திருக்கைலை யாத்திரைப் பயணம் 2மரபு விக்கி இருந்துஓம் நமச்சிவாயா 2செப்டெம்பர் 1-ம் தேதி டெல்லி போய்ச் சேர்ந்து அங்கிருந்து குர்காம்மில் உள்ள மைத்துனன் வீட்டிற்குப் போயாகி விட்டது.
எங்களுடன் யார், யார் வருகிறார்கள் என்ற விவரம் ஒன்றும் எங்களுக்குத் தெரியாது. என் கணவர் ஒரே ஒரு முறை "சென்னை, மயிலாப்பூரில் நடுத்தெருவில் உள்ள அன்னபூர்ணா யாத்திரா சர்வீஸுக்குப் போனதோடு சரி. அப்புறம் அவங்க ஆள் "ஆதி" என்பவர் வந்து விசாவிற்காக வேண்டிய பாஸ்போர்ட் காப்பி வாங்கிப் போனார். எல்லாப் பேச்சு வார்த்தையும்தொலைபேசியில்தான். அதுவும் இந்த சேவையை நடத்தும் "கைலை மனோஹர்" அவர்களைப் பார்த்தது கூடக் கிடையாது. தொலைபேசியில் கிடைத்தாலோ ஒரு நிமிடம் பேசுவதற்குள் அவருக்கு வேறு அழைப்பு வந்து விடும். ஆகக்கூடி எந்த விதமான தகவலும் சரியாக இல்லாமல் தான் நாங்கள் போவதற்கு டி.டி. முதற்கொண்டு எடுத்துக் கொண்டு இங்கே உள்ள மனோஹரின் சேவைக்கு உரிய பணத்தைச் செக்காகக் கொடுத்துவிட்டுக் கிளம்பினோம். இதை ஏன்
ஏர்போர்ட் போனதும் தொலைபேசியில் மனோஹரை அழைத்தோம். உடனேயே வந்து check-in-counter-க்கு அழைத்துப் போனார். அப்போது தான் சக பிரயாணிகளைப் பார்த்தோம். அநேகமாக என் வயதுக்குள் (ஹி ஹி ஹி 15 தான்) ஒரு 4 அல்லது 5 பேர் இருந்தார்கள். மற்ற எல்லாரும் 60+ தான். ஒரு டாக்டர் அம்மா மடிப்பாக்கத்தில் இருந்து வந்திருந்தார். 78 வயது. அவர் கணவரும் வயதானவர் தான். வேறு ஒரு பெரியவர் பங்களூரில் இருந்து 76 வயது. ஆனால் திடமாக இருந்தார். இப்படியாக நாங்கள் ஒர் 26 பேர் இருந்தோம். இன்னும் 22 பேருக்கும் அல்லது அதிகமாகச் சென்னையில் இருந்து ரெயில் மார்க்கமாகக் "காட்மாண்டு" வருவதாக மனோஹர் தெரிவித்தார். சென்னையில் இருந்து ரெயில் மார்க்கம் என்றால் சென்னை-கோரக்பூர் வந்து அங்கிருந்து பஸ்ஸில் காட்மாண்டு வரவேண்டும். நேபாள் போவதற்கு விசா எல்லாம் கிடையாது. இந்தியர்கள் தடையின்றிப் போகலாம், வரலாம், நேபாளியர்களும் அப்படியே. ஆனால் தற்சமயம் மாறுபட்ட அரசியல் சூழ்நிலையால் பாஸ்போர்ட் நம்பரைக் குறித்துக் கொள்கிறார்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் சோதனை மிக அதிகம். இங்கே இந்தியாவிலும் அதிகமாக இருந்தது.
சோதனை முடிந்து போர்டிங் பாஸ் கொடுத்து சாமான் எல்லாம் சரிக்கட்டி (ஆமாம், உண்மையிலேயே சரிக்கட்டினோம். ஒருத்தருக்கு 25 கிலோ தான் அனுமதி) குழுவாகப் போனதால் சிறப்பு அனுமதி பெற்று சாமான்களை அனுப்ப முடிந்தது. விமானப் பயண நேரம் 1-20 நிமிடங்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் போய் உட்கார்ந்து அவங்க சாப்பாடு கொடுத்து சாப்பிட்டு முடிக்கும்போதே வந்து விடுகிறது. ஒரு வழியாக நேபாளம் வந்து விட்டோம், இரவு 9-30 மணி இந்திய நேரம். நேபாள நேரம் 20 நிமிஷம் கூட. அங்கே ஆரம்பித்தது ஒரு சிறிய தவறு. நாங்கள் எல்லாரும் நேபாளத்திலேயே அதிக நாள் தங்கப் போவதில்லை. மறு நாளுக்கு மறு நாள் அதாவது 5-ம் தேதி "மானசரோவர், கைலாஷ்" யாத்திரை போக வேண்டும். அது இருப்பதோ சீனப்பகுதியான திபெத்தில். அதற்கு நேபாளத்தில் இருந்து அனுமதி வாங்காமல் எப்படிப் போவது? இந்த விவரம் பற்றிய தெளிவு இல்லாமல் நாங்கள் ஒரு 12 பேர் முன்னால் வந்தவர்கள் பாஸ்போர்ட்டைக் காட்டி நம்பர் குறிக்கப்பட்டதும் கீழே வந்து
பி.கு.: ரொம்பவே விவரமாக எழுதுவதின் காரணம் நாங்கள் செய்த தவறு வேறு யாராலும் செய்யப்படாமல் இருக்க வேண்டித்தான். போரடித்தால் மன்னிக்கவும்.
--Geetha Sambasivam 02:36, 13 டிசம்பர் 2010 (UTC) |

