திருக்குறள் - குறளால் விளக்கம்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

துரை. ந. உ 13:26, 26 மே 2010 

அறம் : அதிகாரம் 01 : கடவுள் வாழ்த்து :

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு                                       [01:01]
விளக்கக் குறள் :

எழுத்தின் தொடக்கம் அகரம்; இறைவன்
உலகத்தில் வாழும் உயிர்க்கு (அ)


அகரம் முதலாம் மொழிக்கு ; பகவான்
பகலவன்கீழ் வாழும் உயிர்க்கு (ஆ)
எழுத்துக்(கு) அகரம் ; அதுபோன்றே இப்பூ
வுலகத்துக்(கு) என்றும் இறை (இ)



கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்                                    [01:02]

விளக்கக் குறள் :
கற்றும் இறைவன் அடித்தொழார்; எல்லாம்
அறிந்தும் அறியா தவர் (அ)

கற்றறிந்தும் மூத்தோர் பணியார்; அனைத்தும்
அறிந்தும் பயனொன்றும் இல் (ஆ)



மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்                                        [01:03]

விளக்கக் குறள் :
மலர்மனம் வாழுமிறைத் தாளடி சேர்ந்தார்
உலகில் நிலைத்துவாழ் வார்

மலர்போல் பரந்தஇறைத் தாளடி சேர்ந்தார்
உலகில் நிலைத்துவாழ் வார்



வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல                                      [01:04]

விளக்கக் குறள் :
பற்றற்ற ஆண்டவன் நற்பாதம் சேர்ந்தார்க்கு
முற்றும் இடையூறு இல



இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு                       [01:05]

விளக்கக் குறள் :
அறியாமை ஆசை அணுகாது; ஆண்டவனின்
அர்த்தம் புரிந்தார் வசம்                                    (அ)
பொருளாசை காரிருள் அண்டாது; நற்கடவுள்
பொருள்தம்முள் ஏற்றார் இடம்                       (ஆ)



பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்                                  [01:06]

விளக்கக் குறள் :
ஐம்புலன் ஆட்கொண்ட ஆண்டவனைப் பின்தொடர்வார்
வாழ்வு நிலைக்கும்என் றும்



தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது                               [01:07]

விளக்கக் குறள் :
தனக்கிணை இல்லா இறைத்தாள்ப் பணியாதார்
துன்பம் களைதல் அரிது



அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறஆழி நீந்தல் அரிது                                            [01:08]

விளக்கக் குறள் :
அறக்கடவுள் தாள்சேரா(து); இப்பிறவி ஆழ்கடல்
சற்றும் கடத்தல் அரிது



கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை                                       [01:09]

விளக்கக் குறள் :
இருந்தும் இயங்காப் புலனாம்; இறைத்தாள்
விரும்பி வணங்காத் தலை



பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்                                        [01:10]

விளக்கக் குறள் :
பிறவிப் பெருங்கடல் நீந்திக் கடக்கார்;
இறைவன் அடித்தொடரா தார்

பங்களிப்பாளர்கள்

துரை. ந. உ மற்றும் Dev

இப்பக்கம் கடைசியாக 26 மே 2010, 14:40 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 6,140 முறைகள் அணுகப்பட்டது.