன்றி, வணக்கம் -
!-- அன்பொடு,
கிருஷ்ணன்,
சிங்கை












--பவள சங்கரி திருநாவுக்கரசு. 13:58, 30 நவம்பர் 2011 (UTC)

Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 30 November 2011, at 14:00. This page has been accessed 1,792 times.